நம்முடைய ஜீவனுள்ள நாளெல்லாம் 59-06-12 1. [சகோதரன் போஸ் அவர்கள் சகோதரன் பிரன்ஹாமை அறிமுகப்படுத்துகிறார் - ஆசிரியர்.) (அது மிகவும் அருமையானது என்று நினைக்கிறேன். உமக்கு நன்றி. ஆமாம். உமக்கு நன்றி. ஆமாம், நான்... உமக்கு மிகவும் நன்றி...-? தேவன் உம்மையும் கூட ஆசீர்வதிப்பாராக. உமக்கு நன்றி.) உமக்கு நன்றி. நீங்கள் உட்காரலாம். இந்த சிகாகோ கன்வென்சன் கூட்டத்தில், இங்கேயிருக்கும் இந்த நிர்வாகக்குழுவின் மூலமாக கிடைத்த அருமையான வரவேற்பை நான் நிச்சயமாகவே பாராட்டுகிறேன். மேலும் சகோ.சுலிவன் அவர்கள், நான் அடுத்த வருடம் ஓஹியோவில், அவருடைய இடத்தில், அங்கே நடக்கும் அடுத்த கன்வென்சன் கூட்டத்தில் கலந்து கொள்வீர்களா என்று இக்காலையில் என்னைக் கேட்டுக் கொண்டார். கர்த்தருக்குச் சித்தமானால், நான் அதைச் செய்வதில் சந்தோஷமாய் இருப்பேன் என்று நான் அவரிடம் கூறினேன். நாங்கள் அப்படியே.... நிச்சயமாகவே, தினமும் என்ன நடக்கும் என்பது நமக்கு ஒரு போதும் தெரியாது. நாங்கள் வெறுமனே... நாங்கள் எப்போதுமே, அது கர்த்தருடைய சித்தமாக இருக்குமானால்...” என்று கூறுகிறோம். ஆனால் இது எனக்கு உண்மையான ஆசீர்வாதமாக இருந்து வருகிறது. 2. நான் உங்களிடம் சொல்லிக் கொண்டிருந்தது போன்று, சமீபத்தில் நான் ஜெபிக்கப் போயிருந்த என்னுடைய குகையில், நான் பரிசுத்த ஆவியானவரை சந்தித்தேன். (அவர் இந்த போன்களை சரிசெய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறார் என்று நம்புகிறேன். அவர்கள் அங்கே கொஞ்சம் இடமாற்றத்தைப் (transposition) பெற்று இருக்கிறார்கள், என்ன.... அது தான் அது என்று நினைக்கிறேன்.) நான் வழக்கமாக பொது சேவை நிறுவனத்திற்காக வேலை செய்திருக்கிறேன் என்பதை நான் அறிவேன், நாங்கள் மூன்று கட்டங்களை உடைய கம்பியை (three phases of wire) அசைக்கும் போது, நாங்கள் ஒரு இடமாற்றம் என்று அதை அழைப்போம், நாங்கள் ஒரு கட்டத்திலிருந்து சரியாக வலக்கை கட்டத்திற்கோ (right hand phase) இடக்கை கட்டத்திற்கோ குறுக்காக அதை அசைப்பதன் மூலமாக நாங்கள் அதை இடமாற்றினோம். நாங்கள் அதை ஒரு இடமாற்றம் (transposition) என்று அழைப்போம். அதுதான் அங்கே சம்பவித்திருந்தது என்று நினைக்கிறேன். சத்தம் இடமாறுதல். ஆனால் நாங்கள் இங்கே இருப்பதில் மிகவும் சந்தோஷமாய் இருக்கிறோம். 3. பில்லி எப்படியாக சற்று முன்பு, மேலே ஓடி வந்து, என்னிடம் கூறினான், அவன், "அப்பா, அவர்கள் உமக்கு ஒரு காணிக்கையை எடுத்திருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி கூறுங்கள்,” என்று கூறினான். நல்லது, நான் எனது முழு இருதயத்தோடும் உங்களுக்கு நன்றி கூறுகிறேன். அதைச் செய்ய வேண்டாம் என்று நான் ஜோசப் அவர்களிடம் கூறினேன். அவரோ.... அவர்கள் அதைச் செய்கிறார்கள், ஆனால் அது நிச்சயமாகவே சரியாக இப்பொழுதே உபயோகப் படுத்தப்பட முடியும், ஏனென்றால் எனக்கு மிக அதிக தேவையுள்ளது. நீங்கள் அறிந்துள்ளபடி, நான்... சமீபத்தில் 5000 டாலர்கள் கடன் வாங்கினேன். பிறகு நான் அதைக் கொடுப்பதற்கு முன்பே, வேறு 5000 டாலர்கள் கடன் வாங்க வேண்டியிருந்தது. நான் என்ன கூற வருகிறேன் என்று உங்களுக்குத் தெரியும். மேலும் நான்... ஆனால் நான் காணிக்கை எடுக்க வேண்டிய எனது முதலாவது காணிக்கையை இன்னும் பெற்றிருக்கிறேன். ஆனால் ஒருக்கால், கர்த்தர் கொடுப்பாரானால், நான் மீண்டுமாக அதிவிரைவில் சொந்தமாகவே அதைக் கொடுக்க வேண்டும். நான் பிரன்ஹாம் கூடாரத்தின் ஒரு காரியஸ்தனாக (agent) இருக்கிறேன். நான் எந்தப் பணத்தையும் எடுக்கா விட்டால், எப்படி நான் ஜீவிக்கிறேன் என்று நீங்கள் எல்லாரும் வியப்பு அடையலாம். நான் கூடாரத்திலிருந்து சம்பளம் பெறுகிறேன், அது வாரத்திற்கு 100 டாலர்கள் எனக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது (lotted) என்று நம்புகிறேன். நான் அதைப் பெற்றுக்கொண்ட பிறகு, நான் வாரத்திற்கு ஏறக்குறைய 73 டாலர்கள் பெற்றுக் கொள்கிறேன். அதைக் கொண்டு தான் நான் ஜீவிக்கிறேன். மேலும் எனவே... ஆனால் இல்லையெனில், அது பிரன்ஹாம் கூடாரம் என்று அழைக்கப்படும் ஒரு தொண்டு நிறுவனத்திற்கு (foundation) செல்கிறது, அதற்கு மாத்திரமே செலவழிக்கப்பட முடியும், அந்தக் கூடாரத்திற்காக அல்ல, ஆனால் இங்கே வெளியே நடக்கும் ஆராதனைகளுக்காக. அவ்விதமாகத் தான் நான் அதை விரும்புகிறேன். சிறிது காலத்திற்கு முன்பு வரையில், நான் ஒரு போதும் ஒரு சம்பளமும் எடுத்ததில்லை. சில சமயங்களில், அவ்வளவு அதிகமாக அதை உபயோகிக்கக்கூட இல்லை. ஆனால் இப்பொழுது, நான் கூடாரத்திலிருந்து கிடைக்கும் சம்பளத்தின் பேரில் இருக்கிறேன். 4. எனது தொண்டு நிறுவனத்திற்காக அந்த எண்ணிக்கையைப் பெற்றுக் கொள்ளாமல் இருப்பதன் மூலமாக, நான் சிறு சிக்கலுக்கு உள்ளானதால், அவர்கள் நினைக்கிறார்கள்... ஒரு சபையாக இருந்து, எனக்கு அது தேவை என்று நான் நினைக்கவில்லை, ஆனால் எனக்கு அது தேவை என்று அவர்கள் கூறினார்கள். மேலும் எனவே, அங்கே தான் அந்த தொந்தரவு எழும்புகிறது. நான் இப்பொழுது அனுப்பி இருக்கிறேன், ஒரு தொகையை நான் பெற்றுக் கொள்கிறேன், எல்லாமே அருமையாக இருக்கும். வரிகளுக்காகவும் மற்றவைகளுக்காகவும், ஒரு வாரத்திற்கு, அது வெளியே எடுக்கப்பட வேண்டியிருந்த காரியங்களை அவர்கள் வெளியே கொண்டு வந்த போது, நான் ஒரு வாரத்திற்கு ஏறக்குறைய 73 டாலர்கள் சம்பளத்தை எடுத்துக் கொள்கிறேன். மீதியான மற்ற பணங்கள் எல்லாமே சுவிசேஷ வேலைக்கு மாத்திரமே போகிறது. நான் அதைத் தொடுவதில்லை, ஒரு போதும் அதில் எதையும் தொடுவதில்லை. சபையானது ஒரு காசோலையை எனக்குக் கொடுக்கிறது, அவ்வாறு தான் நாங்கள் ஜீவிக்கிறோம். எங்களுக்குப் பெரிய குடும்பம் உண்டு. அது... என்னவென்று உங்களுக்குத் தெரியும். நீங்கள் மிகவும் செலவு உள்ளவர்களாய் ஜீவிப்பதில்லை, அல்லது வியாதியஸ்தருக்கான அழைப்புகளுக்காகவும் மற்ற எல்லாவற்றிற்காகவும் மிக அதிகமாக ஜீவிப்படு இல்லை, அதன் பிறகு வாரத்திற்கு 73 டாலர்கள். 5. ஆனால் ஆராதனைகளில், நான் ஏறக்குறைய.... க்கு உட்பட்டவனாய் இருக்கிறேன். என்னுடைய சுகமளிக்கும் ஆராதனைகளில், நான் வியாதியஸ்தருக்காக ஜெபிப்பேன் என்றால், அது மிகவும் நன்றாக இருக்கும் என்று நான் கவனித்துக் வந்திருக்கிறேன். மேலும் நான்.... நிறைய பகுத்தறிதல்கள், இங்கே கடந்த சாயங்காலத்தில், அது என் மேல் விடப்பட்டது. ஆனால் அதில் பெரும்பாலானவற்றை இந்த தனிப்பட்ட பேட்டிகளில் தான் உபயோகிக்கிறேன். அது மிகவும் அதிகமாக இருப்பதை கண்டு கொள்கிறேன், ஏனென்றால் நானே ஒரு நபராக இருக்கிறேன். மேலும் பிறகு, திரு.மெர்சியர், வீட்டில் பதிலளிக்கும் ஆராதனையை உடைய மனிதனாக அவர் இருக்கிறார். ஜனங்கள் வர விரும்பும் போது, வெளியேயிருக்கிற விதமாக வார்த்தையை அவர்களால் - அவர்களால் காண முடியாது.... நாங்கள் அவர்களுக்கு முன்பாக இருந்து, கர்த்தரிடம் ஜெபிக்கிறோம். ஒரு வியாதியஸ்தரை நாங்கள் பெற்றுக் கொள்ளும்போது, அது நேர்மறையாக தீர்வு காணப்படும் வரையில், சரியாக அந்த வியாதியஸ்தரின் பேரிலேயே தரித்திருக்கிறோம். பாருங்கள்-? அப்படியே தொடர்ந்து சரியாக அதிலேயே இருக்கிறோம். நாங்கள் ஒருபோதும் அதை விட்டு விடுவதில்லை. நாங்கள் அதைக் குறித்த ஒரு பட்டியலை தயாரித்து, அதை தூரமாக வைக்கிறோம், அந்த வியாதியஸ்தரை திரும்பவும் வைத்துக் கொண்டு, கர்த்தர் அவர்களை வெளியே கொண்டு வரும் மட்டுமாக, தொடர்ந்து தொடர்ந்து வருகிறோம். அது பிறகு இருக்கும் என்று நினைக்கிறேன், ஒருக்கால் நான் என்னுடைய எல்லா ஆராதனைகளையும் அவ்விதமாக நடத்துகிறேன். ஜெப ஆராதனைகளும் கூட்டங்களும் அப்படியே ஜனங்களை அதனூடாகக் கொண்டு வந்து, அவர்களுக்காக ஜெபிக்கப்படுகிறது. அப்போது அவர்களால் அதைப் புரிந்து கொள்ள முடியாமல், அவர்களுடைய சுகத்தை தவறவிட்டு விட்ட.., அங்கே ஏதாகிலும் கடினமான நோயாளி இருந்தால், அவர்களை தனிப்பட்ட பேட்டிகளில் வைக்கிறோம், எனவே நான் அவர்களை தனியாகப் பெற்றுக் கொள்ள முடியும். அந்த விதமாகவே, நிறுத்துவதைக் காட்டிலும் சிறிது மேலானதாக அது இருக்கிறது, இங்கே இரவு நேரத்திலோ, அல்லது ஏதோவொன்றிலோ அரை டஜன் பேர் ஊடாக அது போகிறது. பெரும்பாலும் தேசத்தினூடாக உள்ள ஒவ்வொருக்கும் என்னைத் தெரியும், அவர்கள் ஊழியத்தை அறிந்திருக்கிறார்கள். இப்பொழுது, நீங்கள் வெளிநாடுகளுக்குப் போகும் போது, அப்போது அது அங்கே வித்தியாசமாக இருக்கும். நாம் இங்கே செய்த விதமாக அதன் பேரில் நாம் தொடர்ந்து செய்ய முடியும். 6. நான் நினைப்பது என்னவென்றால், கர்த்தருக்குச் சித்தமானால், என்னுடைய ஊழியத்திலேயே மிக மிகச்சிறந்த பாகம் சரியாக எனக்கு முன்னால் இருக்கிறது என்ற உறுதி எனக்கு உண்டு என்று நான் நம்புகிறேன். நான் அதை என்னுடைய முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறேன். நான் இனி மேல் பையன் அல்ல, உங்களுக்குத் தெரியும், எனவே.... நான் ஒரு... ஆக இருந்தேன். எனக்கு சமீபத்தில் பிறந்த நாள் இருந்தது... அது ஏப்ரல் 6-ம் தேதி.... நாம் பார்ப்போம், தேனே, நான் ஒரு... ஆக இருந்தேன். நான் 25 வயதைக் கடந்து விட்டேன், இல்லையா. நான் 1909-ல் பிற்தேன், எனவே நான் வெறுமனே கொஞ்சம் 25-க்கு மேலான வயது கொண்டவனாய் இருக்கிறேன் என்று யாருக்கும் தெரியும், எனவே.... எனவே, நான் ஒரு பையன் அல்ல. ஆனால், உங்களுக்குத் தெரியும், இதெல்லாம் எதைப் பற்றியது என்பதை உணரத் தொடங்க நீங்கள் உங்கள் மேல் கொஞ்சம் வயதைப் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம், நான் அந்தவிதமாக உணருகிறேன். உங்களுடைய அருமையான ஒத்துழைப்புக்காகவும், உங்கள் அன்பு மற்றும் இரக்கத்திற்காகவும், நேராக தருமகர்த்தாக்களிடம் எடுக்கப்பட்டு, சரியாக அந்த தொண்டு நிறுவனத்திற்குள் வைக்கப்படும் இந்த அன்பின் காணிக்கைக்காகவும் சகோதரர்களாகிய உங்களுக்கு நான் நன்றி கூற விரும்புகிறேன். அதெல்லாமே, ஒவ்வொரு காசும் (penny), தேவனுடைய இராஜ்யத்திற்கென்றே, கடல் கடந்த வெளிநாட்டு மிஷன் ஊழியங்களுக்காகவும், அது சரியாகவே போகும் என்று நான் அறிந்திருக்கிற காரியங்களுக்காகவுமே செலவு செய்யப்படும். அது சரியாகப் போயாக வேண்டும். எனவே, நான் அதை அந்த விதமாகவே விரும்புகிறேன். நான் - வேறு எந்த வழியிலும் நான் அதைக் கொண்டிருக்க மாட்டேன். அந்த விதமாகத்தான் நான் அதை விரும்புகிறேன். 7. இப்பொழுது நாளை, காலையில், முழு சுவிசேஷக வர்த்தக புருஷர்களின் காலை உணவுக்கூட்டம் எட்ஜ்வாட்டர் பீச்சில் (Edgewater Beach) இருக்கிறது. அப்படியே அந்த பெயரே எனக்கு நடுக்கத்தை ஏற்படுத்துகிறது. அது - அது நிறைய பணத்தைப் போன்று ஒலிக்கிறது என்று உங்களுக்குத் தெரியும், அங்கே உள்ளே போவதற்கு நிறைய செலவாகிறது போன்று. மேலும் எனவே நான்.... கர்த்தருக்குச் சித்தமானால், காலையில், காலை உணவில் நாங்கள் அங்கே இருப்போம். கர்த்தர், ஊழியக்காரர்களுக்கான காலை உணவுக்கூட்டத்தில், இந்தக் காலையில் செய்தது போன்று, அவர் நம்மை ஆசீர்வதிக்க வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். பிறகு நாளை இரவில், சகோதரன் ஆஸ்பார்ன் படக்காட்சி இங்கே இந்தப் பட்டணத்தில் காட்டப்படும் என்பதாக அவர்கள் அறிவிப்பு கொடுத்டு இருக்கிறார்கள். நான் தூரமாகப் போகிறேன், அநேக மைல்கள் போகிறேன், ஹம்மண்டைச் சுற்றிலும் அங்கே இருக்கும் ஒரு சிறிய சபையிடம் வேறுமனே பிரசங்கம் பண்ணச் செல்கிறேன். எந்த சுகமளிக்கிற ஆராதனையும் கிடையாது, வெறுமனே பிரசங்கம் பண்ணும்படி, ஒரு சிறிய முப்பது நிமிட ஆராதனை அல்லது ஏதோவொன்று, அதன் பிறகு திரும்ப வருவேன். அது இருக்கலாம், அல்லது சற்று ஓய்வு எடுக்க திரும்பி வருவேன். 8. அதன் பிறகு ஞாயிறு பிற்பகலில், நானே அந்தப் படக்காட்சியைக் காண நோக்கமாய் இருக்கிறேன். எனவே, நீங்கள் நாளை இரவில் இங்கே சுற்றிலும் இருப்பீர்களானால், சகோதரன் ஆஸ்பார்னின் படக்காட்சியைப் போய்ப் பாருங்கள். இரவு நேரத்தில் அதைக் காண்பது எப்போதுமே சிறந்தமாக இருக்கிறது, ஏனென்றால் அப்போது அறையில் இருள் இருக்கும், அப்படியானால் அது ஒரு சிறந்த படக்காட்சியைக் காண்பிக்கிறது. அதன் பிறகு ஞாயிறு இரவில், சகோ.ஜோசப் அவர்களுக்காக, பிலதெல்பியன் சபையானது ஒரு சிறிய பிரியாவிடைக்காக பண உதவி செய்திருக்கிறது, அவர் கடல் கடந்து போகிறார். அது அதே கட்டிடத்தில் நடக்கும். அது பள்ளி - அது லேக்வியூ உயர்நிலைப்பள்ளி அரங்கம் என்று நம்புகிறேன், இங்கே சற்று கீழே இருக்கும் பார்க் வீதி, இர்விங் பார்க், மற்றும் தேசிய அவென்யூ. சரி. அது ஞாயிறு மாலை 7:30 மணிக்கு நடைபெறும். கர்த்தருக்குச் சித்தமானால், நான் வியாதியஸ்தருக்காக பேசவும் ஜெபிக்கவும் செய்வேன். நான் ஆஸ்திரேலியாவுக்கும் வித்தியாசமான இடங்களுக்கும் கடல் கடந்து போவதற்கு முன்பாக நான் ஒரு சில நாட்கள் தாமதப்படுத்திக் கொண்டு இருக்கிறேன், அங்கே எனக்காக யுத்தம் காத்துக் கொண்டிருக்கிறது என்பதை அறிவேன்: அவர்கள் ஓரல் ராபட்ஸ் அவர்களுக்கு என்ன செய்தனரோ, அங்கே அவர்கள் பில்லி கிரஹாமுக்கு என்ன செய்தனரோ, என்னுடைய நேரமும் வந்து கொண்டிருக்கிறது என்பதை அறிவேன். ஆனால் நியாயத்தீர்ப்பின் நாளிலே சுவிசேஷத்தின் எனது பாகத்தில் அதை வைக்க விரும்புகிறேன். பாருங்கள்-? எனது சகோதரர்கள் அங்கு சென்று அவர்களுடைய பாகத்தைச் செய்தார்கள்; எனது பாகத்தைச் செய்ய போவது என்னுடைய கடமையாக இருக்கிறது. அப்போது அவர்கள் அதைப் புறக்கணிப்பார்களானால், அப்படியானால் தேவன் நீதியுள்ள ஒரு தேவனாக இருக்கிறார். அவர் எப்போதுமே நியாயத்தீர்ப்புக்கு முன்பாக இரக்கத்தைக் காண்பிக்கிறார். நான் அங்கு போகையில், எனக்காக ஜெபிக்கப்பட வேண்டுமென்று இந்தக் குழுவின் ஜெபங்களை என்னால் வேண்டிக் கேட்க முடியும் என்ற நிச்சயம் உடையவனாய் இருக்கிறேன். 9. இப்பொழுது, நாம் அவருடைய வார்த்தையைத் திறப்பதற்கு, அல்லது அதை வாசிப்பதற்கு முன்பாக, ஒரு சிறு ஜெபத்திற்காக நாம் நம்முடைய தலைகளைத் தாழ்த்துவோம், அப்பொழுது அவரால் அதை நமக்குத் திறக்க முடியும். கிருபையுள்ள கர்த்தாவே, நாங்கள் இப்பொழுது தைரியமாக உமது பிரசன்னத்திற்குள் வருகிறோம், இன்னமாக தாழ்மையோடும் வருகிறோம், எங்களுக்கு எந்த மேன்மையும் கிடையாது என்பதை உணர்ந்து கொள்கிறோம், நாங்கள் தைரியமாக இந்த வழியில் வரக்கூடிய எந்த தகுதிகளும் எங்களுக்குக் கிடையாது என்பதை உணருகிறோம். ஆனால் கிருபையின் சிம்மாசனத்து அண்டையில் தைரியமாய் வரும்படி நாங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிற காரணத்தினால் உமது பிரசன்னத்திற்குள் தைரியமாக வருகிறோம். வரும்படி எங்களுக்கு உத்தரவு இட்டுள்ள கர்த்தராகிய இயேசுவாகிய அவருடைய நாமத்தில் நாங்கள் வருகிறோம். மேலும் தேவனே, நீர் எங்கள் ஜெபங்களுக்கு பதிலளிக்க வேண்டுமென்று நாங்கள் ஜெபிக்கிறோம். எங்கள் இருதயம் எங்களைக் குற்றவாளி என்று தீர்க்காவிட்டால், தேவன் அதைக் கேட்டருளுவார் என்ற ஆசீர்வதிக்கப்பட்ட அந்த உறுதியை நாங்கள் உடையவர்களாய் இருக்கிறோம். எங்களுடைய ஜீவியங்களில் எங்களைக் குற்றவாளியாகத் தீர்க்கிற ஏதாவது காரியம் அங்கே இருக்குமானால், அப்படியானால் கர்த்தாவே, எங்களுக்கு விரோதமாக அக்கிரமம் செய்தவர்களை நாங்கள் மன்னிப்பது போல, எங்களுடைய அக்கிரமங்களையும் முதலில் எங்களுக்கு மன்னித்தருளும். ஏனென்றால், வரும்படி எங்களிடம் சொல்லியிருக்கிற அவர், "நீங்கள் ஒவ்வொரு மனிதருடைய தப்பிதங்களையும், உங்கள் இருதயத்திலிருந்து மன்னிக்காவிட்டால், உங்கள் பரலோகப் பிதாவும் அப்படியே உங்கள் தப்பிதங்களை மன்னிக்க மாட்டார்,” என்று சொல்லி இருக்கிறார் என்று நாங்கள் அறிந்திருக்கிற காரணத்தினால். ஆகையால், நீங்கள் ஜெபம் பண்ணும் போது, நீங்கள் நின்று ஜெபம் பண்ணும் போது, மன்னியுங்கள், என்று அவர் சொல்லி இருக்கிறார். கர்த்தாவே, எனக்கு இந்த உலகத்தில் எந்த இடத்திலாகிலும் ஒரு சத்துரு இருப்பான் என்றால், தேவனே, எங்கள் இருவரையும் நீர் மன்னிக்க வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். நாங்கள் இராஜ்யத்தில் பிரவேசிக்க போராடுகிற மனிதர்களும் மானிடர்களுமாய் இருக்கிறோம். 10. மேலும் இன்றிரவு உமது வார்த்தையின் வழியாக நீர் பேசி, எங்களுடைய இருதயங்களுக்கும் சிந்தைகளுக்கும் அதை ஒரு ஜீவிக்கிற வார்த்தையாக ஆக்கும்படி நான் வேண்டிக் கொள்கிறேன். அதன் பிறகு கர்த்தாவே, முடிந்து கொண்டு இருக்கும் இந்த கன்வென்சன் கூட்டத்திற்காக நாங்கள் ஜெபிக்கிறோம், இது எங்கள் எல்லாருக்கும் எதை அர்த்தப்படுத்தினது என்பதற்காக நாங்கள் உமக்கு நன்றி கூறுகிறோம். தேவனே, எங்கள் இருதயங்களுக்குள் விதைக்கப் பட்டிருக்கிற விதைகள், அது வளர்ந்து வளர்ந்து வளர்ந்து கொண்டேயிருப்பதாக. இந்தக் கூட்டத்திற்காக ஒன்றுகூடி வந்திருக்கிற இந்த மனிதர்களையும் இந்த அருமையான சகோதரர்களையும் ஆசீர்வதியும் - அவர்களுடைய மனைவிகளை யும் சகோதரிகளையும், மற்றவர்களையும், உமது பிள்ளைகளையும் ஆசீர்வதியும். எங்கள் எல்லாரையும் மேலான கிறிஸ்தவர்களாக ஆக்கி அருளும், இந்த வரவிருக்கிற வருடத்தில் எங்கள் அனைவரையும் உமது சேவைக்காக இன்னும் அதிகமாக தகுதிபடுத்தி அருளும். கர்த்தாவே, எனது சகோதரர்கள் வியாதிப் பட்டவர்களுக்காகவும் தேவையுள்ளவர்களுக்காகவும் ஜெபிக்க வரும் போது, எனது சகோதரர்களுக்காக ஜெபத்திற்குப் பதிலளித்தருளும். ஓ கர்த்தாவே, அவர்களைக் கேட்டருளும். ஒரு நாள் சாலமோன், உமது ஜனங்கள் தொல்லையில் அகப்பட்டு, இந்த பரிசுத்த ஸ்தலத்தை நோக்கித் திரும்பி, ஜெபிப்பார்களானால், பரலோகத்திலிருந்து அதைக் கேட்டருளும்,” என்று சொன்னான். கர்த்தாவே, அவர்கள் பரலோகத்தை நோக்கி தங்கள் முகத்தைத் திருப்பி, ஜெபிக்கும் போது, அதைக் கேட்டருள வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன், கர்த்தாவே; அவர்களுடைய ஜெபங்களுக்குப் பதிலளியும். அவர்களுடைய ஊழியம் இவ்வருடம் வளர்ந்து, அந்த சபைகள் வல்லமையிலும், எண்ணிக்கையிலும், தேவனுக்கு முன்பாக தயவிலும் அதிகரிப்பதாக. எங்கள் மத்தியில் இருக்கிற வியாதியஸ்தர்களை நீர் சுகப்படுத்த வேண்டும் என்று இன்றிரவு நாங்கள் ஜெபிக்கிறோம். இரட்சிக்கப்பட வேண்டியவர்களாய் இங்கே இருப்பவர்களை இரட்சித்தருளும். நீதியின் பேரில் தாகமாய் இருப்பவர்களை, பரிசுத்த ஆவியினால் நிறைத்தருளும். சாவுக்குரிய உதடுகள் மூலமாக பேசி, காதுகள் வழியாகக் கேட்கட்டும். நாங்கள் இதை இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 11. [யாரோ ஒருவர் அந்நிய பாஷைகளில் பேசி, வேறொருவர் அர்த்தம் உரைக்கிறார் - ஆசிரியர்.) ஆமென். கர்த்தருக்கு நன்றி. ஆமென். சமீபத்தில் நீங்கள் அதைக் கவனித்தீர்களா... நான் நடத்திக் கொண்டிருந்த கூட்டங்களிலும், சுற்றிலும் எல்லா இடங்களிலும், நாடு முழுவதும், கியூபாவிற்குள்ளும், கீழே தீவுகளுக்குள்ளும், ஒரு அர்த்தம் (interpretation) வருகிற ஒவ்வொரு முறையும், அது எப்போதுமே, "நீங்கள் எனது வார்த்தையை விசுவாசிப்பீர்களானால்...” என்றே இருக்கிறது. பாருங்கள்-? அதை விசுவாசியுங்கள். ஓ, "நான் திரும்பி வரும் போது, விசுவாசத்தைக் காண்பேனா-?" என்று இயேசு கேட்ட கேள்வியும் அது தான். அவர், "நான் சபைகளைக் காண்பேனோ, நான் மதத்தைக் காண்பேனா." என்றோ கூறவில்லை, ஆனால், "விசுவாசத்தைக் காண்பேனா-?” என்றே கூறினார்... கூட இல்லை. அவர் நேர்மையைக் கேள்வி கேட்கவில்லை, ஆனால் அவர் விசுவாசத்தைத்தான் கேள்வி கேட்டார். இப்பொழுது, அந்நிய பாஷைகளுக்கு அர்த்தம் உரைக்கும் வரத்தின் மூலமாக பேசியிருக்கிற கர்த்தர் தாமே, அவர் தாமே தமது ஆவியை இன்றிரவு இக்கட்டிடத்திற்குள் அசைவாடும்படி செய்து, ஒவ்வொருவருக்கும் விசுவாசத்தைக் கொடுப்பாராக. 12. நான் இப்பொழுது ஒரு பாடத்திற்காக பரிசுத்த லூக்கா புத்தகத்தின் முதலாம் அதிகாரம், 73-ம் வசனம் தொடங்கி வாசிக்கிறேன். இன்றிரவு என்னுடைய பாடம் என்னவெனில், "நம்முடைய ஜீவனுள்ள நாளெல்லாம்" என்பதாகும். (லூக்கா 1:71-72) உங்கள் சத்துருக்களின் கைகளினின்று நீங்கள் விடுதலையாக்கப்பட்டு, உயிரோடிருக்கும் நாளெல்லாம் பயமில்லாமல் எனக்கு முன்பாகப் பரிசுத்தத்தோடும் நீதியோடும் எனக்கு ஊழியஞ்செய்யக் கட்டளை இடுவேன் என்று, (ஆங்கில வேதாகமத்தில், "நம்முடைய சத்துருக்களின் கையினின்று விடுதலை ஆக்கப்பட்டு, நம்முடைய ஜீவனுள்ள நாளெல்லாம் பயமில்லாமல் அவருக்கு முன்பாக பரிசுத்தத்தோடும் நீதியோடும் ஊழியஞ்செய்யக் கட்டளை இடுவேன்," என்று எழுதப்பட்டுள்ளது - மொழிபெயர்ப்பாளர்.) அவர் நம்முடைய பிதாவாகிய ஆபிரகாமுக்கு இட்ட ஆணையை நிறைவேற்றுவதற்கும்; “நம்முடைய ஜீவனுள்ள நாளெல்லாம்,” என்பதை நான் விரும்புகிறேன். 13. நாம் கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளும் போது, அது வெறும் ஒரு சில மணி நேரங்களுக்காகவோ அல்லது வெறுமனே அந்த எழுப்புதலின் நேரத்திற்காகவோ அல்ல, ஆனால் அது நம்முடைய ஜீவிய நாட்கள் எல்லாம் நீடித்திருப்பதற்கே நாம் கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளுகிறோம். அந்தக் கூட்டத்திற்கு கூட போவதற்கு முன்பு, கிறிஸ்துவிடம் வருகிற ஒவ்வொரு நபரும் முதலில் உட்கார்ந்து சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். "தேவன் என்னை அழைப்பாரென்றால், நான் ஆயத்தமாயிருக்கிறேனா-? அவர் இன்றிரவு என்னுடைய இருதயத்தில் பேசுவாரானால், நான் எழுந்து நின்று என்னுடைய ஜீவியம் முழுவதையும் அவருக்கு ஒப்புவிக்க நான் ஆயத்தமாயிருக்கிறேனா-?” என்று ஆழ்ந்து சிந்தித்துப் பார்க்க வேண்டும். நீங்கள் உங்கள் ஜீவியம் முழுவதையும் கொடுக்கும் போது, அவர் உங்களை ஏற்றுக் கொள்வார் என்பதற்கு அது ஒன்றே வழியாகும். மனிதன் தன்னுடைய சொந்த வழியைக் கொண்டிருப்பதற்கே நாடுகிறான். மனிதன் காரியங்களைச் செய்ய விரும்புகிறான் - ஆனால் தன்னுடைய சொந்த வழியிலேயே அதைச்செய்ய விரும்புகிறான். அவனுடைய விழுகைக்குப் பின், வெறுமனே ஒரு சில நிமிடங்களிலே அவன், அதைக் காண்பித்து விட்டான். ஏதேன் தோட்டத்தில், அவன் தன்னுடைய சொந்த வழியிலேயே அதைச் செய்ய விரும்பினான். காரணம் என்னவென்றால், மனிதன் தன்னுடைய சொந்த வழியில் அதைச் செய்து கொண்டிருக்கிற காலம் வரையில் அவன் எப்போதுமே அதைக் குறித்து திருப்தியடைந்து விடுகிறான். 14. நீங்கள் வேறு யாரோ ஒருவரோடு காரை ஓட்டிக் கொண்டு செல்லும் போது, நீங்கள் எப்பொழுதாவது அதைக் கவனித்ததுண்டா-? அவர்கள் அப்படியே நிறைய தவறுகளை செய்கிறார்கள். நீங்கள் ஏறக்குறைய அந்த காரின் தரையில் (உதைத்து) மற்ற பக்கத்தில் தள்ளிச் சென்று, நீங்களாகவே அந்தக் காரை நிறுத்த முயற்சி செய்கிறீர்கள். நீங்கள் உங்கள் மனதில், “நல்லது, அவர் ஏன் அதைச் செய்தார்-?” என்றோ அல்லது, "அவர் ஏன் இந்தவிதமாகத் திருப்பினார்-? நான் அதை இன்ன இன்ன விதமாக செய்திருப்பேன்,” என்றோ கூறுகிறீர்கள். பாருங்கள், அது அப்படியே மனிதனுடைய சுபாவமாய் உள்ளது. அவன் தன்னுடைய சொந்த வழியையே விரும்புகிறான். மனிதன் தன்னுடைய சொந்த வழியை வாஞ்சிக்க வேண்டும் என்பதற்காக தேவன் மனிதனை உண்டாக்கவில்லை. மனிதன் தம்மையே சார்ந்து கொள்ள வேண்டும் என்றும், தன்னுடைய வழியை விட்டு விட வேண்டும் என்றும், தன்னுடைய வழியை சிலுவையில் அறைந்து விட வேண்டும் என்றும் தான் தேவன் மனிதனை உண்டாக்கினார். அவர் நம்மை செம்மறியாடுகளுக்கு ஒப்பிட்டார். தனது சொந்த வழியை கண்டுபிடிக்க முடியாத ஒரு மிருகம் தான் செம்மறியாடாகும். அது கட்டாயம் வழிநடத்தப்பட வேண்டும். ஒரு சிறு செம்மறி ஆட்டுக்குட்டியானது தானாகவே மந்தையிலிருந்து வழிதவறிப் போகக் கூடுமானால், அது அப்படியே முற்றிலுமாக வழிதவறிப் போய் விடும். அது அப்படியே அங்கேயே நின்றபடி சத்தமிட்டுக் கொண்டிருக்கும். மனிதனோடும் காரியம் அந்தவிதமாகத் தான் இருக்கிறது. அவன் ஒரு ஆட்டுக் குட்டியாகி, அவனுடைய சுபாவமானது மாறினால், அவன் முழுவதுமாக தேவன் மேலும், தேவனுடைய வழிநடத்துதலின் சார்ந்திருக்கிறான். ஆனால் அந்த பூமிக்குரிய மனிதனோ, ஆதாம் தான் அந்த உயர்ந்த நிலையிலிருந்து விழுந்து போய் விட்டிருந்ததை உணர்ந்த போது, (அவன் அந்த உயர்ந்த நிலையில் இருந்த போது, அவன் முழுவதுமாக தேவனையே சார்ந்து கொள்ளும்படியாக தேவன் அவனை வைத்திருந்தார்), ஆதாம் விரைவாக அவனுடைய இரண்டாவது சுபாவத்தை, அவனுடைய விழுந்து போன சுபாவத்தைக் காண்பித்து விட்டான். அவன் திரும்பிச் சென்று, மீட்கப்பட வேண்டிய ஒரு வழியை விரும்பினான், ஆனால் அவன் அதைத் தன்னுடைய வழியில் செய்ய விரும்பினான், அவன் தன்னுடைய சொந்த எண்ணத்தின் பிறகே (சென்று) அதைச் செய்ய விரும்பினான். 15. சபை இதைப் புரிந்து கொள்ளும் என்று நான் நம்புகிறேன்: காரியங்களைக் குறித்து நாம் நம்முடைய சொந்த சிந்தையை உபயோகிக்க நமக்கு எந்த உரிமையும் கிடையாது. நாம் கிறிஸ்தவர்களாக ஆகும் போது, நம்முடைய ஒவ்வொரு சிறு அறிவாற்றல்களையும் (Mental Powers) முற்றிலுமாக தேவனுக்கு ஒப்புவித்து, அவருடைய வழிநடத்துதலைப் பின்பற்றுகிறோம். நம்முடைய சொந்த உணர்ச்சிகளின் பிறகே நாம் போக முயற்சிக்கும் காலம் வரையில், நாம் விழுந்து போன நிலையிலேயே இருக்கிறோம். ஏனென்றால் விழுகைக்கு முன்பாக தேவன் ஆதாமை வழிநடத்தினார்; விழுகைக்குப் பிறகோ, ஆதாம் தேவனை வழிநடத்த விரும்பினான். இப்பொழுது, தேவன், ஆதாமுக்கு ஒருவழியை அருளினார், ஆனால் அவனோ அந்த வழியை விரும்பவில்லை. அவன் தன்னைத் தானே பக்தியுள்ள ஒருவனாக ஆக்கவே விரும்பினான். மேலும் நாம் அதைக் காண்கிறபடி, அவன் - அவன் தானாகவே அதைச் செய்ய விரும்பினான். அவன் தேவன் பேரில் காத்திருந்து, "கர்த்தாவே, இதற்கு முன்பு நீர் என்னை வழிநடத்தினீர். இப்பொழுதோ நான் விழுந்து போயிருக்கிறேன்; நான் இழக்கப்பட்டு போனேன். இப்பொழுதும், கர்த்தாவே, நீர் எனக்கு உதவி செய்து, நான் எவ்வாறு உம்மிடம் திரும்பி வர வேண்டுமென்று எனக்குக் காண்பியும்,” என்று கூறவேயில்லை. அவன் அவ்வாறு செய்திருந்தால், நமக்கு இன்று இருக்கிற இத்தொல்லைகள் எல்லாம் ஒரு போதும் இருந்து இருக்காது. 16. மனிதன் அப்படியே தேவனண்டை நெருங்கி வருவானென்றால், நீங்கள் இழக்கப்பட்டுப் போகும் போது, மீண்டும் உங்களுடைய வழியைக் கண்டுபிடிக்க முயற்சிக்காதீர்கள். அப்படியே உங்களை அவருக்கு ஒப்புக் கொடுங்கள், அவர் உங்களை முந்தையை நிலைக்கு வழிநடத்திக் கொண்டு வருவார். நீங்கள் அதற்கு தீர்வு காண முயற்சிக்க வேண்டாம். அது தான் - அது தான் மூளை அறிவாற்றல்களாகும் (Mental Powers). சிறிது காலத்திற்கு முன்பு, நான் ஒரு கூட்டத்தில், ஒரு செய்தியில் இவ்வாறு கூறினேன். நான், “ஏதேன் தோட்டத்தில், தேவனும் பிசாசும் மனிதனில் தங்கள் தங்கள் பாகத்தைத் தேர்வு செய்து கொண்டனர். பிசாசு அவனுடைய தலையை எடுத்துக் கொண்டான்; தேவனோ அவனுடைய இருதயத்தை எடுத்துக் கொண்டார்,” என்று கூறினேன். அவன் தன்னுடைய மூளை அறிவாற்றல்களைக் கொண்டு அவனால் செய்யக்கூடிய மகத்தான ஏதோ ஓன்றை அவனுக்குக் காண்பிக்க பிசாசு முயற்சிக்கிறான். அவனால் என்ன காண முடியும் என்று அவன் தன்னுடைய கண்களைக் கொண்டு காணும்படி மாத்திரமே அவன் விரும்புகிறான். தேவனோ அவனுடைய இருதயத்திற்குள் வந்து, அவனால் காண முடியாத காரியங்களையும் அவன் விசுவாசிக்கும்படி அவனைச் செய்து விடுகிறார். விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது. அவன் வெறுமனே அதை விசுவாசிக்கிறான். ஏனெனில் தேவன் அதைக் கூறினார்; அவன் எதையுமே காண வேண்டியதில்லை. அல்லது அவனுடைய சரீரத்தின் எந்த புலனும் அதை அறிவிக்க வேண்டியதில்லை; தேவன், வாசம் பண்ணுகிற அவனுடைய ஆத்துமாவில், அவன் வெறுமனே அதை விசுவாசிக்கிறான். ஆனால் பிசாசோ அவனுடைய தலையை தேர்ந்தெடுத்துக் கொண்டு, அவனை புத்திசாலியாக்கி, தப்பிக்கொள்ளும்படியான ஒரு வழியாக, அவன் தனக்குத்தானே ஒரு மார்க்கத்தைக் கண்டு பிடித்து விடும்படி செய்து விடுகிறான். தேவனோ அவனை ஆராதிக்கும் பாதைக்கு வழி நடத்த விரும்புகிறார். 17. எனவே, ஆதாம் சில அத்தியிலைகளைத் துரிதமாக ஒன்றாக தைத்துக் கொண்டான், அவன் தேவன் பேரில் காத்திருக்கவில்லை... நாம் அங்கு தான் எல்லா நேரமும் தவறு செய்கிறோம் என்று நினைக்கிறேன். அது ஆதியில் தவறாக இருந்திருக்குமானால், இப்பொழுதும் அது தவறாகத் தான் இருக்கிறது. அது என்றுமே தவறாகத்தான் இருக்கும். நாம் முற்றிலுமாகவும் முழுவதுமாக வும் தேவனுக்கு நம்மை ஒப்புவித்து, அவருடைய ஆவியினால் வழி நடத்தப்பட வேண்டுமென்று தேவன் ஆதியிலே எதிர்பார்த்து இருப்பாரானால், அது என்றென்றுமாக அவ்விதமாகத்தான் இருக்கும். தேவன் வழியை உண்டாக்கி, ஆதாம் அந்த வழிக்கு வரும்படி அவனைக் கேட்டுக் கொண்டார். ஆனால் ஆதாமோ அந்த வழிக்குப் போக விரும்பவில்லை, அவன் அதிவிரைவாகச் சென்று தன்னுடைய சொந்த வழியை உண்டாக்கவே விரும்பினான். எனவே, அதன் பேரிலேயே நாம் அதிக நேரம் தரித்திருக்க முடியும். ஆனால் கவனியுங்கள். அவன், தனக்குத் தானே, சில அத்தி இலைகளைத் ஒன்று சேர்த்து ஒரு மேலாடையை உண்டாக்கிக் கொண்டான். நல்லது, அது இன்னும் அதே ஆவியாகவே உள்ளது, ஆனால் அவர்கள் "இலைகள்," என்ற பெயருக்குப் பதிலாக "கோட்பாடுகள்," என்பதற்கு அதை மாற்றி விட்டனர். அவன் இப்பொழுது சில கோட்பாடுகளை ஒன்றாக இணைத்துக் கொள்கிறான். ஆனால் அது இன்னும் அதே நோக்கமாகவே உள்ளது. அது இன்னும் மனித அறிவு சார்ந்த எண்ணமாகவே உள்ளது. அது தேவனுடைய திட்டமாகவோ தேவனுடைய சித்தமாகவோ இருக்கவில்லை. நீங்கள் கோட்பாடுகளின் வழியாக ஒரு போதும் இரட்சிக்கப்பட முடியாது. நீங்கள் தேவனுடைய அருளப்பட்ட பாதையில் வந்தாக வேண்டும். தேவன் வழியை உண்டாக்கினார். ஆனால் மனிதனோ தன்னுடைய சொந்த வழியை உண்டாக்கவே விரும்புகிறான். 18. ஆயினும், மனிதன் மிகவும் பக்தி உள்ளவனாய் இருக்கிறான். காயீன் மிகவும் பக்தி உள்ளவனாக இருந்தான். அவன் தேவனிடம் திரும்பி வருவதைக் குறித்து சிந்தித்தான், தேவன், அவனைத் திரும்பவும் ஏற்றுக் கொள்ள சித்தமுள்ளவராய் இருந்தார், ஆனால் காயீனோ தன்னுடைய சொந்த வழியில் வருவதையே விரும்பினான். அவன், தேவனுடைய வழியில் வர வேண்டுமென்றே தேவன் விரும்பினார். அங்கே அவர்களோடு முற்றிலுமாக ஒரு மோதல் இருந்தது என்பதையே நாம் கண்டு கொள்கிறோம். இப்பொழுது, இன்று தங்களுடைய சொந்த கோட்பாடுகளையும் மற்றவை களையும் உண்டாக்கிக் கொள்வதாக கூற முயற்சிக்கும் மனிதன் தன்னுடைய தகப்பனாகிய காயீனுடைய வல்லமையைக் கொண்டும், தன்னுடைய தகப்பனாகிய ஆதாமுடைய வல்லமையைக் கொண்டுமே அதைச் செய்து கொண்டு இருக்கிறான். ஆவியினால் பிறந்து, பரிசுத்த ஆவியைச் சார்ந்திருந்து, இரண்டாம் ஆதாமாகிய இயேசுவிற்குப் பிறகே இருப்பவன் அவ்வாறு இருக்க மாட்டான், அவன் பரிசுத்த ஆவியானவர் மூலமாக மனிதனை வழிநடத்துகிற பரிகாரத்தின் பின்னால் இருக்கிறான். அவர்கள் இன்று பரிசுத்த ஆவியைக் கொண்டிருக்க வேண்டியதில்லை என்று மனிதர், கூற முயற்சிக்கும் போது, அம்மனிதன் எம்மாதிரியான ஒரு நிலையில் இருக்கிறான் என்பதை உங்களால் காண முடியும். அவ்வாறு இருந்த போதிலும், அவன் பக்தி உள்ளவனாய் இருக்கத் தான் விரும்புகிறான். ஆனால் அவனோ தன்னுடைய சொந்த வழியிலேயே அதை விரும்புகிறான். 19. அவன் அதிகமாக காயீனைப் போன்றே இருக்கிறான். காயீன் பக்தி உள்ளவனாய் இருக்கவே விரும்பினான், எனவே அவன் சென்று தன்னுடைய சொந்த மார்க்கத்தை உண்டாக்கிக் கொண்டான். அவன் அவ்வாறு செய்த போது, இவ்விதமான ஏதோ ஓன்றோடு அவன் அதை தேவனுக்கு முன்பாகக் கொண்டு வந்தான். அதாவது, "இதோ சிறந்தது என்னிடம் உள்ளது. அதைக் குறித்து என்னால் செய்ய முடிந்தது எல்லாம் இவ்வளவு தான். இப்பொழுது, அதை ஏற்றுக் கொள்ளும் அல்லது அதை விட்டு விடும்,” என்று இருக்கிறது. இன்றும் மனிதன் ஏறக்குறைய அந்த விதமாகத்தான் செய்கிறான். "நான் சபையைக் கட்ட உதவி செய்தேன். நான் அங்கே சபைக்கு என்னுடைய பிள்ளைகளை அனுப்பினேன். நான் ஒவ்வொரு வருடமும் சபைக்குப் பணம் கொடுக்கிறேன். என்னால் செய்ய முடிந்த சிறந்த காரியம் அது தான். அதை ஏற்றுக் கொள்ளும் அல்லது அதை விட்டு விடும்,” என்று கூறுகிறான். ஓ, பாருங்கள், அவன் தன்னுடைய சொந்த வழியையே விரும்புகிறான். காயீனும் அந்த விதமாகத்தான் செய்தான். ஆனால் அப்பொழுதும் தேவன் அவனை நேசித்தார். அவர் அப்பொழுதும் அவனுக்குப் பிறகே சென்றார். தேவன், காயீனிடம் என்ன கூறினார்-? "நீ உன்னுடைய சகோதரனாகிய ஆபேலைப் போல அப்படியே ஆராதிப்பாயானால், நீ நலமானதைச் செய்வாய்,” என்றார். ஆபேல் தேவனுடைய வழியில் வந்தான். ஆனால் காயீனோ தன்னுடைய வழியையே விரும்பினான். மேலும் தேவன், "இப்பொழுதும், காயீனே, உனக்கு விரோதமாக என்னிடம் எதுவுமில்லை. நீ அப்படியே வந்து ஆபேல் போகிற விதமாகப் போவாயானால், நீ நலமானதைச் செய்வாய்,” என்றார். 20. ஆனால் அவன் ஆபேலை வெறுத்தான். ஆபேல், ஒரு பரிசுத்த உருளையன் என்று அவன் எண்ணினான். அவன், தன்னுடைய கருத்தை மாற்றிக் கொள்ளவில்லை. ஆபேல் ஒரு மத வெறியன் என்று அவன் எண்ணினான். மேலும் அவன் அதை விசுவாசிக்கிறான், அவனுடைய சம்பிரதாயமான கருத்துக்களும், அவனுக்கு சொந்தமான காரியத்தைக் குறித்த அவனுடைய தேர்ச்சியும் அவனுக்கு பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தைக் காட்டிலும் மேலானதாய் உள்ளது. ஆனால் அவன் தவறாய் இருக்கிறான். அவன் முற்றிலுமாக தவறாய் இருக்கிறான். அவனுடைய பாடகர் குழுவால் எவ்வளவு நன்றாகப் பாட முடியும் என்றோ அல்லது அவனுடைய பிரசங்கியாரால் எவ்வளவு நன்றாக பிரசங்கம் பண்ண முடியும் என்றோ எனக்குக் கவலை இல்லை; இரத்தம் சிந்துதலில்லாமல் பாவ மன்னிப்பில்லை. தேவனுடைய திட்டத்திற்குத் திரும்பி வாருங்கள். வேதாகமத்திற்குத் திரும்பி வாருங்கள். தேவன் ஒரு வழியை உடையவராய் இருக்கிறார், ஆனால் மனிதனோ அந்த வழிக்கு வர விரும்பதில்லை. மனிதன், "இப்பொழுது கவனியுங்கள். நான் உங்களைப் போலவே நல்லவனாய் இருக்கிறேன். நான் சபைக்குப் போகிறேன். நான் சபைக்கு செலுத்த வேண்டியவைகளை செலுத்துகிறேன்," என்றான். அவன் பக்தி உள்ளவனாய் இருக்கவே விரும்புகிறான். அதெல்லாம் சரிதான். ஆனால் அவன் பக்தி உள்ளவனாய் இருக்கிறான்.... ஆனால், நீங்கள் பாருங்கள், பூமிக்குரிய மனிதனின் சுபாவமானது பக்தி உள்ளதாய் இருக்கிறது. காயீன் பக்தி உள்ளவனாய் இருந்தான். சாத்தானும் பக்தி உள்ளவனாய் இருக்கிறான். மதம் உங்களை இரட்சிப்பதில்லை; இயேசு கிறிஸ்துவின் இரத்தம் தான் உங்களை இரட்சிக்கிறது. தேவன் உங்களை ஆராதிப்பதற்காக சந்திக்கும் ஒரே அடிப்படை அதுவாகத் தான் இருக்கிறது. மற்றவைகள் வீணாய் உள்ளன. 21. இப்பொழுது, மனிதன் மிகவும் பக்தி உள்ளவனாய் இருக்கிறான் என்பதை நாம் கண்டு கொள்கிறோம். எனவே அவன் காயீனைப் போன்று பக்தி உள்ளவனாய் இருந்தால், அவன் வெளியே சென்று, பூக்களையும் நிலத்தின் கனிகளையும் கொண்டு வந்து, அவன் தனக்குத் தானே ஆராதனை செய்வதற்கு ஒரு இடத்தை உண்டாக்கி, ஒரு பலிபீடத்தைக் கட்டினான். மனிதன் இன்றும் அதைத் தான் செய்து கொண்டிருக்கிறான் என்பதை நாம் காண்கிறோம். அவன் வெளியே சென்று, அவன் தனக்குத் தானே தேவபக்தியின் வேஷத்தைத் தரித்துக் கொள்வான், அவன் இவ்வாறு செய்வான் என்று வேதவாக்கியம் கூறுகிறபடி, "தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர் களாகவும் இருப்பார்கள்,'' (2.தீமோ.3:5). இப்பொழுது, அமெரிக்கா மிக அதிகமாக அதைக் குறித்து குற்றமுள்ளதாய் இருக்கிறது, பெந்தெகோஸ்தேயினரும், மற்றும் எல்லாருமே தங்களுக்குத் தாங்களே ஒரு கோட்பாட்டையோ அல்லது சட்ட திட்டங்களையோ (code of rules), அல்லது அவர்கள் ஜீவிப்பதற்கான ஏதோ ஓன்றையோ உண்டாக்கிக் கொள்ளுகிறார்கள். வேதவாக்கியம் நம்மை முன்னரே எச்சரித்து உள்ளது. மேலும் ஓ, அவன்... அங்கே அவனிடத்தில் ஏதோவொன்றுள்ளது, ஏனென்றால் அவன் விழுந்து போன மனிதனாய் இருப்பதால், அவன் இன்னும் தேவனுடைய கரத்தால் உண்டாக்கப்பட்ட ஒரு சிருஷ்டியாய் இருக்கிறான். அவனை ஆராதிக்க வைக்கிற ஏதோவொன்று அவனில் உள்ளது. அவன் தன்னுடைய சொந்த வழியை விரும்புவதால், அவன் தன்னுடைய அறிவாற்றவைப் பின்பற்றிச் சென்று கொண்டிருக்கிறான். அவனுடைய அறிவாற்றல்கள் பிசாசினுடையதாய் உள்ளது. அவனுடைய இருதயமோ தேவனைச் சேர்ந்ததாய் உள்ளது. 22. அவனைக் கவனியுங்கள். மேலும் இப்பொழுது, நாம் இங்கே அவனைக் கண்டு கொள்கிறோம். நாம் இப்பொழுது தான் லெந்து காலம் எனப்படும் ஒரு காலத்தினூடாகக் கடந்து சென்றோம் (லெந்து காலம்-Lenten season - கிறிஸ்தவர்கள் அனுசரிக்கும் 40 நாற்பது நாள் நோன்பு - மொழிபெயர்ப்பாளர்). ஓ, லெந்து காலத்தின் போது அவன் மிகவும் பக்தியுள்ளவனாக இருக்க விரும்புகிறான். 40 நாட்களும், அவன் தன்னுடைய சிகரெட்டுகளையும் அல்லது ஏதாயினும் ஒன்றை உபயோகிக்க மறுத்து விடுவான். மேலும் அவன்.... சுயமாகவே அவைகளை மறுப்பதன் பேரில் நான் அவனோடு போவேன். அதெல்லாம் சரி தான். 40 நாட்களும் அவன் தானாகவே ஏதோவொன்றை செய்ய மறுத்து விடுவான். அவன் முணுமுணுத்துக் கொண்டும், குழப்பம் உண்டாக்கிக் கொண்டும், சுற்றித் திரிந்து கொண்டும், அந்த 40 நாட்களும் வேகமாக கழிந்து விடும் என்று நம்பிக் கொண்டும் இருப்பான், அந்த 46 நாட்கள். அவன் அதை சமாளித்துவிட விரும்புகிறான், ஏனென்றால் ஒரு முறையாவது புகை பிடிக்காமலோ அல்லது மது அருந்தாமலோ, அல்லது அவன் தியாகம் செய்த வேறு ஏதோ ஓன்றையோ செய்யாமல் அவன் சலிப்புற்று, சோர்வடைந்து விடுகிறான். அது தான் லெந்து காலம். அவன் தன்னுடைய சபைக்கு ஒரு மாய்மாலக்காரனாக நடந்து கொண்டாலன்றி, அவனால் அதைச் செய்ய முடியாது. அவன் அந்த லெந்து காலத்தை அனுசரிக்க வேண்டியதாய் உள்ளது. அதன் பிறகு, ஈஸ்டர் ஞாயிறுக்கு பிறகுள்ள திங்கட் கிழமையன்று, அதன் பிறகு அவன் காட்டுப் பன்றியாகிப் போகிறான். அது உண்மை. ஏன்-? அந்த சுபாவம் தான் அவனிடத்தில் உள்ளது. அவன் தனக்கு ஒரு பெட்டி நிறைய சிகரெட்டு பெட்டிகளை வாங்கிக் கொள்கிறான். அவன் அன்று நள்ளிரவு வேளையில் அதைச் செய்து முடிப்பதற்காக அதை எண்ணி ஏங்கிக் கொண்டு, மேலே குதித்துக் கொண்டு, ஒரு சிகரெட்டை எடுத்துக் கொள்கிறான், அல்லது அவனுக்கு ஒரு மதுபானத்தையோ அல்லது ஏதோவொன்றையோ எடுத்துக் கொள்கிறான். அவன் உண்மையாகவே ஒரு சில நாட்களாக ஆழ்ந்த துக்கத்துடன் இருப்பான். ஏன்-? அவன் உண்மையாகவே அதை பெரிதும் எதிர்நோக்கிக் காத்துக் கொண்டு இருக்கிறான். நான் 46 நாட்களாக அவனோடு சென்றிருக்கிறேன். ஆனால் 46 நாட்களுக்குப் பிறகு, அவன் என்னிடமிருந்து விலகிக் கொள்கிறான். 23. கிறிஸ்தவ ஜீவியம் என்பது ஒரு தொடர்ச்சியான தியாகமுள்ள ஜீவியம் என்று நான் விசுவாசிக்கிறேன். "என் பின்னே வர விரும்புகிறவன், தன்னைத் தான் அனுதினமும் வெறுத்து (ஒவ்வொரு நாளும், 46 நாட்களல்ல, ஆனால் ஒவ்வொரு நாளும்), தன் சிலுவையை எடுத்துக் கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்,'' (லூக்கா-9:23). என்று இயேசு கூறி உள்ளார். வெறும் 46 நாட்களல்ல, ஆனால் அனுதினமும்... கிறிஸ்துவ ஜீவியமானது தொடர்ச்சியான லெந்து காலமாகும் (continually Lenten). ஓ, கிறிஸ்தவன் அதைச் செய்வதை எவ்வளவாய் வாஞ்சிக்கிறான். அவன் ஒரு - ஒரு எரிச்சலோடு அதைச் செய்வதில்லை; அவன் தேவனை நேசிக்கிறவன் என்ற ஒரு உணர்வோடு அவன் அதைச் செய்கிறான்; அவனால் அதைச் செய்ய முடியும் என்பதற்காக அவன் சந்தோஷமடைகிறான். கர்த்தராகிய இயேசுவை சேவிப்பதென்பது ஒரு மகிழ்ச்சியான காரியமாய் உள்ளது. அர்ப்பணிப்பது என்பது ஒரு சந்தோஷமான காரியம் ஆகும். கர்த்தரை ஆராதிப்பதும் ஒரு மகிழ்ச்சியான காரியமே. தேவனுடைய இராஜ்யத்தினிமித்தமாக ஒரு மத வெறியன் என்று அழைக்கப்படுவதும் ஒரு சந்தோஷம் தான். சரியான காரியத்திற்காக நிற்பதும், தவறான காரியத்தை விட்டு அகன்று செல்வதும் சந்தோஷமான காரியம் தான். அவரைத் துதிப்பதும் சந்தோஷமே. உலகத்தின் காரியங்களை விட்டு ஒதுங்கி இருப்பதும் சந்தோஷமான காரியம் தான். அது அவர்களுடைய இருதயத்தில் இருக்கிறது. அது ஒரு பரிபூரண லெந்துவாகும். எல்லா நேரமும் லெந்து காலம் தான். தேவனுடைய ஆவி உங்களுக்குள் வந்து உங்களுடைய வாஞ்சைகளை மாற்றி விடுகிறார். 24. இப்பொழுது, நாம் இன்றைக்கு, "நாம் சுதந்திரமாய் இருக்கிறோம். ஓ, நாம் ஒரு அழகான அமெரிக்காவில் வசிக்கிறோம். நாம் சுதந்திரமாய் இருக்கிறோம்,” என்பதைக் குறித்து அதிகமாகக் கேள்விப்படுகிறோம். ஓ, ஆகாயம் முழுவதும் அதனால் நிறைந்து உள்ளது. ஆயிரக்கணக்கான புத்தகங்கள் அதைக் குறித்து எழுதுகின்றன. ஆனால் நீங்கள் சுதந்திரத்திலிருந்து பத்து இலட்சம் மைல்கள் தூரத்தில் இருக்கிறீர்கள். நீங்கள் சுதந்திரமாக இல்லை. நீங்கள் அதன் மூலம் வஞ்சிக்கப்பட வேண்டாம். அமெரிக்காவானது பெரிதும் வஞ்சிக்கப்பட்ட தேசங்களில் ஒன்றாகும். எனக்குத் தெரிந்த எந்த இடத்தைக் காட்டிலும் அதிகமாக அடிமைத்தனம் உடைய நாடு இதுவாகும். கம்யூனிஸம் அவர்களை அடிமைத்தனத்தில் வைத்திருப்பதைக் காட்டிலும் மிக மோசமான அடிமைத் தனத்தில் இவர்கள் இருக்கிறார்கள். கம்யூனிஸம் சரீரத்தை மாத்திரமே காயப்படுத்த முடியும்; அவர்களால் சரீரத்தை மாத்திரமே அடிமைப்படுத்த முடியும். ஆனால் பிசாசு உள்ளே வருகிற போது, அவன் ஆத்துமாவை அடிமைப் படுத்தி விடுகிறான். மனிதன் ஒரு அடிமையாய் இருக்கிறான். அமெரிக்காவானது ஒரு கூட்டம் அடிமைகளைக் கொண்டு இருக்கிறது. நீங்கள் அகங்காரத்துக்கு ஒரு அடிமையாய் இருக்கலாம். நீங்கள் தெருக்களில் மேலும் கீழும் நடந்து, நீங்கள் ஒவ்வொரு அங்காடி வழியாகவும், நீங்கள் தொலைக்காட்சியில் காணக்கூடிய ஒவ்வொரு ஃபேஷன் வழியாகவும் போய், ஒரு அங்காடியிலிருந்து மற்ற அங்காடிக்குச் சென்று ஏதோ ஓன்றை வாங்க முயற்சிக்கிறீர்கள். நீங்கள் அதற்கு ஒரு அடிமையாக ஆகிறீர்கள். நீங்கள் உங்களுடைய ஆடையணிவதற்கு ஒரு அடிமையாய் ஆகிறீர்கள். நீங்கள் உங்கள் பணத்திற்கு ஒரு அடிமையாய் ஆக முடியும். நீங்கள் அதைக் குறித்து சிந்திக்கும் ஒரே காரியம் என்னவென்றால், பணத்தை சம்பாதிப்பதைக் குறித்தும், அந்தப் பணத்தைக் கொள்ளையிட்டு, அதை இங்கே கடன் கொடுப்பதைக் குறித்தும் தான். நீங்கள் அதைச் செய்தால், நீங்கள் ஒரு அடிமையாய் இருக்கிறீர்கள். 25. நீங்கள் ஒருக்கால் உங்களுடைய மதத்திற்கு ஒரு அடிமையாய் இருக்கலாம். நீங்கள் ஒருவேளை ஒரு கோட்பாட்டுக் குவியலுக்கு அடிமையாய் இருக்கலாம். நான் உங்களிடம் இதைக் கூறட்டும், கோட்பாடுகள் என்பது கம்யூனிஸத்திற்கான கட்டமைப்பே தவிர வேறொன்றுமில்லை. அது கம்யூனிஸத்தைக் கட்டி எழுப்புவதற்கு பிசாசு உபயோகிக்கக் கூடிய சாரக்கட்டு வேலையாய் (scaffold work) (scaffold-கட்டிட வேலையாட்கள் நின்று வேலை செய்ய எழுப்பக்கூடிய தற்காலிக சாரக்கட்டு-மொழிபெயர்ப்பாளர்.) உள்ளது. அது தான் குளிர்ந்த சம்பிரதாயமான ஒரு சபையாகும். மனிதரும் ஸ்திரீகளும் அந்த சபைக்குச் சென்று தங்கள் உடைய மதத்திற்கு ஒரு அடிமையாகி, பிசாசுக்கு ஒரு அடிமையாக ஆகிறார்கள். சபைக்குள் சென்று, புத்தகத்தில் உங்கள் பெயரை எழுதி, அதற்கு பணத்தை கொடுக்கிறீர்கள். அல்லது அவர்கள் அங்கே சென்று தவறான காரியத்தைக் குறித்து ஒரு போதும் எதையும் கூறுவதில்லை. நான் இதைக் குறித்துப் பேச விரும்பவில்லை, ஆனால் நான் எப்படியும் அதைக் கூறப்போகிறேன். நான் மிகக் கடினமாகப் பேசிக் கொண்டு இருக்கவில்லை. இப்பொழுது, நான் அவ்வாறு பேசிக் கொண்டு இருக்கவில்லை என நம்புகிறேன். நான் உரிய நேரத்தில் இதைக் கூற விரும்புகிறேன். ஆனால் சகோதரிகள்... அதனூடாக போவார்கள். இங்கே வெளியேயுள்..... இங்கே சிகாகோவில், இந்தத் தெருக்களில் அவர்களைக் காண்பது இழிவானதாக உள்ளது, அவர்கள் எவ்வாறு தங்கள் வஸ்திரங்களை அகற்றி விட்டு, தெருவில் செல்கிறார்கள் என்பதைப் பார்க்கும் போது, அது அவமானகரமாயுள்ளது. அவர்களுக்கு வெளித்தோற்றத்தில் எந்த வித்தியாசமும் தெரியவில்லை. அவர்கள் விபச்சாரம் செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பதை அவர்கள் உணருவதில்லை. நீங்கள், "நல்லது, சகோ.பிரன்ஹாம் அவர்களே, எனக்கு பெண்களைத் தெரியும்..” என்று கூறலாம். ஒரு ஸ்திரீயின் மேல் ஒரு அசுத்த ஆவி இல்லாமல் அவளால் குட்டையான உடைகளை (shorts) உடுத்த முடியாது. நீங்கள் அதைப் புரிந்து கொள்கிறீர்கள். ஏனென்றால் அவளுடைய அறிவாற்றலில் அவள் ஒருக்கால் அதை விசுவாசிக்காமலிக்கலாம், ஆனால் அவள் தன்னைத்தானே மனிதர்களுக்கு முன்பாகக் காண்பிக்கும்படி சாத்தான் அந்த ஆவியை அவள் மேல் வைத்து இருக்கிறான். நியாயத்தீர்ப்பின் நாளிலே, அவளைத் தவறான விதத்தில் நோக்கிப் பார்க்கிற ஒவ்வொரு மனிதனும் அவளோடு விபச்சாரம் செய்ததற்காக அவளோடு குற்றமுள்ளவனாய் இருப்பான், நியாயத்தீர்ப்பின் நாளிலே அவ்வாறு நடக்கும். அவளுடைய மேய்ப்பன் அதைக் குறித்து எதையும் கூறுவதில்லை . 26. நான் கடினமாயிருக்கிறேன் என்று அவர்கள் கூறுகிறார்கள். நான் கடினமானவனல்ல-! அது கடினமானதல்ல; அது சத்திமாய் உள்ளது-! ஏனென்று உங்களுக்குத் தெரியுமா-? அவள் குருடாய் இருக்கிறாள், அவனும் கூட குருடாய் இருக்கிறான். “குருடனுக்குக் குருடன் வழிகாட்டினால் இருவரும் குழியிலே விழுவார்கள்,” என்று வேதாகமம் கூறுகிறது. அது தான் அறிவாற்றல். மனிதரும் கூட வெளியே சென்று இக்காரியங்களைச் செய்வார்கள்: வியாபார ஒப்பந்தங்களில் ஏமாற்றி, சபையில் டீக்கன்மார்களாக இன்றும் கூட இருக்கிறார்கள். புகைபிடித்தல், சிகரெட்டுகளைப் புகைப்பதினால் இவ்வருடத்தில் 1,33,000 அமெரிக்கர்கள் மரிப்பார்கள், சிகரெட்டுகளைப் புகைப்பதினால் இந்த வருடத்தில் 1,33,000 பேர் மரிப்பார்கள் என்று குறித்திருக்கிறார்கள். கடந்த, ரீடர்ஸ் டைஜஸ்ட் பத்திரிகையில் இந்நாட்களில் ஒரு மனிதன் புகைபிடித்தால், அவனுடைய காலம் வரை அவன் ஒரு போதும் ஜீவிக்க மாட்டாத அளவுக்கு அது மிகவுமாக முதிர்ச்சி அடைந்து விடுகிறது என்று மருத்துவ விஞ்ஞானம் கூறுவதாக அது கூறுகிறது. ஏதொவொன்று அவனைக் கொன்று போடுவது இல்லை, ஏன், அவனுடைய காலத்திற்கு முன்னே அவன் புற்று நோயினால் மரித்துப் போவான். அது அவனுடைய கண்களுக்கு முன்பாக சரியானதாகவே உள்ளது, இருப்பினும் தொடர்ந்து அதைச் செய்வான். அன்றொரு நான் ஒரு மேய்ப்பரோடு கரத்தைக் குலுக்கினேன், சிகரெட்டுகளைப் புகைத்ததால் அவருடைய விரல்கள் மஞ்சள் நிறமாக இருந்தன. "நீங்கள் இந்த சரீரத்தைக் கெடுத்தால், நான் அதை அழித்துப் போடுவேன்,'' (1-கொரி.3:17) என்று கர்த்தர் உரைக்கிறார். 27. பரிசுத்த ஆவியானவர் இன்றிரவு வேத வாக்கியங்களில், "நம்முடைய ஜீவனுள்ள நாளெல்லாம் அவருக்கு முன்பாக பரிசுத்தமாக இருந்து நாம் அவரை சேவித்தாக வேண்டும்,” என்று கூறி, பேசிக் கொண்டே இருக்கிறார். அது சுத்தமும் பரிசுத்தமுமாய் உள்ளது. ஆனால் இன்று "பரிசுத்தம்,” என்ற வார்த்தையை உங்களால் குறிப்பிடக் கூடுமானால், ஜனங்கள் அதைக் கேட்டு நகைக்கிறார்கள். சாத்தான் எவ்வாறு எல்லாவற்றையும் முடித்து வைத்துள்ளான் என்று புரிகிறதா-? ஆனால் நீங்கள் ஒரு அடிமையாய் இருக்கிறீர்கள். நீங்கள் ஒரு கிறிஸ்தவனாய் இருந்தாலும், நீங்கள் ஒரு அடிமையாய் இருக்கிறீர்கள். நீங்கள் கர்த்தராகிய இயேசுவுக்கு ஒரு அடிமையாய் இருக்கிறீர்கள். அங்கே உங்களுடைய இரண்டு நபர்கள் இருக்கிறார்கள், ஆத்துமாவும் சரீரமும். நீங்கள் சரீரத்தைப் போஷிப்பீர் களானால், நீங்கள் பிசாசுக்கு அடிமையாயிருக்கிறீர்கள்; உங்களிலுள்ள ஆத்துமா சிலுவையில் அறையப்பட்டிருக்கும். "பாவஞ்செய்கிற ஆத்துமா சாகும் (எசே. 18:4, 20),” என்று வேதாகமம் கூறியுள்ளது. உங்களுடைய மாம்சத்தில், இயேசு கிறிஸ்துவினுடைய ஒரு ஊழியக்காரனாய் இருக்கும்படி ஒரு கட்டப்பட்ட அடிமையாய் இருக்க வேண்டுமானால், நீங்கள் மாம்சத்தை சிலுவையில் அறைந்தாக வேண்டும். எனவே நீங்கள் எந்தவிதத்திலும் அதை ஏற்றுக் கொள்ளும் ஒரு அடிமையாய் இருக்கிறீர்கள். நீங்கள்... நீங்கள் அதிலிருந்து விலகிச் செல்லவே முடியாது. 28. எனவே நீங்கள் ஒரு அடிமையாயிருக்கிறீர்கள்; நீங்கள் முத்திரை இடப்பட்டு இருக்கிறீர்கள். கடைசி நாட்களில் இரண்டு முத்திரைகள் இருக்குமென்று வேதாகமம் கூறி உள்ளது. பூமியில் உள்ள ஒவ்வொரு நபரும் ஒரு முத்திரையையோ அல்லது மற்ற முத்திரையையோ பெற்றிருப்பான். உங்களால் அதிலிருந்து விடுவித்துக் கொள்ள முடியாது. அவைகளில் ஒன்று மிருகத்தின் முத்திரை, மற்றொன்று தேவனுடைய முத்திரை. தேவனுடைய முத்திரை என்பது பரிசுத்த ஆவியாகும், அதுதான் தேவனுடைய சபைக்கான தேவனுடைய அருளப்பட்ட பாதையாகும். "நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்,” என்று எபேசி. 4:30 கூறுகிறது. அந்தப் பரிசுத்த ஆவியைப் புறக்கணிப்பது தான் மிருகத்தின் முத்திரையை ஏற்றுக் கொள்வதாகும். தேவனுடைய முத்திரையைக் கொண்டு இராத எல்லாமே பிசாசின் முத்திரையைக் கொண்டிருந்தது. எனவே, நீங்கள் முத்திரை இடப்பட்டு இருக்கிறீர்கள். நீங்கள் தேவனுடைய அன்பில் கட்டப்பட்ட ஒரு அடிமையாக முத்திரை இடப்பட்டு இருக்கலாம் அல்லது நீங்கள் பிசாசினுடைய உலக காரியங்களுக்கு ஒரு அடிமையாக முத்திரை இடப்பட்டு இருக்கலாம். அது கடினமாய் உள்ளது. ஆனால் நாம் அடிமைகளாய் இருக்கிறோம். நாம் நம்முடைய ஜீவனுள்ள நாளெல்லாம் அவரை சேவிக்க வாஞ்சிக்கிறோம். இயேசு கிறிஸ்துவுக்கு ஒரு ஊழியக்காரனாக இருக்க வேண்டுமானால், நீங்கள் உங்களுக்கே ஒரு அடிமையாக இருந்தாக வேண்டும், சிலுவையில் அறையப்படுவதற்கு... ஓ, தேவனே, இது புரிந்து கொள்ளப்படட்டும். உன்னையே சிலுவையில் அறைந்து கொள், உன்னுடைய மாம்சத்தையும், உன்னுடைய ஆசைகளையும் சிலுவையில் அறைந்து விடு, உன்னை அசைக்கவும், செயல்படும்படி உன்னைத் தூண்டவும் தேவன் உன்னுடைய இருதயத்தைப் பற்றிப் பிடித்துக் கொள்வாராக. அது தான் கிறிஸ்துவின் அடிமையாய் இருப்பதாகும், அது தான் அடிமை என்று அழைக்கப்படுவதாகும் - பவுல் அதை அவ்வாறு அழைத்தான். அவன் கர்த்தராகிய இயேசுவுக்கு ஒரு அடிமையாய் இருந்தான் என்றும், கர்த்தராகிய இயேசுவுக்கான சேவையில் அவன் ஒரு அடிமை என்றும், ஏறக்குறைய அனுதினமும் இயேசு கிறிஸ்துவுக்காக ஒரு அடிமையாய் இருப்பதற்காக அவன் சென்று மாம்சத்தை சிலுவையில் அறைந்து, களி கூர்ந்து கொண்ருந்தான் என்றும் அவன் கூறினான், ஏனென்றால் அவன் ஒரு அடிமையாய் இருந்தான். அது தான் காரியம். 29. நாம் சபையின் மூலமாக நிற்க முயல்கிறோம். சபை, சபை, நீங்கள் கேள்விப்படுவது எல்லாம் அவ்வளவு தான். சபை... அங்கே ஒரே ஒரு சபை தான் உண்டு, நீங்கள் அந்த சபையில் சேர்ந்து கொள்வதில்லை. அதில் எந்த கோட்பாடும் கிடையாது. நீங்கள் பரிசுத்த ஆவியின் மூலமாக அந்த சபைக்குள் பிறக்கிறீர்கள். உங்களுடைய பிறப்பு உங்களை அந்த சபைக்குள், அந்த சபையின் ஐக்கியத்திற்குள் கொண்டு வருகிறது. எனவே, இதில் நாம் கிறிஸ்துவுக்கு அடிமைகளாய் ஆகிறோம். இப்பொழுது, ஒரு காலையில், கீழே நரகத்தில், பிசாசு ஒரு ஆலோசனைக் கூட்டத்தை நடத்தும்படி, தன்னுடைய எல்லா குட்டி பிசாசுகளையும் ஒன்றாக அழைத்ததைக் குறித்த அந்த பழங்கால புராணக் கதையை நீங்கள் கேள்விப்பட்டு இருக்கிறீர்கள். அவன், "நாம் என்ன செய்யலாம்-? என்னுடைய குட்டிப் பிசாசுகளிலேயே புத்திசாலியும், அதிக திறமையும் கொண்ட ஒருவன் என்னுடைய சிங்காசனத்தைச் சூழ வரும்படி நான் விரும்புகிறேன். அந்த கூட்டம் மனிதர்களை நாம் எவ்வாறு வஞ்சிக்கலாம்-?" என்று கேட்டான். ஒரு சிறு புத்திசாலி குட்டிப் பிசாசு முன்னே வந்து, “எஜமானே, எல்லாரையும் ஒழித்துக் கட்டும்படியான ஐடியா என்னிடம் உள்ளது,” என்றான். அவன், “அப்படியானால், அது என்ன ஐடியா-?” என்று கேட்டான். இந்தக் குட்டிப் பிசாசு, "நாம் அங்கே மேலே சென்று, அவர்களுடைய எல்லா சபைகளையும் அழித்துப் போட ஒரு புயல் காற்றை உண்டு பண்ணுவோம். இவ்வாறு நாம் அவர்களை வஞ்சித்துப் போடுவோம்,” என்றது. இந்தக் குட்டிப் பிசாசைக் காட்டிலும் மிக அதிக புத்திசாலியான வேறொரு குட்டிப் பிசாசு முன்னே வந்து, “நீ பேசுவது எவ்வளவு முட்டாள்தனமாய் இருக்கிறது. நாம் அவனை வஞ்சிக்கக்கூடிய ஒரே இடம் சபை தானே,” என்றது. 30. ஆதியில் எப்படியிருந்ததோ, அப்படியே இப்பொழுதும் இருக்கிறது. அவன் தனக்குத் தானே ஒரு வழியை உண்டாக்கிக் கொண்டு, தேவனுடைய வழியை புறக்கணிப்பதற்காக அத்தி இலைகளை ஒன்றாக தைப்பதற்கு முயற்சித்ததால் அவன் வஞ்சிக்கப்பட்டான். அவன், இன்றும் அதைத்தான் செய்து கொண்டு இருக்கிறான். அவனுடைய கோட்பாடுகளை ஒன்றாக இணைத்து இது மற்றும் அதை உண்டாக்கிக் கொள்கிறான், பெரிய சபைகளையும் ஸ்தலங்களையும் கொண்டு மனிதர்களை வஞ்சிக்க முயலும்படி அவன் பெரிய சபைகளையும் ஸ்தலங்களையும் உண்டாக்கிக் கொள்கிறான். அவன் அதைச் செய்வான் என்று வேதம் கூறியுள்ளது. "தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிப்பார்கள்”. எனவே நீங்கள் பாருங்கள், அவன் ஒரு வழியிலோ அல்லது வேறு வழியிலோ ஒரு அடிமையாக இருந்தாக வேண்டும். ஆனால் இயேசு கிறிஸ்துவுக்கு அடிமையாயிருக்கிற நாம் சந்தோஷத்திற்கு அடிமைகளாய் இருக்கிறறோம். நான் என் மேல் அடிமை விலங்கைக் கெண்டு இருப்பதற்காக மிகவும் சந்தோஷமாய் இருக்கிறேன், அது என்னை உலக காரியங்களை விட்டு விலகும்படி செய்கிறது, நான் இயேசு கிறிஸ்துவை அன்போடு சேவிக்கும்படி, அவருக்கு ஒரு அடிமையாக என்னால் ஆக முடிந்தது. விலையேறப்பெற்ற விசுவாசத்தைப் போன்ற அருமையான விசுவாசத்தைப் பெற்று இருக்கிற, பரிசுத்த ஆவியினால் பிறந்திருக்கிற, உலகத்தின் அசுத்தங்கள் எல்லாவற்றிலும் இருந்து உங்களை பரிசுத்தப்படுத்தி, சுத்திகரிப்பதற்கு இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தைக் கொண்டிருக்கிற, மாம்சத்திற்கு அனுதினமும் செத்து, அதை சிலுவையில் அறைந்து, அதை அடக்கம் செய்து, தேவனை சேவிக்கும்படி உங்களுடைய சொந்த சரீரத்திற்கு ஒரு அடிமையாக ஆகி இருக்கிற என்னுடைய சகோதர சகோதரிகளாகிய நீங்கள், நாம் ஒரு நகரம் வருவதற்காக காத்துக் கொண்டிருக்கிறோம். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்-! 31. தேவன் தாமே கட்டி உண்டாக்கின ஒரு நகரத்துக்கு நாம் காத்திருக்கிறறோம். நாம் இந்தப் பழைய மாம்சமாகிய வஸ்திரத்தை விட்டுச் சென்று, உயிர்த்து எழுந்து, நித்திய பரிசை பிடித்துக் கொண்டு, சத்தமிட்டவாறு, ஆகாயத்தினூடாக (பறந்து) சென்று, "விடை பெறுகிறேன், விடை பெறுகிறேன், இனிய ஜெப வேளையே,” என்று கூறும் போது, அதற்காகத் தான் நாம் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறோம். நாம் இந்த அழிவுள்ள பழைய சரீரத்தை விட்டு விடுதலையாகும் அந்த நாளுக்காகத் தான் காத்துக் கொண்டிருக்கிறோம். அதற்கு மேலும் அடிமைத்தனம் இருக்காது, ஆனால் நாம் நம்மை நேசித்து, தம்முடைய ஜீவனையே நமக்குக் கொடுத்த அவருடைய கரங்களில் இருப்போம், அவருடைய பாதுகாப்பிலும் அவருடைய சாயலிலும் இருப்போம், தேவனுடைய பிரசன்னத்தில் இருப்பதற்கு தகுதி உள்ளவர்களாக நம்மை ஆக்கும்படி திரு வசனத்தைக் கொண்டு நம்மை தண்ணீர் முழுக்கினார் (கழுவினார்). அவருடைய பிரசன்னம் நம்மோடு வருகிறது; தேவ தூதர்கள் அவருக்கு பயந்தவர்களைச் சூழ பாளயமிறங்குகிறார்கள். அவர் இன்றிரவும் இங்கே இருக்கிறார் என்பதை நாம் அறிவோம். நாம் நம்முடைய ஜீவனுள்ள நாளெல்லாம் பரிசுத்தத்தோடு அவரை சேவிக்கிறோம்... ஆனால் நாம் அவருக்கு அடிமைகளாய் இருக்கிறோம். நீங்கள் இன்னும் தேவனுக்கு, கிறிஸ்துவுக்கு அடிமையாக ஆகவில்லை எனில், அவருடைய அன்பினால் பிணைக்கப்பட்ட அடிமையாக ஆகவில்லை எனில், நாம் நம் உடைய தலைகளைத் தாழ்த்துவோம். நீங்கள் அப்படியே ஒரு நிமிடம் அதைக் குறித்து சிந்தியுங்கள். உங்கள் பாவ சுமையிலிருந்து விடுவிக்கப்படுவீர்களா-? இரத்தத்தில் வல்லமை உண்டு, இரத்தத்தில் வல்லமை உண்டு; ஜீவனைக் கொடுக்கின்ற இந்த குருதியோட்டத்தில் பாவக்கறைகள் அகன்று விடும்; ஓ, இரத்தத்தில் அற்புதமான வல்லமை உண்டு. இன்றிரவு இங்கேயிருக்கும் மனிதர்களும், ஜனங்களுமாகிய நீங்கள் சாத்தானின் விலங்கு சங்கிலிகளிலிருந்து விடுவிக்கப்படுவீர்களா-? அவன் தன்னால் உங்களை எவ்வளவு போதுமான காலம் கட்டி வைக்க முடியுமோ அவ்வளவு காலம் தொடர்ந்து கட்டி வைக்க விரும்புகிறான். 32. இஸ்ரவேல் புத்திரர்கள் எகிப்தை விட்டுப் புறப்பட்டு போய்க் கொண்டிருந்த போது, பார்வோன், "சரி, நீங்கள் போய் ஆராதனை செய்யலாம், ஆனால் உங்கள் பிள்ளைகளை இங்கே விட்டு விட்டு செல்லுங்கள். உங்கள் கால்நடைகளையும் விட்டு விட்டு போங்கள்," என்று கூறினான். அவன் என்ன செய்ய விரும்பினான்-? அங்கே ஏதோ ஓன்றை விட்டு விட வேண்டும், எனவே தான் அவர்கள் அதற்காக மீண்டும் திரும்பி வந்து விடுவார்கள் என்பதை அவர்கள் அறிவார்கள். அது தான் பார்வோன், அது தான் பிசாசு, இன்னும் அவன் பிள்ளைகளிடம் அவ்வாறு தான் கூறிக் கொண்டிருக்கிறான். ஆனால் மோசே கூறினதை நான் விரும்புகிறேன். அவன், "நாங்கள் ஒரு குளம்பையும் பின் வைத்துப் போவதில்லை. நாங்கள் போவோம்; எங்கள் இடமிருக்கிற யாவுமே போகும்,” என்றான். அது தான் வழி. உங்களுடைய தற்பெருமை போகட்டும். நீங்கள் பெற்றிருக்கிற எல்லாமே போகட்டும். எல்லாவற்றையும் உங்களோடு எடுத்துச் செல்லுங்கள். எதையுமே உலகத்தில் திரும்ப விட்டு விட்டுப் போக வேண்டாம். நாம் ஜெபிக்கையில், எல்லாவற்றையும் கிறிஸ்துவுக்கு ஒப்புக் கொடுத்து விடுங்கள். 33. நாம் ஜெபிக்கையில், ஜெபத்தில் நினைவுகூரப்பட விரும்புகிற யாராகிலும் உண்டா-? உங்கள் கரத்தை மேலே உயர்த்தி, "என்னை நினைவுகூரும், தேவனே,” என்று கூறுங்கள். ஓ, அது நல்லது. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. "நான் தேவனின் மூலமாக குறி இடப்பட விரும்புகிறேன். நான் அவருடைய அடிமையாக இருக்க விரும்புகிறேன். இந்த உலகத்திலுள்ள எனது ஜீவியத்தின் வாஞ்சையான காரியங்கள் எல்லாமே சிலுவையில் அறையப்பட்டு, நான் ஒவ்வொரு நாளும் இயேசுவைப் போன்று இன்னும் அதிகமாக இருக்கும் படியாக, அவ்விதமாக இயேசுவோடு கூட அன்போடு இருக்க விரும்புகிறேன். மற்றவர்கள் என்னிடத்தில் இயேசுவைக் காணும் அளவுக்கு, நான் அவரைப் போன்று அதிகமாக இருக்க விரும்புகிறேன். அவ்விதமாகத் தான் என்னுடைய ஜீவியம் மறைக்கப்பட விரும்புகிறேன்." அவ்வாறு இல்லாமல் தங்கள் கரங்களை உயர்த்தின மற்றவர்கள் அங்கே உண்டா-? சுற்றிலுமுள்ள எல்லாரும், மேலே பால்கனியில் உள்ளவர்களும், தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அது நல்லது. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இப்பொழுது நாம் தாழ்மையோடு நம்முடைய தலைகளைத் தாழ்த்தி ஜெபிப்போம். உங்களுக்கு என்ன தேவையாய் இருந்தாலும், அப்படியே கேளுங்கள். "உங்கள் சந்தோஷம் நிறைவாய் இருக்கும்படி மிகுதியாக கேளுங்கள். கேளுங்கள் அப்பொழுது நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள்; தேடுங்கள் அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள்; அது உங்களுக்குத் திறக்கப்படும்." 34. ஓ கர்த்தாவே, நாங்கள் இன்றிரவு செய்தியை சற்று சிறியதாக குறைத்துக் கொண்டோம், ஏனென்றால் சுகமளிக்கிற ஆராதனைகள் நெருங்கி வந்து கொண்டு இருக்கின்றன. ஆனால், கர்த்தாவே, முதலில், ஆத்துமாவுக்குத் தான் ஒரு சுகமளிக்கிற ஆராதனையை நாங்கள் விரும்புகிறோம். உலகத்தையும் உலகத்தின் வாஞ்சைகளையும் அவர்களுடைய ஜீவியத்தை விட்டு வெளியே எடுத்துப் போடும் தேவனுடைய வல்லமையின் மூலமாக மனிதர்களும் ஸ்திரீகளும் சுகமடைவதை நாங்கள் காண விரும்புகிறோம். இன்று சாத்தான் அநேக பிள்ளைகளை பின்னோக்கி இழுக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறான். ஓ, அங்கே மிக அதிக கவர்ச்சி உள்ளது. வானொலி அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சி நிரல்களிலும் தொலைக்காட்சிகளிலும் நிறைய தணிக்கை செய்யப் படாத ஒளிபரப்புகள் உள்ளன, மற்றும் அவைகளில் அவர்கள் பார்க்கக்கூடாத காரியங்கள் உள்ளன. அது மனிதர்களை கவர்ந்திழுக்கிறது. நாம் சபைகளைக் குறித்து சிந்தித்துப் பார்ப்போம், அவர்கள் எப்படியாக அவர்களை அதற்குள் கண் மூடித்தனமாக தடுமாறி நடக்க அனுமதிக்கின்றனர். அதெல்லாம் சரி தான் என்று நினைத்துக் கொள்கிறார்கள். "குருடன் குருடனுக்கு வழிகாட்டினால், அவர்கள் இருவரும் குழியிலே விழுவார்கள்,” என்ற பயபக்தியாக எச்சரிக்கையை நாங்கள் கேட்கிறோம். தேவனே, தங்கள் கரங்களை உயர்த்தி உள்ளவர்களும் தங்கள் கரங்களை உயர்த்தாதவர்களுமாகிய ஒவ்வொரு இருதயத்தின் மேலும் அப்படிப்பட்ட ஒரு வாஞ்சை வர வேண்டுமென்று நாங்கள் இன்றிரவு ஜெபிக்கிறோம், உலகத்தோடு அவர்களைப் பற்றிப் பிடித்து வைத்திருக்கிற ஒவ்வொரு கயிறும் கட்டு அவிழ்க்கப்படும் அளவுக்கு இன்றிரவு அவர்களுடைய ஜீவியங்களில் அந்த வாஞ்சையானது அவ்வளவு மகத்தானமாக இருக்க வேண்டுமென்று ஜெபிக்கிறோம், அவர்களுடைய ஆத்துமாக்கள் சுயாதீனமாக தொடர்ந்து முன் செல்ல வேண்டுமென்று ஜெபிக்கிறோம். தேவன் அதிகாரத்தை எடுத்துக் கொண்டு, அவர்களை வழிநடத்திச் செல்வாராக, அவர்கள் தாங்களாகவே சிந்தித்துப் பார்க்க முயற்சிக்க வேண்டாம். தேவன் என்ன கூறுகிறாரோ அதை அவர்கள் விசுவாசித்து விடுதலை அடையட்டும். 35. அவர்களுடைய பாவத்தை மன்னியும். மீறுதல்களின் பாவத்தையும் புறக்கணிப்பின் பாவத்தையும், அந்தப் பாவங்கள் என்னவாக இருந்தாலும், அவைகளை அவர்களுக்கு மன்னியும், நீர் அவர்களை மன்னிக்க வேண்டுமென்று நாங்கள் ஜெபிக்கிறோம், கர்த்தாவே. அவர்கள் சோம்பலாய் இருப்பதாக அது இருக்கலாம். கர்த்தாவே, நீர் அதற்காக அவர்களை மன்னிக்க வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். நாங்கள் அதைக் கூறுவது போன்று, இந்த கன்வென்சன் கூட்டத்தை விட்டுச் செல்லும்போது, அவர்கள் உமக்காக தங்கள் கீழ்ப்படிதலில் நடந்து, போய் சேவை செய்யும்படி ஆயத்தமாயிருக்கும் மனிதர்களையும் பெண்களையுமே நீர் விரும்புகிறீர். சேவை செய்யும்படி எங்களுக்குக் கொடுக்கப்படும் கடைசி தருணம் எந்த நாளாக இருக்கும் என்பது எங்களுக்குத் தெரியாது. எங்கள் ஜீவியங்கள் அழைக்கப்படும், அப்போது நாங்கள் தேவனுக்கு முன்பாக பதில் கூறுவோம். மேலும் கூடுதலான ஆராதனைகள் அல்லது இருந்து வருகிற ஆராதனைகளில் இருந்து தப்பி ஓடிச் செல்லும் யாராகிலும் அங்கே இருப்பார்களானால், கர்த்தாவே, அவர்கள் சகலவற்றையும் ஒப்புவிக்கும் மணி நேரமாக இது இருக்கும்படி அருளும். இந்தச் செய்தியானது ஆழமாக வெட்டுவதாக. அவர்கள் அதைக் காணும்படியாக, நீர் அதைக் கொண்டு இருக்கும் இருதயத்தில், அது அவ்விதத்தில் கொண்டு வருவதாக… 36. கர்த்தாவே, நான் அவர்களுக்குக் கொடுக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறேன், இயற்கையான மனிதன் இயற்கையான காரியங்களையே பார்க்கிறான். மேலும் அங்கே, ஆவிக்குரிய காரியங்கள் அறிவாளிகளுக்கு மிகவும் முரணாக இருக்கின்றன, அவனால் அதைப் புரிந்து கொள்ள முடியாது. நிக்கோதேமுவிடம், "ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால், அவனால் தேவனுடைய இராஜ்யத்தைப் புரிந்து கொள்ளக்கூட முடியாது என்று சொன்னது நீர் தான், கர்த்தாவே. எனவே இன்றிரவு இக்கட்டிடத்தில், ஒவ்வொரு இடத்திலும் புதுப்பிறப்பும், புது இருதயங்களும், புது சிருஷடிகளும், புதிய தூண்டுதல்களும், புதிய வரங்களும், புதிய நம்பிக்கைகளும், புதிய ஜீவனும் இருக்க வேண்டுமென்று நாங்கள் ஜெபிக்கிறோம், இவ்விடத்தில் எல்லா இடங்களிலும் உள்ள ஒவ்வொரு இருதயத்திலும் அவைகள் விளைவுகளை ஏற்படுத்த (strung up) வேண்டுமென்று நாங்கள் ஜெபிக்கிறோம். இப்பொழுது உமது ஊழியக்காரனாக, நான் அதை உம்மிடம் கொடுக்கிறேன், கர்த்தாவே. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், முன்னரே இல்லாமலிருந்தால், நான் அவர்களை நியாயத்தீர்ப்பில் சந்தித்து, அந்த வெள்ளிக்கிழமை இரவில் சிகாகோவில் அது இருந்தது என்று கூறுவேனாக, நான் என்னுடைய, "ஆம்" என்பதைச் சொல்லி, ஆழத்திலே தள்ளிக் கொண்டு போய், மீன்பிடிக்கும்படி (வலைகளைப்) போடும்படியாக, ஒவ்வொரு கடற்கரையையும் கட்டவிழ்த்து விடுகிறேன். இதை அருளும், பிதாவே. எங்கள் ஜீவனுள்ள நாளெல்லாம் உமது அடிமைகளாக நாங்கள் இருப்பதையே விரும்புகிறோம். சந்தோஷத்தோடு கூட உமது அன்பின் அடிமைகளாக உம்மை நாங்கள் சேவிக்கிறோம், இயேசுவின் நாமத்தில். ஆமென். 37. நாம், "நான் வருகிறேன், கர்த்தாவே; இப்பொழுதே உம்மிடம் வருகிறேன்,” என்ற அந்தச் சிறிய பாடலைப் பாடுவோம். மகனே, அது உனக்குத் தெரியுமா-? ஒரு சிறு பாடலை எங்களுக்குக் கொடு. "ஊற்றண்டை இடமுள்ளது." அந்தப் பாடல் உங்களுக்குத் தெரியுமா-? "ஊற்றண்டை இடமுள்ளது,” என்ற பாடல். "இயேசுவே சிலுவைக்கருகில் என்னை வைத்துக்கொள்ளும்” என்ற பாடல் தெரியுமா-? சரி. அந்த நல்ல பழைய பாடலைப் பாடுவோம், நான்... நீங்கள் விரும்புவதை உங்களால் கொண்டிருக்க முடியும், நான் -நான்... யூபிலி எல்லாம் சரி தான், ஆனால் இரத்தத்தைக் குறித்தும், சிலுவையைக் குறித்துமுள்ள அந்த நல்ல பழைய இருதயத்தைத் தொடும் பாடல்கள் எனக்குப் பிரியம். இப்பொழுது இதை வழி நடத்த யாராவது ஒருவர் எனக்கு உதவி செய்யுங்கள். இயேசுவே என்னை அருகில் வைத்திரும் (இப்பொழுதே ஆராதிப்பதற்கான உங்கள் நேரம்.) அங்கே (நீங்கள் ஏன் ஆராதிக்கிறீர்கள்-? வார்த்தையின் மேலாக நீங்கள் இப்பொழுது அதற்கு தண்ணீர் பாய்ச்சுகிறீர்கள். உங்கள் இருதயத்திற்குள் போயிருக்கிற அந்த வார்த்தைக்கு மேலாக ஆராதியுங்கள்.) எல்லோருக்கும் சுகமளிக்கும் இலவசமான ஓடையொன்று, கல்வாரியின் நீரூற்றிலிருந்து பாய்ந்தோடி வருகிறது. சிலுவையில், இப்பொழுது அப்படியே அவரை ஆராதிப்போம்.... சிலுவையில், எந்தன் மகிமையாய் எப்பொழுதும் இரும்; என் மகிழ்ச்சியான ஆத்துமா நதிக்கப்பால் இளைப்பாறுதல் கண்டடையும் வரைக்கும். 38. உங்களுக்கு உலகத்திலுள்ள எந்த ஃபேஷனிலும் இருப்பதைக் காட்டிலும் சிலுவையிலே உள்ள மகிமை அதிகமாக இருக்கவில்லையா-? எந்த உலக இன்பங்களைக் காட்டிலும் சிலுவையின் மகிமை உங்களுக்கு அதிகமாய் இருக்கவில்லையா-? சிலுவையில், சிலுவையில், என் மகிமை எப்பொழுதும் இருக்கட்டும்; (நாம் அதை மறுபடியும் பாடுவோம்.) சிலுவையில், சிலுவையில், என் மகிமை எப்பொழுதும் இருக்கட்டும்; பரவசமடைந்துள்ள என் ஆத்துமா, நதிக்கப்பால் இளைப்பாறுதல் கண்டடையும் வரையில். அவ்விதமாக அந்த இனிமையான கனிவான பரிசுத்த ஆவியானவர் நம் மேல் சுவாசித்துக் கொண்டிருக்கிறதை நீங்கள் நேசிக்கவில்லையா-? பாருங்கள், அது மிகவும் எளிமையாக உள்ளது, உலகத்தின் மாச்சத்து மற்றும் அறிவு சார்ந்த காரியங்கள் எல்லாமும் அகற்றப்பட்டு விட்டன, ஆவியானவர் அப்படியே ஆராதித்துக் கொண்டிருக்கிறார், நம் மூலமாக தேவனை ஆராதித்துக் கொண்டு இருக்கிறார், பரிசுத்த ஆவியானவர் பரிந்து பேசிக் கொண்டு, ஆராதனையை செய்து கொண்டு இருக்கிறார் (breathing out). ஓ, என்னே. அங்கிருக்கிற எந்த மதக் கோட்பாட்டுக்கு முன்பாகவும் நான் - நான் அதையே தெரிந்து கொள்வேன். அன்பைத் தவிர நமக்கு எந்த பிரமாணமும் கிடையாது, கிறிஸ்துவைத் தவிர எந்த மதக்கோட்பாடும் கிடையாது, வேதாகமத்தைத் தவிர எந்தப் புத்தகமும் கிடையாது. அதுதான் அது. அதுதான் அது. என்றென்றுமாக அதை எனக்குக் கொடுங்கள். அதுவே எனக்கு நன்கு போதுமானது. ஓ, நாம் எவ்வளவாக அவரை நேசிக்கிறோம். இப்பொழுது மிகவும் நன்றாக உணருகிறவர்கள் எல்லாரும், அப்படியே உண்மையாக அகற்றி விட்டவர்கள் எல்லாரும் உங்கள் கரத்தை மேலே உயர்த்துவீர்களா-? ஓ, அது அருமையானதாக இல்லையா-? சற்று நோக்கிப் பாருங்கள். ஓ, என்னே . மிகவும் இனிமை... 39. "இயேசுவை நம்புவது மிகவும் இனிமையானது.” இந்தப் பாடலை அறிந்திருக்கிற நீங்கள் எல்லாரும், இதைப் பாட எனக்கு உதவி செய்யுங்கள்: இயேசுவை நம்புவது மிகவும் இனிமையானது." இப்பொழுது, நீங்கள் இங்கே பாடுவதை யாரோ ஒருவர் கேட்கிறார்கள் என்பதற்காக நாம் பாடிக் கொண்டிருக்கவில்லை, நாம் பாடுவதை அவர் ஆவியில் கேட்கிறார் என்பதற்காகவே அதைப் பாடிக் கொண்டு இருக்கிறோம். இப்பொழுது நாம் அவரிடத்தில் தயவைக் கண்டு அடைந்து, அவரை ஆராதித்து, அவர் நம்மிடம் வருவதற்கே முயற்சித்துக் கொண்டு இருக்கிறோம். சரி, நாம் பாடுவோம். இயேசுவை நம்புவது மிகவும் இனிமையாக உள்ளது, அவரை அவருடைய வார்த்தையில் எடுத்துக்கொள்ளவும்; அவருடைய வாக்குத்தத்தத்தின் மேல் இறைப்பாறிக் கொண்டிருக்கவும், "கர்த்தர் உரைக்கிறதாவது” என்பதை அறிந்துகொள்ளவும். இயேசு, இயேசு , நான் எவ்வளவாக அவரை நம்புகிறேன், நான் மறுபடி மறுபடியாக எப்படியாக அவரை நிரூபித்திருக்கிறேன் -! இயேசு, இயேசு, விலையேறப்பெற்ற இயேசு-! ஓ அவரை இன்னும் அதிகமாக நம்புவதற்கான கிருபைக்காக-! 40. அது உங்கள் வாஞ்சை இல்லையா-? நான் அவரை நம்ப கற்றிருக்கிறேன் என்பதற்காக நான் எவ்வளவாய் மிகவும் சந்தோஷமாயிருக்கிறேன். மறுபடி மறுபடியுமாக நான் அவரை எவ்வளவாக நிரூபித்திருக்கிறேன். மனிதர்கள் புற்று நோயின் நிழலில் மரித்துக் கொண்டிருப்பதையும், அவர் அவனை திரும்பவும் ஜீவனோடு எழுப்புவதையும் நான் கண்டேன். சிறு பிள்ளைகள் சாலையில் படுத்திருப்பதையும், முற்றிலுமாக மரித்திருந்த ஒரு சிறு பிள்ளையையும் நான் கண்டேன். அவனுடைய ஒவ்வொரு எலும்பும் உடைக்கப்பட்டிருப்பதையும், அது சம்பவிப்பதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பாகவே ஒரு தரிசனத்தில் அவன் சாலையின் பக்கத்தில் படுத்துக் கிடப்பதையும் நான் கண்டேன். அவனுடைய சிறு கரங்களை குறுக்காக வைத்துக் கொண்டு, அப்பால் நடந்து சென்று விட்டான், நாங்கள் எல்லாரும் சுற்றிலும் நின்று கொண்டு இருந்தோம்... அங்கே நடந்து சென்றான், அந்தப் பிள்ளையானது மறுபடியும் உயிர்த்தெழும் என்று அவருடைய வார்த்தை எப்படியாக என்னிடம் கூறினது. ஓ, என்னே. நான் எப்படியாக அவரை மறுபடியும் மறுபடியுமாக நிரூபித்தேன். அப்படியே பேசி, "கர்த்தராகிய இயேசுவே, அவன் மறுபடியும் உயிர்த்தெழுவான் என்று சொன்ன ஒருவர் நீர் தான், எனவே மரணமே, இனிமேலும் நீ இவனை பிடித்து வைக்க முடியாது. ஜீவனே, இவனிடம் வா என்று கூறினேன். அந்தச் சிறு பையன் தன்னுடைய காலில் குதித்து, ஓடத் தொடங்கினான், அவன் ஒவ்வொரு விதத்திலும் துள்ளிக் குதித்துக் கொண்டு இருந்தான். நான் எப்படியாக அவரை மறுபடி மறுபடியுமாக நிரூபித்தேன். குருட்டத்தனத்திலும் இருளிலும் தடுமாறிக் கொண்டிருந்தவர்கள் தங்களுடைய பார்வையைப் பெற்று, நடந்து செல்வதை நான் கண்டேன். ஓ, நான் எப்படியாக அவரை மறுபடி மறுபடியுமாக நிரூபித்தேன். வீதியிலிருந்த வேசி (prostitute) என்னிடம் வந்து, "சகோ.பிரன்ஹாமே, ஒரு ஊழியக்காரரின் முன்பாக நிற்க எனக்குத் தகுதியில்லை. ஆனால் நான் இவ்விதமாக மரிக்க விரும்பவில்லை,” என்று கூறி, அவர்கள் சீமாட்டிகளாக, சீமாட்டிகளாக ஆனதை நான் கண்டு இருக்கிறேன். கீர்த்தியாக, ஒவ்வொரு பாவமும் மன்னிக்கப்பட்டது. குடிகாரர்கள் விஸ்கி மதுபானத்தில் மிகவுமாக ஊறிப்போனவர்களாயும், புகையிலையை எல்லா இடங்களிலும் அவர்கள் கொண்டும், தள்ளாடிக் கொண்டு, நான் குணமாக்குதலை ஏற்றுக் கொண்டேன்; நான் எல்லாவற்றையும் செய்து விட்டேன், நான் அப்படியே... எனக்கு அங்கே எந்த நம்பிக்கையும் இல்லை," என்று கூறுவதை நான் கண்டிருக்கிறேன். மேலும் இயேசு கிறிஸ்துவின் இரத்தம் எல்லா அநீதியில் இருந்தும் அவர்களை கழுவி சுத்திகரிப்பதையும் கண்டு இருக்கிறேன். ஒரு வருடம் கழித்து, அவர்கள் பிரசங்க பீடத்தில் நின்று சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதையும் கண்டிருக்கிறேன். நான் எப்படியாக அவரை மீண்டும் மீண்டுமாக நிரூபித்தேன். இயேசு, இயேசு, விலையேறப்பெற்ற இயேசு. ஓ இன்னும் அதிகம் அவரை நம்பும்படிக்குள்ள கிருபைக்காக. 41. இப்பொழுது உங்களுடைய சுகமளித்தலுக்காக நான் அவரை நம்பப் போகிறேன். நீங்களும் கூட அவரை நம்பும்படி நான் விரும்புகிறேன். நம் உடைய பாவங்கள் இரத்தத்தின் கீழாக இருந்து, நம்முடைய இருதயங்கள் நம்மை குற்றவாளிகளென்று தீர்க்காத பிறகு, நாம் அந்த வியாதிப்பட்டவர் மேல் கரங்களை வைக்கும் போது, அவர்கள் குணமடைவார்கள். (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசிரியர்.) இல்லை, அது என்னுடைய மற்ற வேதாகமத்தில் இருக்கிறது. கர்த்தர் எனக்கு ஒரு தரிசனத்தைக் கொடுத்து, ஒரு ஸ்திரீ மேடைக்கு வரும் போது அந்த மாற்றம் இருக்கும் என்றும், அவள் எப்படி உடை உடுத்தி இருப்பாள் என்றும், குணப்படுத்த முடியாத ஒரு சிறு குழந்தையை அவள் கொண்டிருப்பாள் என்றும், அது ஒரு சிறிய போர்வையில் மூடப்பட்டிருக்கும் என்றும், அந்தக் குழந்தை சுகம் அடைந்து விடும் என்றும் சொன்ன போது. அவள் ஒரு கோட் சூட்டை அணிந்து இருப்பாள் என்றும், அவள் எப்படி தோற்றமளிப்பாள் என்றும், அவ்விதமாக எல்லாவற்றையும், என்னுடைய ஊழியம் மாற்றமடையும் நேரம் அதுவாக இருக்கும் என்றும் கர்த்தர் என்னிடம் ஒரு தரிசனத்தில் கூறினபோது. நான் அதைக் கூறுவதை எத்தனை பேர் எப்பொழுதாவது கேட்டிருக்கிறீர்கள்-? நிச்சயமாக, வருடக்கணக்காக. அது சம்பவித்த போது எத்தனை பேருக்குத் தெரியும்-? நான் இங்கே கடைசி முறை இருந்த போது, சரியாக இங்கே ஆயுத தளவாடக் கிடங்கில் (Armory) (அது நடந்தது.) தரையில் நடந்து கொண்டிருக்க, எனது மனைவியும், எனது மருமகளும், பில்லியும் கூட, அவர்கள் எல்லாரும் அங்கேயிருந்தார்கள். இந்தச் சிறிய பெண் வந்து கொண்டு இருப்பதை நான் கண்டேன். போய்க் கொண்டிருந்த ஒரு ஜெப வரிசையை நான் கொண்டிருந்தேன். அப்போது இந்தச் சிறு சீமாட்டி வந்தாள், நானோ, "நல்லது, நான் -நான் நம்ப மாட்டேன், நான்... அங்கு எங்கேயோ அந்தப் பெண்மணியை நான் அறிந்திருக்கிறேனே, ஆனால் அவளை என்னால் நினைவுகூர முடியவில்லை," என்று நினைத்தேன். பாருங்கள், அது அதிக காலம் ஆகியிருந்தது, 5 அல்லது 6 வருடங்கள். அதற்கு காலதாமதம் ஆகியிருந்த போதிலும், அப்பொழுதும், அது அதனுடைய நாளில் பேசும். 43. நாம் பார்க்கலாம், அங்கே ஐந்து பேர் இருக்கிறார்களா, பில்லி-? பில்லி-? அங்கே ஐந்து பேர்களா இருக்கிறார்கள்-? 1 முதல் 5-? 6, 7, 8, 9, 10... 5-5, 6, 7, 8, 9, 10. சரி. 44. மேலும் எனவே, நான் பில்லியைக் கண்டு பிடிப்பதற்காக சுற்றும் முற்றும் நோக்கிப் பார்த்தேன். அவன் மேடையில் இருக்கவில்லை. நான் என்னுடைய மனைவியைத் தேடிக் கொண்டிருந்தேன். அவளும் என்னுடைய மருமகளாகிய லாய்சும், அவர்கள் வேறொரு வழியில் நோக்கிக் கொண்டு இருந்தார்கள். அது என்ன என்று நான் கண்டேன், அது அந்தச் சிறிய பெண்ணாக இருந்தது. அவளுக்கு குழந்தை இருந்தது. அவள் அந்தக் குழந்தையை மேலே கொண்டு வந்து, ஜெபிக்கப்பட்டது, கர்த்தராகிய இயேசு அவளைச் சுகமாக்கினார். அவளைச் சுகப்படுத்தினார் - அந்தக் குழந்தையை சுகமாக்கினார். மேலும் ரோசல்லா, நீ எங்கே இருக்கிறாய்-? அந்தச் சிறு குழந்தையைக் குறித்த சாட்சிக்காக அவள் இங்கே இருந்தாள். மேலும் எனவே... இப்படித் தான் அந்தக் கதை துவங்கினது. எரிந்து போன இந்தக் கத்தோலிக்க பள்ளியில் காயப்பட்டிருந்த அந்தக் குழந்தைக்காக ஜெபிக்கும்படி நான் கீழே சென்றேன். அந்த நோயாளியைப் பற்றி உங்களுக்கு நினைவிருக்கிறதா-? மேலும் நினைவில் கொள்ளுங்கள், முழு சுவிசேஷ வியாபார புருஷர்கள் அந்த வியாதிப்பட்டவருக்கு ஜெபத்தை ஏறெடுக்கும்படி அங்கே ஒரு கூட்டத்தைக் கொண்டிருந்தார்கள், மேலும் சகோதரிகளும் அவர்களும் மருத்துவமனையில் இருந்தார்கள். 45. இந்தச் சிறு சீமாட்டி அவளுடைய மேய்ப்பரிடம் சென்றிருந்தாள். ரோசல்லா, நான் சரி தானா-? அது ஸ்வீடிஸ் உடன்படிக்கை சபை (Swedish Covenant Church) அல்லது அவள் சேர்ந்திருந்த ஏதோவொன்றா-? இங்கே இந்தப் பட்டணத்திலுள்ள மருத்துவர்கள், அவர்களில் அநேகம் பேர், அந்தச் சிறு குழந்தையை கைவிட்டு இருந்தனர். அவனால் பிழைக்க முடியாதிருந்தது. அவளுடைய மேய்ப்பர், "நீ போய் சகோ.பிரன்ஹாமைப் பார்; தேவன் அவருடைய ஜெபத்தைக் கேட்பார்," என்றார். இப்பொழுது, அந்த மனிதர் இங்கே இருப்பாரென்றால், சகோதரனே, அதற்காக தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக, ஏனென்றால் நீர் அந்த பெண்ணிற்காக ஏதோ ஓன்றைச் செய்தீர். மேலும் எனவே... நான் அந்தக் கதையை சரியாகச் சொல்லிக் கொண்டிருந்தால், நீர் என்னைப் பின் தொடர்ந்து வாரும். எனவே அவர்கள்... அந்த இரவில்... அந்தப் பிற்பகலில், மருத்துமனையில் இருந்த அந்தச் சிறு வியாதிப்பட்ட மனிதர்களுக்கும், காயமுற்ற அந்தக் சகோதரிக்கும் சபைக் கூட்டத்தினருக்கான ஒரு ஜெபத்தை ஏறெடுத்து விட்டு, அங்கிருந்து திரும்பினேன். அந்தச் சிறு பெண் அழுது கொண்டிருந்தாள், ஏனென்றால் அவள் வீட்டிற்குப் போக வேண்டியதாய் இருந்தது. அந்தக் தகப்பனார் இன்னும் ஒன்று அல்லது இரண்டு பிள்ளைகளைக் கவனித்துக் கொண்டிருந்தார், மேலும், எனவே.... அவள் அழுது கொண்டிப்பதை அல்லது ஏதோ ஓன்றை ரோசல்லா கண்டாள் என்று நம்புகிறேன். மேலும் அவர்கள், "நல்லது, ஏன் சகோ.பிரன்ஹாம்..,” என்று கூறினாள். அவள், "நான் குழந்தையைக் கொண்டு வந்தேன்... சகோ.பிரன்ஹாம் அதற்காக ஜெபிக்கும்படியாக, வரும்படி என் மேய்ப்பர் என்னிடம் கூறினார். மருத்துவர்கள் அதைக் கைவிட்டு விட்டனர். ஆனால் அவர் வியாதியஸ்தருக்காக ஒருபோதும் ஜெபிக்கவில்லை,” என்றாள். மேலும் இவள், "அது இன்றிரவு இருக்கும். இன்று அது பள்ளிக்காக இருந்தது என்றாள். எனவே அவள், "ஆனால் என்னால் தங்க முடியாது," என்றாள். எனவே ரோசல்லா, "இப்பொழுது, நான் உங்களிடம் கூறுகிறேன். வழக்கமாக, சகோ.பிரன்ஹாமுடைய மகனாகிய பில்லி-பால் (ஜெப அட்டைகளை விநியோகிக்கிறான். நீ அங்கே கதவண்டையில் நின்று கொள், நீ போக வேண்டியதாய் இருந்தது என்று அவர் உன்னிடம் கூறுவார். உனக்கு ஒரு அட்டை வேண்டுமென்று அவரிடம் கூறு,” என்று கூறினாள். இப்படியாக ரோசல்லா அவளுக்கு உதவி செய்தாள், பில்லி அவளுக்கு ஒரு அட்டையைக் கொடுத்தான். அந்த இரவில்... அவள் பகுத்தறியும் வரிசையில் இருந்தாள் என்று நான் நினைக்கவில்லை, அவள் அப்படியே அந்த வரிசை நெடுகிலுமாக கீழே வந்து கொண்டு இருந்தாள். ஆனால் எப்படியாவது, நான்... அவள் உள்ளே வந்த போது, நான் அந்தக் குழந்தையைக் கண்டேன், நான், "சற்று பொறு. அது போன்றே உடை உடுத்தியிருக்கிறாளே-? அந்தக் குழந்தையை எனக்குத் தெரியும்,” என்று நினைத்தேன். 47. இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கும் சகோ.ஜீன் கோட் அவர்கள் கடந்த வசந்த காலத்தில் மேலே நியூ ஹாம்ப்ஷயரில், அங்கே ஒரு குழந்தையை எடுத்து வைத்துக் கொண்டு மேடையின் மேல் வந்த ஒரு சீமாட்டி இருந்தாள். இப்பொழுது, அவர், "சகோ.பிரன்ஹாமே, அது அந்த பெண்மணி இல்லையா-?” என்றார். நான், "இல்லை, அது அவளல்ல,” என்றேன். நாங்கள் அவளுக்காக ஏறக்குறைய 4 அல்லது 5 வருடங்களாகவே எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். மேலும் நான், "அது அவளல்ல," என்றேன். நான், "காரணம் என்னவென்றால், இந்தப் பெண்மணி ஒரு.... அது கொண்டு இருந்தது... அது இளம் பொன்னிறமான தலைமுடியாக இருந்தது, அவள் உயரமாக இருந்தாள், அவள் வித்தியாசமாக உடை உடுத்தி இருந்தாள், அந்தக் குழந்தைக்கு வயதாகி இருந்தது," என்றேன். மேலும் இதுவோ ஒரு சின்னஞ்சிறிய குழந்தையாகவும், மிக மிக வியாதிப்பட்டும் இருந்தது. எனவே, அந்தப் பெண்மணி மேலே வந்து, பரிசுத்த ஆவியானவர் அசைவாடத் தொடங்கி, மருத்துவர்கள் குழந்தையைக் கைவிட்டு விட்டிருந்தனர் என்று கூறி, குழந்தையைப் பற்றிய வரலாறு எல்லாவற்றையும் கூறத் தொடங்கின போது, அவர் வழக்கமாக அதைச் செய்கையில், அவளுடைய சிறு குழந்தையால் எதையுமே புசிக்க முடியாதிருந்தது என்று அவளிடம் கூறினார். அது சாப்பிடுகிற ஒவ்வொரு முறையும், அது அதை வாந்தி எடுத்தது என்று நம்புகிறேன் (அது சரிதானா-?). அதற்கு அநேக மாதங்கள் வயதாகிய் இருந்தது, அதற்கு இரண்டு அல்லது மூன்று பவுண்டுகள் மாத்திரமோ, அல்லது ஏதோ எடையிருந்தது. அது வயிற்றில் இருக்குமானால், அது வயிற்றுப்போக்காக அதனூடாகப் போனது. மேலும் அவர்கள்... அது ஒரு பயங்கரமான தோற்றத்தில் இருந்தது. ஆனால் பரிசுத்த ஆவியானவர், கர்த்தர் உரைக்கிறதாவது என்று சத்தமாகப் பேசினார், அந்தக் குழந்தை சுகமானது. 48. பில்லி எங்கேயிருந்தான் என்று காண நான் உற்று நோக்கினேன்; அவனைப் புரிய வைக்க என்னால் அவனைக் காண முடியாதிருந்தது. எனவே நான், அவர்கள் எவ்வளவு குருடாக இருந்தார்களோ அவ்வளவு குருடாக இருந்தார்களானால், நான் அப்படியே காத்திருந்து அவர்கள் எவ்வளவு குருடாக இருக்கிறார்கள் என்று காண்பேன்,” என்றேன். இவ்விதமாக தொடர்ந்து சென்றேன். அந்த இரவில் நாங்கள் வீட்டிற்குப் போகத் தொடங்கின பிறகு, காரில் ஏறினேன். என்னுடைய சகோதரி - என்னுடைய மருமகள், "மேடையில் இருக்கும் அந்த இனிமையான சிறு குழந்தையை நீங்கள் கவனித்தீர்களா-? அது மிக அழகான சிறு குழந்தையாக இருந்ததே. அது மிகவும் வியாதிப்பட்டு இருந்தது,” என்றாள். மனைவி, "நான் அந்தக் குழந்தையைக் கவனித்தேன்,” என்றாள். நான், "இப்பொழுது, அவர்கள் அதற்குப் பெயரிடுவார்கள்,” என்று நினைத்தேன். நான் அதை அப்படியே தொடர்ந்து போகும்படி விட்டேன். அவர்கள் அதற்கு ஒரு போதும் பெயரிட்டிருக்கவில்லை. 49. அடுத்த நாள், நாங்கள் வீட்டிற்குப் போய்க் கொண்டிருந்தோம், மத்தியானம் வரையில் என்னால் சிகாகோவை விட்டு வெளியே போக முடியாது இருந்தது. என்னுடைய காரானது பனிக்கட்டியாக உறைந்து விட்டது. நான் அதை சூடாக்கி உருக வைக்க வேண்டியிருந்தது. அது நான் புறப்பட்டுப் போக வேண்டியதற்கு முன்பாக ஏறக்குறைய மத்தியான நேரமாக இருந்தது. சாலையில் போய்க் கொண்டு இருந்த போது, மனைவி, "பில்லி, சென்ற இரவில் அந்தச் சிறு குழந்தையை நீங்கள் கவனித்தீர்களா-? அது மிகவும் இனிமையான சிறு குழந்தையாக இருந்ததல்லவா-?” என்றாள். நான், "ஆமாம், அது அவ்வாறு தான் இருந்தது,” என்று கூறி விட்டு அப்படியே தொடர்ந்து போய்க் கொண்டிருந்தோம். அவள் தொடர்ந்து மீண்டுமாக அதை தவற விட்டு விட்டாள். நான், "தேனே, ஏதையாவது நீ அறிந்து கொண்டாயா, அந்தக் குழந்தையையும் தாயாரையும் குறித்து விசேஷமான எதையாகிலும் நீ அறிந்து கொண்டாயா-?” என்றாள். அவள், "இல்லை, நான் அவ்வாறு நினைக்கவில்லை,” என்றாள். நான், ஏறக்குறைய 5 வருடங்களுக்கு முன்பு ஒரு கோட் சூட்டை அணிந்து கொண்டிருக்கும் ஒரு சிறு பெண்ணை உனக்கு ஞாபகம் இருக்கிறதா,” என்றேன். அவள், "அது தான் அது,” என்றாள். நான், அப்படியே சரியாக. அதுதான் அது என்றேன். என்னுடைய மருமகளும் மகனும், பிற்பாடு நாங்கள் அவர்களோடு தொடர்பு கொண்டு, எங்களுடைய இரவு ஆகாரத்தை உண்பதற்கு உள்ளே சென்றோம்; நாங்கள் அதை (அவ்வாறு) அழைக்கிறோம். மேலும் எனவே, நாங்கள் எங்களுடைய இரவு உணவை கொண்டிருக்கும்படி உள்ளே சென்றோம். மேலும் மேலும் லாய்ஸ் மறுபடியுமாக அந்தக் குழந்தையைக் குறித்து குறிப்பிட்டுக் காட்டினாள். நான் அவளிடம் அதைக் குறிப்பிட்டேன். மேலும் பில்லி, "அப்பா, அது சரியாக இருந்தது. அது தான் அந்தக் குழந்தையாக இருந்தது, இல்லையா,” என்றான். ஆமாம்.” 50. அது முதற்கொண்டு, காரியம் மாறி விட்டது. எல்லாரும்... நான் அவர்களை இங்கே கொண்டு வந்து, நிறுத்தி, அவர்களுக்காக ஜெபிக்க முடியும். அது காரியமாய் இருப்பதில்லை. ஒவ்வொருவரும்... சில நேரங்களில் வரிசை நெடுகிலும், பரிசுத்த ஆவியானவர் என்னை நிறுத்தி, "இந்த ஒருவரிடம் பேசு,” என்று கூறுவார். அப்போது வழக்கமாக, நான் ஒருவர் பேரில் பகுத்தறிதலைக் கொண்டிருந்தேன் என்றால், அதற்கு மேலும் என்னால் கொண்டிருக்க முடியாது இருந்தது. ஒவ்வொரு முறையும் நான் ஒரு நபரைச் சந்தித்த போது, அது அதே காரியமாகத்தான் இருக்கும். ஆனால் இப்பொழுதோ அது அவ்வாறு இல்லை. பாருங்கள்-? என்னால் கொண்டிருக்க முடியும், ஒருக்கால், நெடுக சென்று, ஏதோவொன்று இருக்க வேண்டியதாய் இருக்கிறது, அவர்களுக்கு அது தேவையாய் இருக்கிறது போன்று நான் யாரோ ஒருவரைக் காண்கிறேன், சில சமயங்களில் பரிசுத்த ஆவியானாவர் பேசி, நிறுத்தி, அவர்களிடம் பேசுவார். பிறகு நான் ஒருக்கால் முற்றிலுமாக அது என்னை விட்டுப் போய் விடும். ஒருக்கால் அது கீழே வேறு ஏதோவொரு இடத்திலோ, ஒருக்கால் வேறு யாரோ ஒருவரிடத்திலோ, ஒருக்கால் மனச்சோர்வு அடைந்திருக்கும் அல்லது ஏதோ ஓன்றிடம் போவார்; அதை நிறுத்தி, அவர்களிடம் கூறுவார். அதன் பிறகு முற்றிலுமாக என்னை விட்டுப் போகிறது. நான் அந்த நேரங்களுக்கு இடையே ஓய்வெடுத்துக் கொள்கிறேன் (நீங்கள் பாருங்கள்-?), எனவே என்னால் ஒரு பீட அழைப்பைக் கொடுக்க முடியும். ஓ, அது அது வழக்கமாக இருப்பதைக் காட்டிலும் வித்தியாசமான விதத்தில் இருக்கிறது. அந்த விதமாக, நான் அவர்களில் ஒவ்வொருவருக்காகவும், ஒவ்வொரு நபருக்காகவும் ஜெபிக்க என்னால் முடியும். என்னுடைய கூட்டமானது புரட்சிகரமாக இருந்து வருகிறது, ஏனென்றால் இங்கே இருக்கும் ஜனங்கள் நினைக்கும் அந்தக் காரியமானது, "போதுமான பேருக்கு ஜெபிக்கப் படுவதில்லை," என்று அவர்கள் நினைக்கிறார்கள். நல்லது, என்னால் அதற்கு உதவி செய்ய முடியாதிருந்தது. நான் ஒருவருக்காக பகுத்தறிதலைக் கொண்டு இருக்கும் போது, அவர் சரியாக வேறொருவரிடம் தாவுகிறார் (bounce), அப்போது என்னால் அதிலிருந்து அப்பால் வர முடியாதிருந்தது. ஆனால் இப்பொழுதோ அதைச் செய்ய முடிகிறது. அது அப்படியே என்னை விட்டு விலகி, தொடர்ந்து போகிறது (நீங்கள் பாருங்கள்-?), ஏனென்றால் ஏதோ ஓன்றைச் சொல்லுவதற்காக தேவன், எண்ணத்தை எடுத்துக்கொள்கிறார். ஓ, அது அதிக சிறந்த காரியமாக இருக்கிறது. 51. நான் அதை இங்கே விளக்கிக்கூற விரும்பினேன், ஏனென்றால் அப்போது முதற்கொண்டு பிலதெல்பியன் சபையில் வியாதியஸ்தருக்காக ஜெபிக்க இருப்பது இதுவே என்னுடைய முதல் முறையாகும் என்று நினைக்கிறேன். எனவே, நாம் நன்றி உள்ளவர்களாய் இருக்கிறோம். தேவன் எனக்குக் கொடுத்து இருக்கிற ஒவ்வொரு தரிசனமும் அவர் கூறினபடியே முற்றிலுமாகவும், சரியாகவும் வந்திருக்கிறது, அது ஒரு போதும் ஒரு முறையும் தவறிப் போகவில்லை. நான் அதன் மேல் என்னுடைய ஜீவனையே வைத்திருக்கிறேன், ஏனென்றால் நம் மத்தியில் ஜீவித்த ஜீவனுள்ள தேவனுடைய வார்த்தையாக அது இருக்கிறது. அது உண்மை. எனக்கு 50 வயதாகிறது. நான் ஏறக்குறைய 2 அல்லது 3 வயதாக இருந்தது முதற் கொண்டே ஒரு தரிசனத்தை நான் அறிந்திருக்கிறேன், நான் எங்கே ஜீவிப்பேன் என்று என்னிடம் கூறின முதலாவது தரிசனம். நான் ஒரு கிறிஸ்தவனாக இதைக் கூறுகிறேன். நான் ஒன்றுமே இல்லை, என்னுடைய ஜீவியம் முழுவதும், தேவன் எனக்கு அதைக் கொடுத்து, அல்லது அவரால் ஏன் அதைச் செய்ய முடிந்தது என்று என்னிடம் கூறினதைத் தவிர எதற்காகவும் நான் எப்பொழுதாவது உத்தமமாக தேவனிடம் கேட்டிருக்கிறேன். இங்கே உள்ளே இருக்கும் ஒவ்வொரு கிறிஸ்தவனும் அதே காரியத்திற்காகவே சாட்சி கூற முடியும் என்று நம்புகிறேன். நீங்கள் நேர்மையாக இருந்து, தேவனிடம் வருவீர்களானால்... இப்பொழுது, ஏதோவொன்றிற்கு உங்களுக்கு தேவை இருக்கிறது என்று அநேக நேரங்களில் நீங்கள் நினைக்கிறீர்கள். நீங்கள் விரும்புவதை தேவன் கொடுப்பதாக அவர் ஒரு போதும் கூறவில்லை; அவர் உங்களுடைய தேவைகளைக் கொடுக்கிறார். பாருங்கள்-? அது என்னவென்று அவருக்குத் தெரியும். 52. இப்பொழுது, கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. இப்பொழுது, நம்மில் எத்தனை பேர் அங்கே போகிறோம்-?... பில்லி, நீ எங்கேயிருக்கிறாய்-? எப்படி...-? 10-? 10 முதல் 15 வரையில், எண் 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20. சரி, அது நல்லது. இப்பொழுது, அந்தக் குழுவானது அங்கே வெளியேயிருக்கும் போது, இருபது... என்று நம்புகிறேன். நாம் அவர்களை நிற்க வைப்போம். இப்பொழுது, சரியாக இதோ நான் 20-ல் இருந்து துவங்க விரும்புகிறேன், சரியாக இங்கே. சகோதரியே, நீங்கள் 20 தானா-? சரியாக நீங்கள் இருக்கும் இடத்திலேயே நில்லுங்கள். என்ன-? ஆமாம்... நல்லது, பில்லி, அவர்கள் சுவருக்கு எதிராக வரிசையில் நின்று விட்டதாகத் தோன்றுகிறது. அப்படியானால் நான் அவர்களை சரியாக இங்கே வரிசையில் கொண்டு வந்து, அவர்களை வழி நடத்த முடியும் என்று நினைக்கிறேன். அங்கே அதனூடாக உங்களால் நிற்க முடியும் என்று நினைக்கிறீர்களா-? சரி, அதை உங்களுடைய வழியில் கொண்டு இருங்கள். 21, 22, 30 வரையில். சுவரைச் சுற்றிலும் போங்கள். நான்..... 20 முதல் 30 வரை, சரியாகச் சுவரைச் சுற்றிலும். சரி, இன்னும் கூடுதலாக பத்து பேர், சரியாகச் சுவரைச் சுற்றிலும். 30 முதல் 40 வரையில், அவர்களை அடுத்து வரச்செய்யுங்கள், 30 முதல் 40 வரையில் பில்லி, நீ தவறு செய்து கொண்டிருக்கிறாய் என்று நம்புகிறேன். நான் யாரிடமாவது அவர்களுடைய வியாபாரத்தை எப்படி நடத்துவது என்று நான் ஒரு போதும் கூற விரும்பவில்லை, ஆனால் அங்கே உன்னால் வரிசையில் கொண்டு வர முடிவதைக் காட்டிலும் இன்னும் அதிகமானோரைக் கொண்டு இருக்கப் போகிறாய். 53. என்னவென்று நான் உங்களிடம் கூறுவேன். இந்த சீமாட்டி சரியாக இங்கே நிற்கட்டும். சகோதரியே, அங்கே இருக்கும் நீங்கள் தான், இங்கே வெளியே வாருங்கள். சரி. இவர்கள் அவர்களை வரிசையில் கொண்டு வருவது மட்டுமாக நான் காத்துக் கொண்டிருக்க வேண்டியிருக்கும். சரி. இவர்கள் அவர்களை வரிசைப்படுத்திக் கொண்டு இருக்கையில், நாம், "நம்பிடுவாய்” (பாடலைப்) பாடுவோம். நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்-? இப்பொழுது எல்லாரும் ஒருமித்து. நம்பிடுவாய் (நாம் பாடிக்கொண்டிருக்கையில், அதை சிந்தித்துப் பார்ப்போம். அவர் அந்த மலையில் இருந்து இறங்கி வந்து கொண்டிருப்பதை நான் காண்கிறேன்). எல்லாம் கைகூடும், நம்பிடுவாய்; நம்பிடுவாய், நம்பிடுவாய், எல்லாம் கைகூடும், நம்பிடுவாய். இப்பொழுது, நாம் அதை வித்தியாசமாகப் பாடுவோம். இப்பொழுது, நான் ஏற்றுக் கொள்கிறேன். நாம் இதை அவ்விதமாகப் பாடுவோம். நீங்கள் அவ்விதமாக அதை விரும்புகிறீர்களா-? இப்பொழுது, நான் ஏற்றுக் கொள்கிறேன், (கிறிஸ்துவை ஏற்றுக் கொள்கிறேன்) இப்பொழுது, நான் ஏற்றுக்கொள்கிறேன், எல்லாம் கைகூடும், (இப்பொழுது 40 முதல் 50 முடிய, ஜெப அட்டைகள் 40 முதல் 50 வரையில், இங்கே வரிசையில் கொண்டு வாருங்கள்.) இப்பொழுது, நான் ஏற்றுக்கொள்கிறேன், இப்பொழுது, நான் ஏற்றுக்கொள்கிறேன், எல்லாம் கைகூடும், இப்பொழுது, ஏற்றுக்கொள்கிறேன். 54. அந்தப் பாடலை எழுதியவர் யார் என்று எத்தனை பேருக்குத் தெரியும்-? ஒரு மகத்தான சிகாகோ பிரசங்கியாராகிய பால்-ரேடர் தான். அவர் இன்றிரவு மகிமையில் இருக்கிறார். ஒரு தீரமான வீரனைப் போன்று அவர் சென்று இருக்கிறார். அவர் மரிப்பதற்கு முன்பு.... அவர் மரித்துக் கொண்டிருந்த போது, அவர் மருத்துவமனையில் இருக்கிறார் என்று அவர்கள் என்னிடம் கூறினார்கள், அவர் தம்முடைய சகோதரனாகிய லூக்காவை அழைத்தார். அவர், லூக்கா, நாம் நீண்ட தூரமாக (long ways) ஒருமித்து வந்திருக்கிறோம். ஆனால் அதைக் குறித்து சிந்தித்துப் பார்: இப்பொழுதில் இருந்து ஐந்து நிமிடங்களில், நான் இயேசு கிறிஸ்துவின் பிரசன்னத்தில் அவருடைய நீதியை வஸ்திரமாக தரித்து நின்று கொண்டிருப்பேன்," என்றார். ஓ, என்னே. அவர் ஒரு அற்புதமான மனிதராக இருந்தார். தேவன், பால் அவர்களை ஆசீர்வதிப்பாராக. 55. இப்பொழுது, அந்தக் கைக்குட்டைகள் மேல் ஜெபம் ஏறெடுக்க வேண்டுமா-? இப்பொழுது, இங்கே இருக்கும் என்னுடைய நண்பர்களிடம் இதைக் கூற விரும்புகிறேன். நான் ஜெபித்து இருக்கும் ஒரு கைக்குட்டை அல்லது அபிஷேகிக்கப்பட்ட துணிக்காக நீங்கள் எனக்கு எழுதியிருக்கிற நேரங்கள் அங்கே இருந்திருக்கிறது. நீங்கள் அதைப் பெற்றுக்கொள்ளத் தவறி விட்டீர்கள், அல்லது ஒருக்கால் நீங்கள் அதைப் பெற்றுக்கொள்வதற்கு முன்பு நீண்ட காலமாக காத்துக் கொண்டிருந்தீர்கள்.) நான் வழக்கமாக, "ஓரல் ராபர்ட்ஸ் அவர்கள் என்னவொரு புத்திசாலியான மனிதர்,” என்று நினைப்பதுண்டு. அவர் ஒரு புத்திசாலியான மனிதராக இருக்கிறார், அவர் ஒரு அற்புதமான தேவ மனிதர். நான் வழக்கமாக, ஏறக்குறைய 400 அலுவலகங்களைக் கொண்டிருப்பதற்கு அந்த மனிதர் எவ்வளவு புத்திசாலியான மனிதராக இருக்க முடியும். மேலும் இந்த காரியங்கள் எல்லாமும், ஒரு இதழை நடத்துவதும்,” என்று நினைக்கிறேன். நான், அவர் அதை எப்படி செய்கிறார் என்பது எனக்கு விளங்கவில்லை,” என்றேன். சகோதரன் டாமி ஆஸ்பார்ன் அவர்களும் நானும், நான் ஒருவிதத்தில் இப்பொழுது தான் சமூகத்தில் தாழ்ந்த நிலையில் உள்ளவர்களோடு கூட நேரம் செலவழித்து வந்திருக்கிறோம் (slummed along). சற்று கழிந்து, சகோதரன் டாமி ஆஸ்பார்ன் அவர்கள் உயர்ந்த நிலைக்குப் போய் விட்டார். ஏறக்குறைய டாமி ஆஸ்பார்ன் அவர்களோடு கூட, ஏறக்குறைய அவ்வளவு மகத்தான ஒரு அலுவலகத்தையும், இப்பொழுது சகோதரன் ஓரல் பெற்றிருப்பதைப் போன்று காரியங்களையும் (பெற்றிருக்கிறார்.) நான், "சொல்லும், அது எப்படி சம்பவித்தது-? என்றேன். எனக்கு விளங்கவில்லை. அதைச் செய்தது அவர்கள் அல்லவே அல்ல என்றும், அவர்களுக்காக அதைச் செய்யும்படியாக அவர்களைச் சுற்றிலும் யாரோ ஒருவரை அவர்கள் கொண்டு இருந்தார்கள் என்பதையும் கண்டு பிடிக்க நேர்ந்தது. எனவே அது - அது பாரத்தை குறைத்து விட்டது. 56. எனவே, நாங்கள் அதை முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். இந்தத் துணிகளுக்கு - இந்த ஜெபத் துணிகளுக்கும் கடிதங்களுக்கும் அவைகள் எவ்வளவு வேகமாக வருகிறதோ அவ்வளவு வேகமாக நாங்கள் பதிலளிக்கக் கூடிய கட்டத்திற்கு எங்களைச் சுற்றிலும் போதுமானதை நாங்கள் பெற்றுக் கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். அவைகள் ஒரு நாள் வந்து, அடுத்த நாளே வெளியே போகிறது. மேலும் நான் அலுவலகங்களை மாற்றி இருக்கிறேன். நான் ஒரே அலுவலகத்தைக் கொண்டு இருப்பதில்லை. அதே அஞ்சல் பெட்டி (Post Office Box) 325 தான், ஆனால் நான் ஒட்டு மொத்தமாக அழுத்தம் கொடுக்கும் ஒரு புதிய அலுவலகத்தைப் பெற்டு இருக்கிறேன், பதிலளிப்பதற்கும், அஞ்சலோடு வேலை செய்வதற்கும் ஆயத்தமாயிருக்கிற பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்ட ஜனங்களைப் பெற்றிருக்கிறேன். கர்த்தருக்குச் சித்தமானால், வெகு விரைவில், இன்னும் கூடுதலானவற்றிற்குள் நாங்கள் அதை நீட்டிக்கப் போகிறோம், எனவே நாங்கள் தொடர்ந்து மேலும் கூடுதலாக ஊழியம் செய்ய எங்களால் முடியும். மேலும் எனவே… 57. ஆனால் ஒவ்வொரு ஜெபத்துணியும் உள்ளே வைக்கப்பட்டிருக்கிறது என்பதை நாம் காண்கிறோம். நான் அதன் பேரில் ஜெபிக்கிறேன். ஒவ்வொரு ஜெப விண்ணப்பமும் வேண்டுதல் செய்யப்பட்டது; அது உடனடியாக என்னிடம் கொடுக்கப்பட்டது. குறித்த நேரத்திலேயே நாங்கள் அதைப் பெற்றுக் கொள்கிறோம். எனவே, உங்களுக்கு ஜெபமோ, மிக அவசர ஜெபமோ தேவையாய் இருந்து, நான் உங்களுக்காக ஜெபிக்க நீங்கள் விரும்புவீர்களானால், என்னுடைய உத்தியோகஸ்தர் குழுவினர் (staff) உங்களுக்காக ஜெபிக்க நீங்கள் விரும்புவீர்களானால்... உத்தியோகஸ்தர் குழுவினர் மட்டுமல்ல, ஆனால் அவர்கள் அதை என்னிடம் கொண்டு வருகிறார்கள். ஒருக்கால் நான் பதிலளிக்கும் ஆராதனையில் இல்லாமல் போனால், நான் அழைப்பதில்லை.... அது பயபக்தியுடன் எழுதி வைக்கப்பட்டு, எவ்வளவு சீக்கிரமாக அவர்களால், என்னிடம் கொடுக்க முடியுமோ அவ்வளவு விரைவாக என்னிடம் கொடுக்கப்படுகிறது, அவர்களுக்காக ஜெபம் ஏறெடுக்கும்படியாக நான் நேராக செல்கிறேன். சில சமயங்களில், அவர்கள் அதைக் குறித்து தாள்களில் கொண்டு வருகிறார்கள். நான் அதை எடுத்து, என்னுடைய - ஒருக்கால் என்னுடைய நில அறைக்குள் சென்று - அங்கு செல்கிறேன். நான் அங்கே ஒரு - ஒரு குகை அறையைப் போன்றதைக் பெற்று இருக்கிறேன். நான் இவ்விதமாக ஒன்றை என்னுடைய விரலில் எடுத்து, பரிசுத்த ஆவியானவர் அங்கே இருக்கிறார் என்று நான் உணருவது வரையில் ஜெபிக்கத் தொடங்குகிறேன். மேலும் நான், "தேவனே, இதோ சகோதரி சாம் ஜோன்ஸ் இருக்கிறார்கள். அது புற்றுநோயைப் பெற்றிருக்கிறது என்று அவர்கள் இங்கே கூறுகிறார்கள். ஓ, தேவனே, அவர்கள் மரித்துக் கொண்டிருக்கிறார்கள். தயவு செய்து, இயேசுவின் நாமத்தில், என்னுடைய ஜெபத்தைக் கேட்டருளும். இதோ சகோதரர் இன்னார் - இன்னார் இருக்கிறார். அவருக்கு ஒரு கட்டி இருக்கிறது. அவர் ஒரு மருத்துவமனையில் இருக்கிறார். தேவனே, தயவு கூர்ந்து அவரிடம் இருக்கமாயிரும், அவருடைய ஜீவனைக் கொடுத்தருளும்,” என்று கூறுகிறேன். சரியாக கீழே அந்த வரிசையில் இருக்கும் ஒவ்வொருவருக்கும். சகோதரன் மெர்சியர் அவைகளை தட்டச்சு செய்து, அவைகளை சகோ.கோட் அவர்களுக்கு அனுப்புகிறார், அது சரியாக நேராக என்னிடம் வருகிறது)... நான் அவைகளை அங்கிருந்து என்னிடம் தானே கொண்டு வருகிறேன். 58. பாருங்கள், நான் வெளியே சென்று, ஜனங்களோடு சேர்ந்து, அவர்களைச் சந்தித்து, பேசவும், கரங்களைக் குலுக்கவும் விரும்புகிறேன். நான் அதைச் செய்து கொண்டு, அதன்பி றகு இவ்விதமாக ஊழியம் செய்ய முடியாது. புரிகிறதா-? ஆவியின் அபிஷேகம் எங்கே இருக்கிறதோ அங்கே எல்லா நேரமும் நான் தங்கி இருக்க வேண்டும். யுத்தம் முடியும் போது, அப்போது நான் உங்கள் ஒவ்வொருவரோடும் சந்திப்பைச் செய்ய விரும்புகிறேன், ஜீவத் தண்ணீர்களின் நதி அருகில் உட்கார்ந்து, அங்கே மிகவும் ஆர்வத்தோடு அதைப் பேச ஒவ்வொருவரோடும் ஆயிரம் வருடங்கள் சந்திப்பு திட்டத்தைச் செய்ய விரும்புகிறேன். ஆனால் இப்பொழுதோ, நாம் ஊழியம் செய்ய வேண்டியிருக்கிறது. மகத்தான அழுத்தத்தின் நேரம் தொடங்கி விட்டது. நாள் உஷ்ணமாயுள்ளது. நாம் ஊழியம் செய்து, விசுவாசத்தின் போராட்டத்தைப் போராடி, அங்கே ஜனங்களுக்காக, யுத்தத்தில் தரித்திருப்போம். பாருங்கள், அதைத்தான் நாம் செய்தாக வேண்டும். நீங்கள் அனுப்புகிற, உங்களுக்கு அனுப்பப்பட்டிருக்கிற ஒவ்வொரு ஜெபத் துணியும் முற்றிலுமாக (அதற்காக) ஊழியம் செய்யப்படுகிறது. ஜெபத்திற்காக உள்ளே அழைக்கிற ஒவ்வொரு நபருக்கும் ஒன்றன்பின் ஒன்றாக முற்றிலுமாக ஊழியம் செய்யப்படுகிறது. நீங்கள் அதைக் கேட்க விரும்புகிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். அது இதற்கு முன்பிருந்த விதமாக இல்லை. நாங்கள் அப்படியே.... ஓ, எங்களால் முடிந்த சிறந்ததை நாங்கள் செய்ய வேண்டி இருந்தது. ஆனால் இப்பொழுதோ அவை எல்லாம் ஒழுங்குபடுத்தப்பட்டு விட்டது. நாங்கள் நன்றி உள்ளவர்களாய் இருக்கிறோம். 59. இப்பொழுது, அவர்கள். காத்துக் கொண்டிருக்கும் ஜெப வரிசையை அவர்கள் பெற்று இருக்கிறார்கள், அந்தத் துணிகளுக்காக நாம் ஜெபிக்கப் போகிறோம். நீங்கள் எனக்கு உதவி செய்யுங்கள். தேவனுடன் சரியாக இருக்கும் ஜனங்களாகிய நீங்கள், தேவன் என்னுடைய ஜெபத்திற்குப் பதில் அளிப்பதைப் போலவே, அல்லது யாரேனும் ஒருவருடைய ஜெபத்திற்கு அவர் பதிலளிப்பதைப் போலவே, தேவன் உங்களுடைய ஜெபத்திற்கும் பதிலளிப்பார் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். அவர் தம்முடைய பிள்ளைகளுக்குப் பதிலளிப்பார். அவருக்கு எந்த விசேஷமானவர்களும் கிடையாது. இப்பொழுது, ஒரு குறிப்பிட்ட வேலையைச் செய்ய தேவன் ஒருவருக்கு அதைக் கொடுக்கலாம், அவர் யாரோ ஒருவருக்கு மண்வெட்டியைக் கொடுக்கலாம், யாரோ ஒருவருக்கு சுத்தியலை கொடுக்கலாம், யாரோ ஒருவரை தச்சு வேலை செய்பவராகச் செய்யலாம், அல்லது யாரோ ஒருவரை... ஆனால் அவர்கள் எல்லாருமே அவருடைய பிள்ளைகள் தான். எனவே, நாம் ஜெபிப்போம். கர்த்தாவே, நாங்கள், கிறிஸ்துவின் சரீரத்தின் இந்தப் பாகமாக இருக்கையில், இந்தக் கைக்குட்டைகளும், சிறிய பொட்டலங்களும், எண்ணெய் குப்பிகளும், இங்கே உள்ள மற்றவைகளும் பிரதிநிதித்துவப்படுத்துகிற வியாதிப்பட்ட இந்த ஜனங்களுக்காக நாங்கள் உத்தமத்தோடு உம்மிடம் வருகிறோம். மேலும் இப்பொழுது, இங்கே பிரசன்னமாய் இருக்கும் பரிசுத்த ஆவியானவர் தாமே வாக்குத்தத்தம் செய்த தேவனுடைய வார்த்தையின் ஆவியானவர் தாமே, அது தாமே நாங்கள் கொடுத்துக் கொண்டு இருக்கும் இந்த முயற்சிகளை பரிசுத்தப்படுத்துவதாக, இந்தத் துணிகள் ஜனங்கள் மேல் வைக்கப்படும் போது, அல்லது அபிஷேக எண்ணெய் வியாதியஸ்தர் மேல் விழும்போது, உடனடியாக, இயேசு கிறிஸ்து வியாதியஸ்தரோடு செய்து கொண்ட உடன்படிக்கையின் ஆசீர்வாதங்களை அவர்களுக்கு ஊழியம் செய்யும்படியாக தேவ தூதர்கள் தாமே அருகில் நிற்பார்களாக. இதை அருளும், கர்த்தாவே, அவருடைய மகிமைக்காக இதை நாங்கள் கேட்கிறோம், அவருடைய நாமத்தில். ஆமென். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. உட்காரலாம். இப்பொழுது ஆராதனைக்குப் பிறகு உடனடியாக, நீங்கள் அவைகளைப் பெற்றுக் கொள்ளலாம். 60. 50 பேர்கள் முழுவதுமாக வரிசையில் உள்ளனர் என்று நம்புகிறேன். சரி. எத்தனை.... இப்பொழுது, யாருமே... இங்கே இன்னும் ஏதாவது ஜெப அட்டைகள் இருக்கிறதா-? சரி. அப்படியானால் அப்படியே செய்யுங்கள்.... ஜெப அட்டை இல்லாதவர்கள், உங்கள் கரத்தை மேலே உயர்த்துங்கள். அது யாராக இருந்தது-? ஒரு ஜெப அட்டையை வைத்திருக்கிற யாராவது ஒருவர்-? நல்லது, இங்கே இருக்கும் சகோதரனே, சரியாக அங்கே உள்ளே உங்களை நீங்களே எங்காவது இருக்கச் செய்யுங்கள், சகோதரனே. சரி. இப்பொழுது, ஜெப அட்டைகள் இல்லை என்று சொன்னவர்கள், உங்கள் கரங்களை மேலே உயர்த்துங்கள், நீங்கள் வியாதியாய் இருக்கிறீர்கள், தேவன் உங்களைச் சுகப்படுத்த நீங்கள் விரும்புகிறீர்கள். இப்பொழுது, ஞாபகம் கொள்ளுங்கள்... நான் பிரசங்கம் பண்ணுகிற ஒரு சிறு செய்தி என்னிடம் இருந்தது, வீட்டின் மேற் கூரையிலும் அவர் தேவனாக இருக்கிறார்; நிலவறைக்குள்ளும் அவர் தேவனாக இருக்கிறார். சிறைச்சாலை யிலும் அவர் தேவனாக இருக்கிறார்; மருத்துவமனையிலும் அவர் தேவனாக இருக்கிறார். சபையிலும் அவர் தேவனாக இருக்கிறார்; சபை இருக்கையிலும் அவர் தேவனாக இருக்கிறார். அவர் எல்லாவிடங்களிலும் தேவனாக இருக்கிறார்; அவர் தேவனாக இருக்கிறார்." அது சரியே. அவர் தேவனாக இருக்கிறார். அவர் இங்கே எவ்வளவு தேவனாக இருக்கிறாரோ, அல்லது அவர் எவ்வளவாக பரலோகத்திலுள்ள தேவனாக இருக்கிறாரோ அவ்வளவு நீங்கள் இருக்கும் அங்கேயும் தேவனாக இருக்கிறார். அவர் எல்லா இடங்களிலும் எங்கும் பிரசன்னராய் இருக்கிறார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா-? அவர் எல்லாவற்றையும் அறிந்தவராகவும், சர்வவல்லமை உள்ளவராகவும், முடிவு அற்றவராய் இருக்கிறார், அவர் தேவனாக இருக்கிறார். 61. இப்பொழுது, வேதாகமத்தில் ஜெப அட்டையைக் கொண்டிருக்க முடியாத அல்லது ஜெப வரிசையில் வர முடியாதிருந்த ஒரு சிறு பெண்மணி இருந்தாள் என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால் அவள் அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள். உங்களுக்கு அது ஞாபகம் இருக்கிறதா-? அவளுக்கு தேவையான ஜெப அட்டை எல்லாம் அவ்வளவு தான். அந்த விதமான விசுவாசம் இல்லாமல் அவளுக்கு ஒரு ஜெப அட்டை இருந்திருந்தாலும், அவள் ஒரு போதும் சுகமடைந்திருக்க மாட்டாள். ஆனால் ஜெப அட்டை இல்லாமலேயே அவளுக்கு விசுவாசம் இருந்தது. தேவையானது எல்லாம் அவ்வளவு தான். நீங்கள் கொண்டிருக்க வேண்டியது எல்லாம் அவ்வளவு தான். ஒரு ஜெப அட்டை இல்லாமலே விசுவாசம் இருக்கிறதா, அப்பொழுது உங்களால் சுகமடைய முடியும். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா-? தேவன் இன்னும் தேவனாக இருக்கிறார் என்று நீங்கள் அறிந்து கொள்ளட்டும். அவர் அங்கே வெளியிலுள்ள உங்களுக்கும் பதிலளிப்பார். நான் இங்கேயுள்ள கரங்களை தவறவிட்டு விட்டேன். ஒரு ஜெப அட்டை இல்லாமல் இங்கே இருக்கும் எல்லாரும், உங்கள் கரங்களை மேலே உயர்த்துங்கள். இப்பொழுது ஒவ்வொரு பக்கத்திலும் இருக்கிறீர்களா-? அது அப்படியே எல்லாவிடங்களிலும் இருக்கிறது என்று நினைக்கிறேன். எல்லாரும்.... இது ஒரு வியாதிப்பட்ட உலகம், இல்லையா-? ஆனால் பூமியிலேயே மிகவும் வியாதிப்பட்ட சரீரம் யாதென்று உங்களுக்குத் தெரியுமா-? நான் இதை பயபக்தியோடு கூறுகிறேன், புனிதத்துவத்தைப் பாழடிக்கிறவனாக இருக்க வேண்டும் என்றல்ல. நான் தவறானதைக் கூறுகிறேன் என்றால், தேவன் என்னை மன்னிப்பாராக. சுகம் அவசியமாயிருப்பது இயேசு கிறிஸ்துவினுடைய சரீரத்திற்கு தான். அது சகோதர அன்பின் மூலமாக மட்டுமே குணப்படுத்தப்பட முடியும். எனக்குத் தெரிந்த மிகவும் வியாதிப்பட்ட சரீரம் அதுதான், அது முழுவதும் சுக்கு நூறாக நொறுங்கியும், அது சுக்கு நூறாகக் கிழிக்கப்பட்டும் இருக்கிறது. தேவனே, அந்த சரீரத்தின் சுகத்திற்காக நான் ஜெபிக்கிறேன். நீங்கள் அந்த சரீரத்தின் அங்கத்தினர்களாக இருக்கிறீர்கள். எனவே, தேவன் உங்களை சரீரப் பிரகாரமாகவும் ஆவிக்குரிய பிரகாரமாகவும் சுகப்படுத்தி, நீங்கள் எப்படி இருக்க வேண்டுமோ அப்படியாக உங்களை ஆக்குவாராக. இப்பொழுது, இன்றிரவு அவருடைய வஸ்திரத்தைத் தொடுங்கள். அவர் இங்கே எவ்வளவு தேவனாக இருக்கிறாரோ அவ்வளவு தேவனாக அவர் அங்கே வெளியிலும் இருப்பார். 62. இப்பொழுது, எல்லாரும் ஜெப வரிசையில்... என்று நினைக்கிறேன். நான் உங்களிடம் பேச விரும்புகிறேன், ஏனென்றால் இது ஒரு பகுத்தறியும் வரிசை அல்ல; அது ஒரு ஜெப வரிசையாக இருக்கிறது. இப்பொழுது, நான் ஜனங்களை அந்தப் பகுத்தறிதலோடு மிக நெருக்கமாக கவனத்தோடு பார்த்துக் கொண்டு இருக்கிற காரணம் என்னவென்றால்... சில சமயங்களில் வியாதியானது தேவன் தம்முடைய ஜனங்களுக்கு ஒழுக்கத்தைக் கொண்டு வரும்படிக்கு தேவனாலே அனுமதிக்கப்படுகிறது என்பதை வேத வாக்கியத்தை அறிந்திருக்கிற எவரும் அறிவார்கள். அது உங்களுக்குத் தெரியுமா-? அது சரியே. நல்லது, நீங்கள் ஒரு வரத்தை எடுத்துக் கொண்டு தேவன் அவர்கள் மேல் வைத்திருக்கிறதை ஒரு நபரை விட்டு எடுத்துப் போடுவீர்களானால், என்னவாகும்-? அப்படியானால் நீங்கள் தேவனோடு தொல்லைக்குள்ளாகிறீர்கள். அது சரிதானா-? தேவன் ஜெபத்தில் மனிதர்களுக்குக் கொடுக்கிற வல்லமையால் அதைச் செய்ய முடியும் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா-? அது தேவனுடைய சித்தமாக இருக்கிறதோ அல்லது இல்லையோ, அது எப்படியும் அதைச் செய்யும். மோசே அந்தக் கன்மலையை அடித்தான், அது தேவனுடைய சித்தமாக இருக்கவில்லை. தேவனுடைய சித்தமாக இருக்கிறதென்று என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை, ஏனென்றால் எலியா வழுக்கை தலையை உடையவனாய் இருந்தான், அவன் வழுக்கை தலையை உடையவனாய் இருப்பதைக் குறித்து அந்தப் பிள்ளைகள் கேலி செய்து கொண்டிருந்தார்கள், அவன் அந்தப் பிள்ளைகளை சபித்தான், அது 42 சிறு பிள்ளைகள் மரணமடையக் காரணம் ஆயிற்று. அது பரிசுத்த ஆவியாக இருக்க வேண்டுமென்று என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. பாருங்கள்-? ஆனால் அது வெறுமனே அந்தத் தீர்க்கதரிசி கோபம் கொண்டதாகவும், அந்தத் தீர்க்கதரிசியின் வல்லமையாகவும் இருக்கிறது. 63. இப்பொழுது, எனவே, ஜெப வரிசையிலிருக்கும் நீங்கள் எல்லாரும், இதை ஞாபகம் கொள்ளுங்கள்: உங்களுடைய ஜீவியத்தில் அறிக்கை செய்யப்படாத பாவத்தை நீங்கள் கொண்டு இருப்பீர்களானால்... நான் என்னுடைய முழு இருதயத்தோடும் ஜெபிக்கப் போகிறேன். பதில் அளிக்கப்படுவதில் இருந்து தடை செய்யும்படி என்னுடைய ஜீவியத்தில் ஏதாகிலும் இருக்குமானால், எனக்கு அது தெரியாது. இப்பொழுது, நான் ஒரு சுகமளிப்பவன் அல்ல. ஆனால் ஜெபத்திற்கு சில நேரடியான பதில்களை நான் நிச்சயமாகவே உடையவனாய் இருக்கிறேன். அதற்காகத் தான் நான் உங்களுக்காக ஜெபிக்க வருகிறேன், உங்களை சுகமாக்க அல்ல, உங்களுக்காக ஜெபிப்பதற்குத் தான். நான் உங்களுக்காக ஜெபிப்பது போலவே, சுகமாவதற்கு உங்களுக்கு நீங்களே விசுவாசத்தைக் கொண்டிருந்தாக வேண்டும். ஆனால் வேதாகமம், "விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின்தொடரும்: அவர்கள் வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்களானால், அவர்கள் சொஸ்தமாவார்கள்,” என்றார். இப்பொழுது, ஞாபகம் கொள்ளுங்கள். நான் சரியாக இதை உங்களுடைய மடியிலேயே திரும்ப வைக்கிறேன். உங்களுடைய ஜீவியத்தில் அறிக்கை செய்யப்படாத பாவங்கள் உங்களுக்கு இருக்குமானால், இப்பொழுது இந்த வரிசையை விட்டு வெளியே போய் விடுங்கள்; அதை தேவனோடு சரி செய்து கொள்ளுங்கள். நினைவிருக்கட்டும், நான் பொறுப்பல்ல. தேவனே உங்களை நியாயந்தீர்க்கிறார். அறிக்கை செய்யப்படாத பாவத்தோடு நீங்கள் வரிசையின் ஊடாக வந்து, சுகமடைவீர்களானால், அது தேவனுடைய சித்தத்திற்கு மாறாக உள்ளது, அப்படியானால் நீங்கள் அதை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். அது என்னுடைய கரங்களில் இல்லை. நீண்ட காலமாகவே நான் இதைச் செய்ய கர்த்தர் என்னை அனுமதிக்கவில்லை, ஆனால் இப்பொழுது, அவர் எனக்கு அனுமதி கொடுத்திருக்கிறார். எனவே, நான் இதை திரும்ப உங்கள் மேல் வைக்கிறேன். பாருங்கள்-? 64. கூட்டங்களில் (நடப்பது) உங்களில் அநேகருக்கு ஞாபகம் இருக்கும், பரிசுத்த ஆவியானவர் எப்படியாக அந்தப் பாவங்களையும் காரியங்களையும் சத்தம் இடுகிறார் என்றும், மனிதர்கள் ஸ்திரீகளோடு விபச்சாரத்தில் ஜீவித்துக்கொண்டு இருக்கிறதையும், மற்றும் அவர்கள் திருடின காரியங்களையும் நோக்கிச் சத்தம் இடுவதும் உங்களுக்கு நினைவிருக்கும். சபையே, உங்களுக்கு அது ஞாபகம் உள்ளது, உங்கள் எல்லாருக்கும், இல்லையா-? பாருங்கள்-? இப்பொழுது, நாம் இப்பொழுது அதை எடுத்துக் கொள்வதில்லை. எனவே நான் சரியாக உங்கள் மேலேயே அதை திரும்ப வைக்கிறேன். புரிகிறதா-? நீங்கள் அதை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் தொடர்ந்து வாருங்கள். நீங்கள்... நீங்கள் அதைக் குறித்து சரியாக உணரவில்லை என்றால், ஜெபித்து தேவனிடம் கேளுங்கள். அதெல்லாம் சரியாகவே இருக்கிறது என்று அவர் கூறுவாரானால், நீங்கள் இதனூடாக தொடர்ந்து வாருங்கள். ஞாயிறு இரவு, ஐந்தாவது கூட்டத்தில் நாம் மறுபடியும் சந்திக்கும் வரையில், கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக, தேவன் உங்களோடு இருப்பாராக. 65. இப்பொழுது, இங்கே இருக்கும் ஜனங்களோடு இங்கே தொடங்குங்கள். வரிசையிலுள்ள நீங்கள் ஒவ்வொருவரும் அந்நியர்களாயிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். நாம் அந்நியர்களாய் இருக்கிறோம்.... வரிசையிலுள்ள எத்தனை பேர் உங்களைக் குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்றும், உங்களிடம் என்ன தவறாய் உள்ளது என்றோ, அல்லது ஏதோவொன்றோ அல்லது மற்றொன்றோ எனக்குத் தெரியாது என்றும் நினைக்கிறீர்கள், உங்கள் கரத்தை மேலே உயர்த்துங்கள், நான் அந்நியனாயிருக்கும் ஜனங்களாகிய நீங்கள் எல்லாரும். அங்கே வெளியிலுள்ள சபைக்கூட்டத்தினர் எத்தனை பேர் வியாதிப்பட்டவர் களாயும், உங்களைக் குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்றும் அறிந்து இருக்கிறீர்கள்... உங்கள் கரத்தை உயர்த்துங்கள். ஆனால் தேவனுக்கு அது தெரியும், அவருக்கு அது தெரியாதா-? அவர் அனுமதிப்பாரானால், தேவனுடைய சித்தம் செய்யப்படட்டும். இப்பொழுது, துவக்கத்தில், எனவே பரிசுத்த ஆவியானவர் இன்னும் இங்கே இருக்கிறார் என்பதை நீங்கள் காண்பீர்கள். பரிசுத்தாவியானவர் பகுத்தறிதலைக் கொடுக்கிறார். அவர் இன்னும் இங்கே இருக்கிறார். இங்கே இருக்கும் இந்தச் சீமாட்டி, இவர்களிடம் நாம் தொடங்குவோம். 66. இப்பொழுது, சகோதரியே, நான்... நான் உங்களைக் குறித்தோ அல்லது ஏதோவொன்றைக் குறித்தோ உங்களிடம் கூறும்படிக்கு பரிசுத்த ஆவியானவர் என்னை அபிஷேகிப்பாரா என்பது, அது உங்களுக்கு எந்த வித்தியாசத்தையும் உண்டாக்காது. அப்படியே ஜெபம் செய்யும்படியாக, நீங்கள் எப்படியும் அதை விசுவாசிப்பீர்கள். அது சரி தானா-? நான் உங்களுக்காக ஜெபித்தால், நீங்கள் எப்படியும் என்னை விசுவாசிப்பீர்கள். ஆனால் நாம் ஒருவருக்கொருவர் அந்நியர்களாய் இருக்கிறோம் என்று நீங்கள் சற்று முன்பு உங்கள் கரத்தை மேலே உயர்த்தி வைத்திருந்தீர்கள் என்று நம்புகிறேன், ஆனால் தேவனுக்கு நம் இருவரையுமே தெரியும். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்கள். உங்களுக்கு என்ன தொந்தரவு இருக்கிறது என்றோ அல்லது ஏதோ ஓன்றையோ பரிசுத்த ஆவியானவர் என்னிடம் கூறுவாரானால். இங்கே அந்நியர்களாய் இருக்கிறோம். அங்கே அது இருக்கிறதா இல்லையா என்று நாம் கண்டுபிடிப்போம். பாருங்கள்-? இதற்கு முன்பு என்னுடைய கூட்டங்கள் ஒன்றிலும் ஒரு போதும் இருந்திராத அந்நியர்கள் யாராகிலும் இங்கே இருக்கிறார்களா-? உங்கள் கரங்களைப் பார்ப்போம், அவைகளை மேலே உயர்த்துங்கள். நல்லது, என்னே. நிச்சயமாக அங்கே இருக்கிறார்கள். அப்படியானால் ஒருக்கால் நான் இதை சற்று நேரம் விளக்கிக் கூறுகிறேன். 67. பரிசுத்த யோவான் 4-ஐப் பற்றிய ஒரு காட்சி இதோ இருக்கிறது, எனவே நீங்கள் அதைக் காண்பீர்கள். இயேசு ஒரு மனிதராக, தேவன்- மனிதராக இருந்தார், தேவன் அவருக்குள் இருந்தார். அவர் கிணற்றண்டையில் ஒரு ஸ்திரீயைச் சந்தித்தார், அது பரிசுத்த யோவான்-4. மேலும் அவர்கள்... அவள் சமாரிய ஸ்திரீயாக இருந்தாள், அவரோ ஒரு யூதராக இருந்தார். அவர் அவளிடம் குடிக்க தண்ணீர் கேட்டார். மேலும் அவள், யூதர்களாகிய நீங்கள் அப்படி சமாரியர்களிடம் கேட்பது வழக்கமில்லையே," என்றாள். உரையாடல் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. மேலும் இயேசு... அவர் சமாரியா வழியாகப் போவது அவருக்கு அவசியமாய் இருந்ததாக வேதாகமம் கூறுகிறது. பிதாவானவர் அவரை அங்கே மேலே அனுப்பினார், ஏனென்றால்.... இயேசு, "பிதாவானவர் முதலில் எனக்குக் காண்பிக்கும் மட்டுமாக நான் எதையும் செய்வதில்லை” என்று கூறினார் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்-? என்ன செய்ய வேண்டுமென்று அவர் ஒரு தரிசனத்தைக் காணும் மட்டுமாக இயேசு ஒரு போதும் ஒரு காரியத்தையும் செய்யவில்லை. எந்த தீர்க்கதரிசியோ அல்லது வேறு எதுவுமோ, தேவன், அவனுக்குக் காண்பிக்கும் மட்டுமாக..... அது மனிதனல்ல; அது தேவனாக இருக்கிறது, அது ஒரு போதும் மனிதனல்ல; அது தேவனாக இருக்கிறது. 68. எனவே, அவளுடைய தொல்லை என்வென்று அவர் கண்டு பிடிக்கும் மட்டுமாக அவர் அந்தப் பெண்ணிடம் பேசினார். அவளுடைய தொல்லையை அவர் கண்டு பிடித்த போது, அவளுடைய தொல்லையை அவளிடம் கூறினார். இதற்கு முன்பு கூட்டங்களில் ஒன்றில் ஒரு போதும் இருந்திராத அந்நிய ஜனங்கள் எத்தனை பேர் இங்கே இருந்து, அந்தப் பெண்ணின் தொல்லை என்னவென்று அறிந்திருக்கிறீர்கள், உங்கள் கரத்தை உயர்த்துவீர்களா-? நிச்சயமாக, அவள் உடையவளாய் இருந்தாள்... அவள் விபச்சாரத்தில் ஜீவித்துக் கொண்டிருந்தாள். அவள் ஐந்து புருஷர்களை விவாகம் பண்ணியிருந்தாள், அவள் ஆறாவது புருஷனோடும் ஜீவித்துக் கொண்டு இருக்கவில்லை, அப்போது அவளுடைய புருஷன் அல்லாதவனோடு அவள் இருந்தாள். ஆனால் அவளுடைய தொல்லை என்னவென்று இயேசு கண்டு பிடித்து அவளிடம் கூறினார். அவள் என்ன சொன்னாள்-? ஏன், ஐயா, நீர் ஒரு தீர்க்கதரிசி என்று காண்கிறேன். மேசியா வரும் போது, அவர் இவைகளை எங்களுக்குச் சொல்லுவார் என்று நாங்கள் அறிந்து இருக்கிறோம்.” பாருங்கள்-? அது மேசியாவின் அடையாளமாக இருந்தது. பாருங்கள்-? "நீர் நிச்சயமாக ஒரு தீர்க்கதரிசியாக இருக்க வேண்டும். மேசியா வரும் போது, இவைகளை எங்களிடம் கூறுவார் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம், ஏனென்றால்..... 69. மேசியா ஒரு தீர்க்கதரிசியாக இருந்தார் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்-? மோசே அவ்வாறு கூறியிருக்கிறான். உங்கள் தேவனாகிய கர்த்தர் என்னைப் போன்று ஒரு தீர்க்கதரிசியை எழும்பப் பண்ணுவார்." அது சரி தானா-? "இந்தத் தீர்க்கதரிசிக்கு செவி கொடாதவன் எவனோ அவன் ஜனத்தின் மத்தியில் இராதபடிக்கு அறுப்புண்டு போவான்." எனவே அவர் தேவன், தீர்க்கதரிசியாக இருக்க வேண்டும் என்று அவர்கள் அறிந்திருந்தார்கள். அவர் கூறினார். அந்த... "மேசியா வருகிறார் என்று நாங்கள் அறிவோம், அவர் வரும் போது, இவைகளை எங்களிடம் கூறுவார். ஆனால் நீர் யார்-?” அவர், "உன்னுடனே பேசுகிற நானே அவர்,” என்றார். அவள் பட்டணத்திற்கு ஓடி, "நான் செய்தவைகளை எனக்குச் சொன்ன ஒரு மனிதரை வந்து பாருங்கள். இது மேசியா அல்லவா-?” என்றாள். இப்பொழுது, அந்த அதே இயேசு, அவர் தூரமாகப் போன போது, "கொஞ்ச காலத்திலே உலகம் என்னைக் காணாது. இருப்பினும் நீங்கள் என்னைக் காண்பீர்கள், நான் உலகத்தின் முடிவுபரியந்தம் உங்களோடும், உங்களுக்குள்ளும் கூட இருப்பேன். நான் செய்கிற கிரியைகளை நீங்களும் கூட செய்வீர்கள்” என்றார். இக்காரியம் சம்பவிக்கும் என்று அவர் தீர்க்கதரிசனம் உரைத்து இருக்கிறார். 70. அவர் நெருக்கமாக வருகையில், அவருடைய ஆவியானது வந்து கொண்டு இருக்கிறது. கடந்த 40 வருடங்கள், அது அந்த சபைக்குள் அசைவாடிக் கொண்டு இருந்து, ஞானஸ்நானத்தைக் கொடுத்து, அந்நிய பாஷைகளின் வரத்தையும் மற்றும் எல்லாவற்றையும் திரும்ப அளித்துக் கொண்டிருக்கிறது. இப்பொழுது, பவுல் என்ன சொன்னான்-? "ஒருவன் உங்கள் மத்தியில் வரும் போது, நீங்கள் எல்லாரும் அந்நிய பாஷைகளில் பேசிக் கொண்டிருந்து, கல்லாதவன் அங்கே உட்கார்ந்து கொண்டிருப்பான் என்றால், அவன், "ஏன், நீங்கள் நீங்கள் நாகரீகம் இல்லாத காட்டுமிராண்டி,” என்று கூறுவானே. ஆனால் ஒருவன் தீர்க்கதரிசனம் உரைத்து, இருதயத்தின் இரகசியத்தை வெளிப்படுத்து வான் என்றால், அவர்கள் முகங்குப்புற விழுந்து 'தேவன் நிச்சயமாகவே உங்களோடு இருக்கிறார், என்று கூறுவானே என்றான். அது சரிதானா-? எனவே நீங்கள் பாருங்கள், நாம் இப்பொழுது வீட்டிற்கு அருகில் வந்து கொண்டு இருக்கிறோம். மேசியாவானவர் பிரகாசமாக, பிரகாசமாக, பிரகாசமாக, பிரகாசமாக அறியப் பண்ணிக் கொண்டிருக்கிறார். உங்களுடைய நிழல் வருவது போன்று, அது முற்றிலும் நிச்சயமுள்ளதாக ஆகும் வரையில், இன்னும், இன்னும், இன்னும் அதிகமாக வருகிறது. அப்போது தான் கிறிஸ்துவும் அவருடைய மணவாட்டியும் ஒன்றாக இணைகிறார்கள். அப்போது நாம் அவருக்குள் ஒன்றாக இருப்போம். 71. சகோதரியே, உங்களை எனக்குத் தெரியாது, உங்களை என்னுடைய ஜீவியத்தில் ஒரு போதும் கண்டதில்லை. உங்களுடைய பிரச்சனை என்ன என்று, அதை எனக்கு வெளிப்படுத்தும்படியாக நான் ஏதோவொன்றின் மேல் முழுவதுமாக சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது. நான் உங்களை ஒரு போதும் கண்டதில்லை. நாம் கூட்டத்தில் சந்திப்பது இதுவே முதல் முறை. ஆனால், தேவனுக்குத் தெரியும். இப்பொழுது, நீங்கள் நியாயாதிபதியாக இருக்கிறீர்கள். இப்பொழுது, நான் ஓடி வந்து, உங்கள் மேல் கரங்களை வைத்து, ஓ, நீங்கள் வியாதியாயிருக்கிறீர்கள்,” என்று கூறலாம். நீங்கள் வியாதியாயிருக்கிறீர்களா என்று எனக்குத் தெரியாது. பாருங்கள்-? ஆனால் நான், “நீங்கள் வியாதியாய் இருக்கிறீர்கள்,” என்று கூறியிருக்கலாம். அதை நான் ஊகித்து, கர்த்தர் உங்களைச் சுகமாக்கப் போகிறார், ஏனென்றால் நான் உங்கள் மேல் கரங்களை வைத்து விட்டேன்,” என்று கூறலாம். அது உண்மை. அது சரியே. அவர் அதை வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறார். ஆனால் இப்பொழுது, அவர் உங்களுடைய ஜீவியத்தில் திரும்பிச் சென்று, ஏதோவொன்றை உங்களிடம் கூறுவாரானால் என்னவாயிருக்கும்-? ஏற்கனவே சம்பவித்த ஏதோ ஓன்று, அது உண்மையா அல்லது இல்லையா என்பது உங்களுக்குத் தெரியும். என்ன சம்பவித்திருக்கிறது என்று அவருக்குத் தெரியும், என்ன சம்பவிக்கும் என்றும் அவர் உங்களிடம் கூறுவார், அப்படியானால் நிச்சயமாக, நீங்கள் அதில் விசுவாசம் உடையவர்களாய் இருப்பீர்கள், இல்லையா-? நீங்கள் அதை விசுவாசிப்பீர்கள், அல்லது அப்படி செய்திருப்பீர்களா-? நீங்கள் அதை விசுவாசித்டு இருப்பீர்களா-? சரி. நீங்கள் விபச்சாரம் செய்தீர்கள் என்று நான் கூறவில்லை. நான், உங்களிடம் தவறாயுள்ள ஏதோவொன்றை, நீங்கள் இங்கே எதற்காக ஜெபிக்கப்படுவதற்காக இருக்கிறீர்கள் என்பதை தேவன் உங்களுக்குச் சொல்லுவாரானால்...” என்றேன். அதைப்போன்ற ஏதோவொன்று. உங்களிடம் என்ன தவறு இருக்கிறது என்பது எனக்குத் தெரியாது என்பதை நீங்கள் அறிவீர்கள், ஆனால் உங்களிடம் என்ன தவறு இருக்கிறது என்பது தேவனுக்குத் தெரியும். 72. சபையோரில் எத்தனை பேருக்குப் புரிகிறது-? ஜெப வரிசையிலுள்ள எத்தனை பேருக்கு அது புரிகிறது-? சரி. எனவே இந்த சீமாட்டி அப்படியே சரியாகப் புரிந்து கொள்ளாமல் இருப்பார்களானால்-? நான் இப்பெண்மணியை விட்டு சபையோர் இடம் போகிறேன், எனவே நீங்கள் காண்பீர்கள், இந்தப் பெண்மணி புரிந்து கொள்ளட்டும். ஒரு ஜெப அட்டையும் இல்லாமல், வியாதியாக அங்கே வெளியிலிருக்கும் ஒவ்வொரு நபரும், அவர்களிடம் தவறாயுள்ள ஏதோவொன்றைக் கொண்டு இருக்கிற ஒவ்வொரு நபரும், உங்கள் கரத்தை மேலே உயர்த்துங்கள்-? இங்கே... இந்தச் சிறிய வட்டமான தொப்பியை அணிந்தபடி, அவளுடைய வாய் மட்டுமாக கரத்தை மேலே உயர்த்தினபடி இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கும் இந்தச் சீமாட்டியைப் பார்க்கிறீர்களா-? ஆமாம். அவள் இருதயக்கோளாறினால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறாள். அது சரி என்றால், சீமாட்டியே, உன்னுடைய காலூன்றி எழுந்து நில். வீட்டிற்குச் செல். இயேசு கிறிஸ்து உன்னைச் சுகமாக்குகிறார். எனக்கு அவளைத் தெரியாது; நான் என்னுடைய ஜீவியத்தில் ஒரு போதும் அவளைக் கண்டதில்லை. சீமாட்டியே, நாம் ஒருவருக்கொருவர் அந்நியர்களாய் இருக்கிறோம் சரிதானா-? நிச்சயமாகவே நமக்கு ஒருவரை ஒருவர் தெரியாது. நீங்கள் ஒரு ஜெப அட்டையோ அல்லது எதுவுமே இல்லாமல், அங்கே கூட்டத்தினரில் உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள். அது சரிதானா-? இப்பொழுது, நீங்கள் வித்தியாசமாக உணருகிறீர்கள், இல்லையா-? இருதயம் மறுபடியும் இயல்பாக துடிக்கத் தொடங்கி விட்டது. ஏன்-? நீங்கள் எதைத் தொட்டீர்கள்-? நீங்கள் பிரதான ஆசாரியரைத் தொட்டீர்கள்; அவர் இங்கேயிருக்கிறார். நீங்கள் பாருங்கள்-? 73. நான் என்ன கூற கருதுகிறேன் என்று புரிகிறதா-? நீங்கள் அப்படியே விசுவாசத்தைக் கொண்டிருங்கள். இப்பொழுது, நான் என்ன கூறக் கருதுகிறேன் என்று உங்களுக்குப் புரிகிறதா-? நீங்கள் வேறு யாரோ ஒருவரைக் காண விரும்புகிறீர்களா-? அது வெறுமனே ஒரு பொய்யை உண்டாக்கிச் சொன்னேன் என்று நினைக்கிறீர்களா-? கூட்டத்தினரில் உள்ள வேறு யாரோ விசுவாசிக்கிறார்கள். இங்கே... தங்களுடைய கரத்தை மேலே உயர்த்தினபடி இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கும் இந்த சீமாட்டி, அந்தச் சிறு வட்டமான தொப்பியை அணிந்தபடி அவர்கள் அங்கே அமர்ந்திருக்கிறார்கள். அவர்களுக்கும்கூட இருதயக்கோளாறு இருக்கிறது. அவர்கள் அதற்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறார்கள். அது சரியே. அது சரியே. அது சரியானால், உங்களுடைய காலூன்றி எழுந்து நில்லுங்கள் - நீங்கள். சரி. உங்களுடைய இருதயம் மேலானதாக உணருகிறது, இல்லையா. சரி, நீங்கள் சுகமடைந்து விட்டீர்கள். நீங்கள் வீட்டிற்குப் போகலாம். அது அப்படியே இருதயக் கோளாறைக் குறித்ததாக இருப்பதாக நீங்கள் நினைக்கலாம், அங்கே சரியாக அவளுக்குப் பின்னால் உட்கார்ந்து கொண்டு இருக்கும் அந்தப் பெண்மணி உயர் இரத்த அழுத்தத்தினால் அவதிப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். சீமாட்டியே, அது சரி என்றால், உங்களுடைய கால் ஊன்றி எழுந்து நல்லுங்கள். அது சரியே. அவர் அப்படியே உயர் இரத்த அழுத்தத்தை சுகப்படுத்துகிறார் என்று நீங்கள் விசுவாசிப்பீர்களானால், அவளுக்குப் பின்னால் உட்கார்ந்து கொண்டு இருக்கும் சீமாட்டிக்கு இரத்தசோகை இருக்கிறது. அது சரிதானா, சீமாட்டியே, உங்களுடைய காலூன்றி எழுந்து நில்லுங்கள். வீட்டிற்குச் சென்று சுகமடையுங்கள். ஆமென். இயேசு கிறிஸ்துவே தேவனாக இருக்கிறார். பாருங்கள்-? இப்பொழுது, இந்த விதமாகப் பாருங்கள். 74. அந்த சீமாட்டிக்கு புரியவில்லை. ஆனால் கவனியுங்கள், நான் உங்களுக்குக் காண்பிக்கட்டும். இந்த விதமாகக் கவனியுங்கள். நீங்கள் பதட்டமாக இருக்கிறீர்கள். உங்களுக்கு நரம்பு சம்பந்தமான வியாதி உள்ளது. அதோடு கூட நீங்கள் புற்று நோயினாலும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். அந்தப் புற்று நோயானது எலும்பில் உள்ளது. அது சரியே. நீங்கள் இந்த இடத்திலிருந்து வரவில்லை. நீங்கள் இந்தப் பட்டணத்திலிருந்து வரவில்லை. நீங்கள் இந்த மாகாணத்திலிருந்து வரவில்லை. நீங்கள் கென்டக்கி அல்லது டென்னஸியில் இருந்து வருகிறீர்கள். நீங்கள் சரியாக கென்டக்கி மற்றும் டென்னஸியின் வரிசையில் இருக்கிறீர்கள். உங்கள் பெயர் திருமதி.பிலிப்ஸ். அது உங்களைத் திருப்திபடுத்துகிறதா-? இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், இப்பொழுது வீட்டிற்குச் சென்று அதன் பேரில் சுகத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். நம்முடைய தேவனாகிய கர்த்தர், வானங்களையும் பூமியையும் சிருஷ்டித்தவர், எனது சகோதரியிடம் இரக்கமாயிருந்து, இயேசுவின் நாமத்தில் இவளைச் சுகப்படுத்து வாராக... நான் ஒரு வார்த்தையும் கூறாமல் இருந்தாலும், எப்படியும் நீ சுகமடைந்து விட்டாய் என்று விசுவாசிக்கிறாயா-? சரி, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. இப்பொழுது, வீட்டிற்குப் போ. சகோதரியே, நீ விசுவாசிக்கிறாயா-? ஓ தேவனாகிய கர்த்தாவே, வானங்களையும் பூமியையும் சிருஷ்டித்தவரே, இப்பொழுது உமது ஆவியானது முழுவதும் போதுமானதாக இங்கேயிருக்கிறது, உமது அன்பு தாமே இவள் மேல் வந்து, இயேசுவின் நாமத்தில் இவளைச் சுகப்படுத்தும். ஆமென். சரி. நான் உன்னிடம் ஒரு வார்த்தையும் கூறவில்லை, இருப்பினும் நீ சுகம் அடைந்து விடுவாய் என்று விசுவாசிக்கிறாயா-? நல்லது, உன்னுடைய மன அழுத்தம் உன்னை விட்டு போய் விட்டது. நீ சுகமடைந்து விட்டாய்.... நீ தொடர்ந்து போகலாம். நீ விசுவாசத்தைக் கொண்டு இருப்பாய் என்றால், இப்பொழுது விசுவாசி. இப்பொழுது, நான் அந்த ஜனங்களிடம் சொல்லாமல் இருந்தாலும், அது எந்த வித்தியாசத்தையும் உண்டாக்குவதில்லை. அது அப்படியே அதே விதமாக இருக்கிறது. அவர் அதே ஆவியாக இருக்கிறார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா-? நிச்சயமாக. 75. இந்தச் சீமாட்டி. நாம் ஒருவருக்கொருவர் அந்நியர்களாய் இருக்கிறோமா-? இயேசு கிறிஸ்து.... அது இப்பொழுது இங்கே நின்று கொண்டிருக்கும் அவருடைய பிரசன்னம் என்றும், நம்முடைய சரீரங்களை எடுத்துக் கொள்கிறார் என்று நீ விசுவாசிக்கிறாயா-? நீங்கள் கிறிஸ்தவர்களாக இருக்கிறீர்கள். (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசிரியர்.] வீட்டிற்குச் சென்று சுகமாயிருங்கள். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் சுகமடையுங்கள். ஓ தேவனாகிய கர்த்தாவே, வானங்களையும் பூமியையும் சிருஷ்டித்தவரே, இயேசுவின் நாமத்தில் இருதயக் கோளாறை உடைய இந்தப் பெண்மணியைச் சுகப்படுத்தும். ஆமென். சகோதரியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. விசுவாசித்தபடியே செல்லுங்கள். சகோதரியே, வாருங்கள். உன் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா-? சரி. ஸ்திரீகளுக்குரிய கோளாறு உன்னை விட்டுப்போய் விடும், இப்பொழுது, கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில், நீ வீட்டிற்குச் சென்று, சுகமாயிரு. அந்தச் சிறு பையனுக்காக நீ விசுவாசிக்கிறாயா-? கர்த்தாவே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், நான் அவன் மேல் கரங்களை வைக்கிறேன். அவன் சுகமடையட்டும். ஆமென். எங்கள் சகோதரனை தேவன் ஆசீர்வதிப்பாராக, நான் அவன் மேல் கரங்களை வைத்திருக்கிறேன், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், அவன் சுகமடைவானாக. ஆமென். இப்பொழுது, சகோதரியே, நீ ஊனமுற்றவள் என்பதை நாங்கள் எல்லாரும் காண்கிறோம். நீ உள்ளாக நசுக்கப்பட்டிருக்கிறாய் (stoved up). தேவன் உன்னைச் சுகப்படுத்துவார் என்று நீ விசுவாசிக்கிறாயா-? ஓ தேவனாகிய கர்த்தாவே, வானங்களையும் பூமியையும் சிருஷ்டித்தவரே, உமது ஆவியும் இரக்கமும் இந்தப் பெண்ணின் மேல் வந்து, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், இவளைச் சுகப்படுத்தும். ஆமென். இப்பொழுது, போய் அதை விசுவாசி, உன்னுடைய கக்கதண்டத்தை தூர எறிந்து விட்டு, வீட்டிற்குச் செல். 76. சரி. நீ உன்னுடைய முழு இருயத்தோடும் விசுவாசிக்கிறாயா-? நான் இயேசுவின் ஊழியன் என்று நீ விசுவாசிக்கிறாயா-? நீ எதற்காக இங்கே இருக்கிறாய் என்று தேவன் எனக்கு வெளிப்படுத்துவாரானால், உன்னுடைய வியாதியோ அல்லது அது என்னவாக இருந்தாலும், தேவன் உனக்கு வாக்குத் தத்தத்தை அருளுவார் என்று நீ விசுவாசிக்கிறாயா-? சரி. நீ வேறு யாரோ ஒருவருக்காக இங்கே இருக்கிறாய். அது உன்னுடைய கணவன். அவன் சற்று முன்பு தான் மருத்துவமனைக்குச் சென்றான். அவனுடைய நுரையீரலிலும் அவனுடைய எலும்புகளிலும் ஏதோ தவறு இருக்கிறது. அது சரியே. போ, அவர் உன்னைச் சுகப்படுத்துவார். அதை உன்னுடைய முழு இருதயத்தோடும் விசுவாசி. ஓ தேவனாகிய கர்த்தாவே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், தேவனுடைய மகிமைக்காக இந்தப் பிள்ளை சுசுகமடைவதாக. ஆமென். சந்தேகப்படாதே. அதை விசுவாசி. ஓ தேவனாகிய கர்த்தாவே, வானங்களையும் பூமியையும் சிருஷ்டித்தவரே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், இந்தப் பெண்ணிற்கு சுகத்தைக் கொடும். ஆமென். சகோதரியே, விசுவாசி. கர்த்தாவே, வானங்களையும் பூமியையும் சிருஷ்டித்தவரே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இந்தப் பெண்ணிற்கு சுகத்தைக் கொடும். ஆமென். போலியோ நோயுள்ள இந்தச் சிறு பெண் பிள்ளை இங்கே இருப்பதை நாம் காண்கிறோம். கடைசி நபரைப் போன்று ஜெபிக்கப்படும்படியாக அவர்கள் அவளை இங்கே உட்கார வைத்திருக்கிறார்கள். இந்தச் சிறு பெண் பிள்ளையை தேவன் சுகமடைய வைக்கப் போகிறார் என்று இப்பொழுது விசுவாசி. அதை விசுவாசிக்கப் போகிறாயா-? அவளை இங்கே கொண்டு வாருங்கள்... 77. இப்பொழுது, இங்கே இருக்கும் இந்தச் சிறு பெண்பிள்ளை, இதற்கு எந்த பகுத்தறிதலும் இல்லை. இவளுக்கு போலியோ உள்ளது. இவள் பிடிமானத்திற்காக எலும்பியல் சாதனங்களில் (braces) இருக்கிறாள். தேவன் இந்தப் பிள்ளையைச் சுகப்படுத்த வேண்டுமென்று விசுவாசிப்போம். அன்புள்ள பரலோகப் பிதாவே, வானங்களையும் பூமியையும் சிருஷ்டித்தவரே, நித்திய ஜீவனின் ஆக்கியோனே, இந்தப் பிள்ளையின் மேல் உமது ஆசீர்வாதங்களை அனுப்பும், இவள் தேவனுடைய மகிமைக்காக சுகம் அடைவாளாக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், நாங்கள் இதைக் கேட்கிறோம். ஆமென். சந்தேகப்படாதீர்கள். அவள் சுகமடைந்து விடுவாள் என்று விசுவாசியுங்கள், நீங்கள் வேண்டிக் கொண்டதைப் பெற்றுக் கொள்ள உங்களால் முடியும். கவனி...-? சற்று நேரம் தரித்திருக்க நீ விரும்புகிறாயா-? சற்று அங்கேயே உட்காரு, இங்கே பிரசன்னத்தில் தங்கியிரு, எனவே அவளுக்கு என்ன சம்பவிக்கிறது என்று பாருங்கள். சரி. நல்லது, இருதயக்கோளாறு உன்னை விட்டுப் போய் விட்டது என்று நான் ஜெபித்து இருக்கையில், எனவே தொடர்ந்து சென்று சந்தோஷமாயிரு...-? தேவனாகிய கர்த்தாவே... ஓ கர்த்தாவே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நீர் இதை இவனுக்கு கொடுக்க வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். ஆமென். ஓ தேவனாகிய கர்த்தாவே, வானங்களையும் பூமியையும் சிருஷ்டித்தவரே, என்னுடைய சகோதரனுக்கு ஆசீர்வாதங்களை அருளும், அவன் வேண்டிக் கொள்ளும் இதை இயேசுவின் நாமத்தில் அருளும். ஆமென். என்னுடைய சகோதரனே, வாருங்கள். நீர் முடக்கு வாதத்தினால் நடுங்கிக் கொண்டிருக்கிறீர் என்பதை நாங்கள் காண்கிறோம். ஆனால் தேவன் உன்னை சுகப்படுத்துவார் என்று நீர் விசுவாசிக்கிறீரா-? தேவனாகிய கர்த்தாவே, நீர் எங்கள் சகோதரனை சுகப்படுத்தி, இவரை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் சுகமாக்க வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். ஆமென். இப்பொழுது, எல்லாரும் ஜெபத்தில் இருங்கள், ஜெபத்தோடு, காத்துக் கொண்டும், உன்னிப்பாய் கூர்ந்து கவனித்துக் கொண்டும் இருங்கள். 78. சகோதரியே, கர்த்தராகிய இயேசு உன்னைச் சுகப்படுத்த முடியும் என்று இப்பொழுது விசுவாசிக்கிறாயா-? ஓ நித்திய தேவனே, நித்திய ஜீவனின் ஆக்கியோனே, ஒவ்வொரு நல்ல ஈவுகளையும் அருளுபவரே, எங்கள் சகோதரியின் மேல் உமது இரக்கங்களை அனுப்பி, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இவளைச் சுகப்படுத்தும். ஆமென். இப்பொழுது, உன் முழு இருதயத்தோடும் விசுவாசி. பாருங்கள்...-? ஓ, நான் வருந்துகிறேன். சகோதரியே, இங்கே வா. என்ன விஷயம், நீ - நீ - நீ முழுவதும் பதட்டமாக இருக்கிறாய், நீ மனரீதியாக பயந்து நடுங்குகிறாய் (nervousness). உன்னுடைய இயல்பு நிலைக்கு உன்னால் திரும்ப முடியாது என்பது போன்று உணருகிறாய். உன்னுடைய கால் வைக்க ஒரு இடத்தை நீ விரும்புகிறாய். அது இப்பொழுதே சிலுவையில் இருக்கிறது. இப்பொழுது, போக... அது உன்னை விட்டுப் போகும் படி என்னால் செய்ய முடியும் (பார்-?), ஆனால் அது திரும்பி வந்து விடும். இப்பொழுது இந்த பிரசன்னத்தில் இருக்கிற காரணத்தினால், நீ தங்கியிருக்க வேண்டியிருந்தால், அவரால் இங்கே தங்கியிருக்க முடியாது. பார்-? ஆனால் அது திரும்பி வந்து விடும். வீட்டின் நல்ல மனிதனாகிய விசுவாசம் அங்கே இல்லாது இருக்குமானால். நீ துவங்கும்படியான ஒரு இடத்தை விரும்பி இருக்கிறாய்; இப்பொழுது சரியாக இங்கிருந்தே ஆரம்பி. கர்த்தாவே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், இந்தப் பெண்ணின் மேல் தொங்கிக் கொண்டிருக்கும் ஒரு மூடுபனி போன்றுள்ள இந்த இருளின் நிழலே, பதட்டமடையச் செய்கிற பிசாசே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், இந்தப் பெண்ணை விட்டுப்போ. இப்பொழுது, போய், களிகூர்ந்திரு. பார். சந்தோஷமாயிரு. அப்படியே களிகூர்ந்து தேவனுக்கு நன்றி கூறு; அது உன்னை விட்டு போய்விடும். அப்படியே அதை விசுவாசி. 79. சரி. வாருங்கள், சகோதரியே. தேவன் உங்களைச் சுகப்படுத்தவில்லை என்றால், நீங்கள் அறுவைச்சிகிச்சை செய்யப்படப் போகிறீர்கள். ஆனால் நீங்கள் அவரை விசுவாசிப்பீர்களானால், தேவன் அந்தக் கட்டியை வெளியே எடுத்துப் போடுவார். நீங்கள் அவரை விசுவாசிப்பீர்களா-? இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், நீங்கள் சுகமடைவீர்களாக. ஆமென். உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள். இப்பொழுது, நீங்கள் கீல்வாத்தினால் முடமாகிக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் செய்யாவிட்டால், தேவன் உங்களைச் சுகப்படுத்த மாட்டார். கர்த்தராகிய இயேசுவே, கீல்வாதத்தை உடைய இவளை இயேசுவின் நாமத்தில் குணப்படுத்தும். ஆமென். வாருங்கள், சகோதரியே. நீங்கள் விசுவாசிக்கவில்லை என்றால், கீல்வாதம் உங்களிடமும் வந்து விடும். கர்த்தாவே, இந்த முடக்கு வாதத்தை நீர் இவளை விட்டு எடுத்து, கீல்வாதத்தை உடைய இவளை நீர் சுகப்படுத்த வேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் நான் ஜெபிக்கிறேன். ஆமென். இப்பொழுது, விசுவாசித்தபடி செல்லுங்கள். உங்களால் விசுவாசிக்கக் கூடுமானால்... இப்பொழுது அங்கே வெளியேயிருக்கும் நீங்கள் எல்லாரும் விசுவாசிக்கிறீர்களா. அதைப் பெற்றுக் கொள்ள எல்லாரும் ஜெபிக்கிறீர்களா-? எப்படியிருக்கிறீர்கள்-? சற்று கழிந்து கூட்டத்தினரில் ஏதோவொன்று சம்பவித்துக் கொண்டிருக்கிறது. சரியாக இப்பொழுதே என்னால் அதைக் காண முடியவில்லை. ஒருக்கால் அவர் அதை வெளிப்படுத்தவார். அப்படியே தொடர்ந்து ஜெபத்தில் இருங்கள். 80. நாம் ஒருவருக்கொருவர் அந்நியர்களாயிருக்கிறோம் என்று நினைக்கிறேன். இது முதலாவது தடவை சந்திப்பாக இருக்கிறது. ஆனால் நம் இருவரையும் கர்த்தராகிய தேவன் அறிவார். உன்னுடைய கோளாறு என்னவென்று அவரால் என்னிடம் கூறமுடியும் என்று நீ விசுவாசிக்கிறாயா-? உனக்கு இருதயக்கோளாறு இருக்கிறது. நீ ஒரு அறுவை சிகிச்சையை கொண்டிருக்கும்படியாக மருத்துவ மனைக்குப் போக ஆயத்தமாயிருக்கிறாய். உ-ஊ. அது உண்மை. இப்பொழுது நீ என்னை விசுவாசிக்கிறாயா-? நீ இந்தப் பட்டணத்திலிருந்தோ அல்லது இந்த மாகாணத்தில் இருந்துகூட வரவில்லை. நீ வெயினஸ்வில்லில் உள்ள மிசௌரிலிருந்து வருகிறாய். உ-ஊ. உன்னுடைய பெயர் எல்சி. உன்னுடைய கடைசி பெயர் மால்டஸ். இப்பொழுது, வீட்டிற்குச் சென்று இயேசுவின் நாமத்தில் சுகமாயிரு...-! ரோசல்லா, நீ யாரென்று நிச்சயமாகவே எனக்குத் தெரியும்... கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், தேவனுடைய வல்லமை தாமே இவள் மேல் வந்து இறங்குவதாக, ஆமென். அது தான் அது. பரிசுத்த ஆவியானவர்... செய்கையில், உங்களுடைய சுகத்தை பெற்றுக் கொள்ளுங்கள். அதைச் செய்வதற்கான வழி அது தான்... ஸ்தோத்தரிக் கப்பட்ட நித்திய தேவனே, இயேசுவின் நாமத்தில், எங்கள் சகோதரியைச் சுகப்படுத்தும். ஆமென். ஓ கர்த்தாவே, நான் இந்த சீமாட்டியின் மேல் என்னுடைய கரங்களை வைத்து, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இந்தப் பொல்லாங்னை விரட்டியடிக்கிறேன். ஆமென். ஓ கர்த்தாவே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், இந்தப் பெண்மணியின் சுகத்திற்காக நான் வேண்டிக்கொள்ளுகிறேன், இயேசுவின் நாமத்தில் நீர் இவளை முழுவதுமாக சுகப்படுத்தும். ஆமென். கர்த்தாவே, என்னுடைய சகோதரனுக்காக நான் ஜெபிக்கிறேன், நீர் இவனுடைய சரீரத்தையும் கூட தொட்டு இயேசுவின் நாமத்தில் சுகப்படுத்தும். ஆமென். இந்த வாலிபனை தேவன் ஆசீர்வதிப்பாராக எங்களுடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலமாக உம்முடைய பரிசுத்த ஆவியானவர் இவனுடைய இருதயத்தின் வாஞ்சையை இவனுக்கு அருள வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். ஆமென். 81. எங்கள் சகோதரனே, தேவன் இதை ஆசீர்வதிப்பாராக, இவனுடைய கரத்தின் கீழாக வைத்து இருக்கிறான், இந்த வார்த்தையின் ஆக்கியோனாய் இருக்கிற பரலோகத்தின் தேவன் தாமே, இயேசுவின் நாமத்தில் இவனுடைய இருதயத்தின் வாஞ்சையை இவனுக்கு அருளுவாராக. ஆமென். விசுவாசம் கொண்டிருங்கள். சரி, சகோதரியே. உன்னுடைய முதுகுக் கோளாறு போய் விட்டது என்று நீ விசுவாசிக்கிறாய்.... அது உன்னை விட்டுப் போய்விட்டது, எனவே நீ..-?... ஓ தேவனாகிய கர்த்தாவே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், எங்கள் சகோதரியை நீர் சுகப்படுத்தி, இவளை நலமடையச் செய்யும். ஆமென். கர்த்தாவே, இயேசுவின் நாமத்தில், இங்கே இருக்கும் எங்கள் சகோதரியை நீர் சுகப்படுத்தி, இவளை நலமடையச் செய்யும். ஆமென். நீங்கள் வெறுமனே விசுவாசத்தைக் கொண்டு இருப்பீர்களானால்.... அப்படியே-அப்படியே விசுவாசியுங்கள். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் அவ்வளவு தான். ஆசீர்வாதங்கள் அந்தவிதமாக விழுந்து கொண்டிருக்கும் போது, கரத்தை நீட்டி, அதைப் பிடித்துக் கொள்ளுங்கள். உங்களுக்குப் புரிகிறதா-? உங்களுக்காக வெகுமதிகளை, அந்த விதமாக உங்கள் மேல் தெளித்துக் கொண்டிருக்கும் பெரிய அளவில் நிரம்பியுள்ள தம்முடைய தேவ வல்லமையைக் கொண்ட தேவனாக அது இருக்கிறது. எலியேசர், ரெபேக்காளிடத்தில் செய்தது போன்று, அவர் அப்படியே உங்களிடமாக அவைகளை போட்டுக் கொண்டிருக்கிறார், அவருடைய இரக்கத்தின் ஈவுகளையும் ஆசீர்வாதங்களையும் உங்களிடமாக அனுப்பிக் கொண்டிருக்கிறார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா-? சரி. அப்படியே விசுவாசத்தைக் கொண்டிருந்து நம்புங்கள். பகுத்தறிதல் அதைப் பற்ற வைப்பது போன்று தோன்றுகிறது. மேலும் பிறகு, பாருங்கள், உங்களால் எல்லா பகுத்தறிதலையும் கொண்டிருக்க முடியாது. நீங்கள் அவ்வாறு கொண்டிருந்தால், நீங்கள், அவர்கள் எல்லாரையும் கடந்து போக செய்ய மாட்டீர்கள். இந்த வழி சிறந்தது என்று நீங்கள் இதை விரும்பவில்லையா-? ஏன் நிச்சயமாக. ஜெபிக்கப்படும்படியாக எல்லாருக்கும் ஒரு வாய்ப்பை அது கொடுக்கிறது. இப்பொழுது, நீங்கள் ஒவ்வொருவரும் அதேவிதமாக செய்யப்படுவீர்கள். நான் கூறி.... அது ஒவ்வொருவருக்கும் அதே காரியமாகவே இருந்திருக்கும். 82. பாருங்கள், அடுத்து யாரென்று நாம் பார்ப்போம். இந்தப் பெண்மணியா-? அல்லது இங்கே இருக்கும் இந்தப் பெண்மணியா-? நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்-? நாம் ஒருவருக்கொருவர் அந்நியர்களாய் இருக்கிறோம், அப்படித் தானே-? சரி. எனக்கு உங்களைத் தெரியாது, உங்களுக்கும் என்னைத் தெரியாது. ஆனால் உங்களுடைய பிரச்சனை என்னவென்று தேவன் எனக்கு வெளிப்படுத்து வாரானால், நான் அவருடைய ஊழியக்காரன் என்று நீங்கள் என்னை விசுவாசிப்பீர்களா-? தேவனுடைய ஆவி தான் என்னிடம் அதைச் சொல்லிக் கொண்டு இருக்கிறது, அதுவாகத் தான் இருக்க வேண்டும் என்று விசுவாசிக் கிறீர்களா-? உங்களுடைய நுரையீரலிலும், உங்களுடைய மார்பகங்களிலும், உங்களுடைய முதுகிலும் உங்களுக்கு தொந்தரவு உள்ளது. அது சரி தானே-? இப்பொழுது, நீங்கள் நெப்ராஸ்காவிற்குத் திரும்பிச் சென்று சுகமாயிருங்கள். இயேசு கிறிஸ்து உங்களைச் சுகப்படுத்துவார். தேவன் அந்தக் கட்டியை ஒரு அறுவை சிகிச்சையும் இல்லாமலே வெளியே எடுத்துப் போடுவார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா-? சரி, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், தொடர்ந்து போய், அதைப் பெற்றுக்கொள்ளுங்கள். இப்பொழுது, சகோதரனே, அந்தப் பழைய ஆஸ்துமா நோய் பயங்கரமாக மோசமாய் இருக்கிறது. ஆனால் தேவன் உன்னைச் சுகப்டுத்தப் போகிறார் என்று நீ விசுவாசிக்கிறாயா-? இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், பரிசுத்த ஆவியின் வல்லமையின் கீழாகவும் கிறிஸ்துவின் பிரசன்னத்திலும் அது கடிந்து கொள்ளப்படுவதாக, இவன் சுகமடைவானாக. ஆமென், ஆமென். ஓ கர்த்தாவே, வானங்களையும் பூமியையும் சிருஷ்டித்தவரே, இந்த சகோதரனுக்கு சுகத்தைக் கொடும், இயேசுவின் நாமத்தில் அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார். வாருங்கள், சகோதரியே. நீங்கள், மிகவும் பலமாக தோற்றமளித்தும் ஒரு பதட்டமுள்ள நபராக இருக்கிறீர்கள். ஆனால் சில சமயங்களில், நம்முடைய தோற்றங்கள்.... அது வஞ்சித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் தேவன் உங்களை அதிலிருந்து சுகப்படுத்துவார், நீங்கள் அதை விசுவாசிக்கவில்லையா-? ஓ கர்த்தாவே, நீர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எங்கள் சகோதரியை சுகப்படுத்தி, இந்த மன அழுத்தத்தை இவளை விட்டு எடுக்க வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். ஆமென். இப்பொழுது, விசுவாசித்தபடியே போங்கள். அப்படியே விசுவாசத்தைக் கொண்டிருங்கள். 83. என்னுடைய சகோதரனே, நீ விசுவாசிக்கிறாயா-? கர்த்தாவே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், எங்கள் சகோதரன் சென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் முற்றிலுமாக சுகமடைவாராக. ஆமென். தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக, சகோதரனே. சரி, அடுத்தது. அது...-? சரி. சகோதரியே, நாம் ஒருவருக்கொருவர் அந்நியர்களாய் இருக்கிறோம் தானே-? இப்பொழுது ஜெப அட்டைகள் இவ்வளவு தான். இந்தச் சிறு பெண்பிள்ளை- இங்கே இருக்கும் இந்தப் பெண்பிள்ளையை நாம் கறுப்பினத்தவர் என்று இத்தேசத்தில் அழைக்கிறோம். இவளுடைய வீடு.... இவள் எத்தியோப்பிய பெண். இப்பொழுது... ஆப்பிரிக்கா. ஆனால் ஒரு வெள்ளை மனிதனாகவும், ஒரு கறுப்பின பெண்ணாகவும் இருப்பதை நாம் அறிவோம், அது கர்த்தர் கிணற்றண்டையில் அந்தப் பெண்ணை சந்தித்த அதே காட்சியாக இருக்கிறது. அவர்கள் இரு இன ஜனமாக இருந்தார்கள். ஒருத்தி சமாரிய ஸ்திரீயாக இருந்தாள்; ஒருவர் ஒரு யூதராக இருந்தார். ஆனால் தேவனுக்கு தம்முடைய...ல் எந்த நிறமோ, அல்லது எந்த இனமோ இல்லாதிருந்தது என்பதை அவர்கள் மிகத் துரிதமாக அறிந்து கொள்ளும்படி இயேசு அனுமதித்தார்... நாம் எல்லாரும் ஒன்றாய் இருக்கிறோம். நாம் ஆதாமில் இருந்து வந்திருக்கிறோம், நாம் ஒவ்வொருவருமே. நாம் எல்லாரும் தேவனுடைய பிள்ளைகளாய் இருக்கிறோம். நாம் வாழும் தேசம், நம்முடைய தோலின் நிறம்.... வெள்ளை, பழுப்பு, மஞ்சள், கறுப்பு, அது என்னவாக இருந்தாலும், நாம் எல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாய் இருக்கிறோம். நாம் வாழும் இடங்கள் தேவனோடு செய்வதற்கு எதையும் கொண்டு இருக்கவில்லை. தேவன் நம்மை அந்தவிதமாக வைத்திருக்கிறார். நிச்சயமாக அவர்கள் தெற்கில் கொண்டிருக்க முயற்சிப்பது போன்று அந்த நாட்களில் அவர்களுக்கு ஒரு பெரிய இனப்பிரிவினை (segregation) உண்டாயிருந்தது. ஆனால் அவர்கள் அறிந்து கொள்ளும்படி தேவன் அனுமதித்தார். இயேசு எல்லாருக்கும் தேவனாக இருந்தார் என்பதை அவர்கள் அறிந்துகொள்ளும்படி அவர் அனுமதித்தார். அது சரியே. 84. இப்பொழுது, இதோ மறுபடியுமாக சரியாக அந்தக் காட்சி இருக்கிறது, இரண்டு வித்தியாசமான ஜனங்கள், ஒரு மனிதனும், ஒரு பெண்ணும், ஒருவர் ஒருவருக்கு ஓருவர் இனங்களை உடையவர்களாய், ஒருவர் வெள்ளை இனத்தையும், ஒருவர் கறுப்பினத்தையும் உடையவராய் இங்கே நின்று கொண்டிருக்கிறார்கள். நான் இந்தப் பெண்ணை ஒருபோதும் கண்டதில்லை. நாம் ஒருவருக்கொருவர் அந்நியர்களாயிருக்கிறோம் என்று நினைக்கிறேன். அது சரி தானா-? அது சரியென்றால், உன்னுடைய கரத்தை அசைத்துக் காட்டு. அப்படியே உயர்த்து, அப்பொழுது ஜனங்களால் காண முடியும். எனக்கு இவளைத் தெரியாது, நான் இவளை ஒரு போதும் என்னுடைய ஜீவியத்தில் கண்டதில்லை. ஒருக்கால் இவள் எப்பொழுதாவது என்னைக் காண்பது இதுவே முதல் முறையாக இருக்கலாம்... ஆனால் இப்பொழுது, ஒருக்கால் அங்கே ஏதோ தவறாயிருக்கலாம். ஒருக்கால் அவ்வாறு இல்லாமலும் இருக்கலாம். எனக்குத் தெரியாது. ஆனால் உன்னிடம் என்ன தவறு இருக்கிறது என்பதையோ அல்லது நீ உன்னுடைய இருதயத்தில் இருக்கும் ஏதோவொரு இரகசியத்தையோ பரிசுத்த ஆவியானவர் வெளிப்படுத்தி, என்னிடம் கூறுவாரானால், அப்படியே அதை வெளிப்படுத்தி, அதைத் தெரியப்படுத்துவார்; அப்போது அதைச் செய்த ஏதோ ஓன்றாக அது இருந்தது என்பதை நீ அறிந்து கொள்வாய். அது.... என்று நீ விசுவாசிப்பாயா-? கர்த்தராகிய இயேசு அந்த சமாரிய ஸ்திரீயிடம் அதைச் செய்த போது, அவளைப் போன்று நீ செய்வாயா-? அவள் பட்டணத்திற்குள் ஓடிச் சென்று, நான் செய்த அல்லது நான் என்னுடைய இருதயத்தில் சேர்த்து செருகி வைத்திருந்த காரியங்களை என்னிடம் கூறின ஒரு மனிதனை வந்து பாருங்கள். அது மேசியா அல்லவா-?" என்றாள். நல்லது, அது அவருடைய சபையிலும் அதே மேசியாவாக இருக்கிறது, இல்லையா-? நீ அதை விசுவாசிக்கிறாயா-? நீங்கள் எல்லாரும் அதை விசுவாசிப்பீர்களா-? கர்த்தர் தாமே அதை அருளுவாராக. 85. இப்பொழுது, வேகமாக அருகில் வா, எனவே தரிசனம் கலையும் போது (break), ஜனங்களால் அதை தீவிரமாக கேட்க முடியும். இப்பொழுது, நாம் இருவரும் இங்கே இருக்கிறோம், இதற்கு முன்பு நமது ஜீவியங்களில் நாம் ஒரு போதும் சந்தித்தது கிடையாது. இதோ வேதாகமம் இருக்கிறது, இது நாம் சந்திக்கும் முதல் முறையாக இருக்கிறது. இப்பொழுது, இயேசு கிறிஸ்து இன்னும் மேசியாவாக இருந்து, அவர் மரணத்தில் இருந்து உயிர்த்து எழுந்திருப்பாரென்றால், அவர் மரித்தவராக இல்லை; அவர் எப்போதுமே ஜீவிக்கிறார். அவர் சபையோடு கூட இருக்கிறார். அவர் சபையோடு கூட இருக்கிறார் என்றால், இயேசுவின் சரீரமாகிய அவர் வழியாக தேவன் கிரியை செய்த அதே விதமாக அவர் சபை மூலமாகவும் கிரியை செய்வதாக வாக்குப்பண்ணி இருக்கிறார், தேவன் பரிசுத்த ஆவியாகிய அதே ஆவியானவர் மூலமாக சபை வழியாக கிரியை செய்வார். அது சரி தானா-? அதே கிரியைகள். இப்பொழுது, இயேசு கிறிஸ்து ஜீவிக்கிறார் என்பது அறியப்படட்டும். தேவன் இடமிருந்து வருகிற ஒரு வரத்தின் மூலமாக இது இருக்கிறது. 86. இப்பொழுது, இந்தச் சீமாட்டி, இவர்களை நான் ஒரு போதும் கண்டதில்லை. கூட்டத்தினர் சரியாக இப்பொழுதே, இயேசுவை உங்களுடைய - தங்களுடைய சுகமளிப்பவராக ஏற்றுக் கொள்ளும்படி செய்யும் ஏதோ ஓன்றை தேவனாகிய கர்த்தர் என்னிடம் கூறுவாராக. உங்களுக்கு அது தேவை என்றால், அவர் அதே காரியத்தை உங்களுக்கு அருளுவாராக. இப்பொழுது, நீ ஆரோக்கியமும், பலமும், வாலிபமுமான ஒரு பெண்ணாக இருப்பதைப் போன்று காணப்படுகிறது. ஆனால் சில சமயங்களில்... என்னால் காண முடியாதிருந்த ஏதாவொன்று இருக்க வேண்டியிருக்கிறது. ஆவிக்குரிய பிரகாரமாக வெளிப்படுத்தப்பட வேண்டிய ஏதோ ஓன்றாக அது இருக்க வேண்டி இருக்கிறது. ஆனால் நீ அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறாய், நீ ஒரு கட்டியால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறாய். அந்தக் கட்டி எங்கே இருக்கிறது என்று தேவனால் என்னிடம் கூற முடியும் என்று விசுவாசிக்கிறாயா-? அது உன்னுடைய வலது பக்கவாட்டில் இருக்கிறது. அது சரி தான், இல்லையா-? இப்பொழுது, அதே மேசியாவை நீ விசுவாசிக்கிறாயா-? அங்கே வெளியில் இருப்பவர்கள் விசுவாசிக்கிறீர்களா-? நீங்கள், "சகோதரன் பிரன்ஹாமே, நீர் அதை யூகித்திருப்பீர்,” என்று கூறலாம். இவளுக்கு ஒரு அருமையான ஆவி இருக்கிறது. ஆமாம். இவளுடைய இருதயத்தில் ஒரு காரியத்தை நான் காண்கிறேன்; அது ஒரு வாஞ்சையாக இருக்கிறது. அது அற்புதமாக இல்லையா-? நான் அதைச் சரியாக பிடித்து விட்டேன் என்று உனக்குத் தெரியும், இல்லையா-? அது வேறு யாரோ ஒருவருக்கு. அது பக்க வாதத்தினால் மருத்துவமனையில் இருக்கிற உன்னுடைய சிநேகிதியாக அது இருக்கிறது. அது சரி தான், இல்லையா-? நீ யாரென்று தேவன் என்னிடம் கூறுவாரானால், அது அதை உனக்கு தீர்த்து வைக்குமா-? 'உன்னுடைய பெயர் சீமோன், உன்னுடைய தகப்பன் பெயர் யோனா” என்று பேதுருவிடம் கூறின அதே தேவன். ஏன், அது அவனைப் பாதித்தது. ஆனால் உன்னுடைய முதல் பெயர் மாற்றி, உன்னுடைய கடைசி பெயர் ஜோனஸ். அந்த அதே தேவன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், போய், சுகமடை, சகோதரியே 87. கர்த்தராகிய இயேசுவை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா-? அப்படியானால் அவரை விசுவாசிக்கிற எல்லாரும் உங்கள் காலூன்றி எழுந்து நின்று, உங்கள் சுகத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். உங்கள் கரங்களை மேலே உயர்த்துங்கள். இப்பொழுது, நாம் ஜெபிக்கையில், பரலோக தேவனை நோக்கிப் பார்ப்போமாக. ஓ தேவனாகிய கர்த்தாவே, வியாதியஸ்தர்களையும் அல்லல்படுகிறவர்களையும் சுகப்படுத்தும்படியாக இங்கே பிரசன்னராயிருக்கும் வானங்களையும் பூமியையும் சிருஷ்டித்தவரே, இந்த கூட்டத்தார் மேல் உமது வல்லமையையும் உமது ஆசீர்வாதங்களையும் அனுப்பும். ஒவ்வொரு வியாதியையும் ஒவ்வொரு நோயையும் நான் கடிந்து கொள்ளுகிறேன். அது தாமே ஜனங்களை விட்டு விலகிப் போவதாக. சாத்தானே, இயேசுவின் நாமத்தில், வெளியே வா. தேவனுடைய மகிமைக்காக ஜனங்கள் சுகமடைவார்களாக. இப்பொழுது, உங்கள் கரங்களை உயர்த்தி, அவருக்கு துதியைச் செலுத்தி, நீங்கள் சுகமானதற்காக அவருக்கு நன்றி கூறுங்கள், நீங்கள் ஒவ்வொருவரும் சுகமடைவீர்கள்.